Saturday, 9 January 2016

சென்னை -கல்வி சுற்றுலா:1

ஆசையை அடக்க முடியாதே என்ற மொழிக்கேற்ப முதல் சுற்றுலா சென்ற எங்களுக்கு இரண்டாம் சுற்றுலா செல்ல அவா இருந்தது. அதாவது M.Sc 2nd year 1st semesterல் முதல் சுற்றுலா திருச்சி-பெங்களூர்-மைசூர்-ஊட்டி-திருச்சி  காண கண்கொள்ளா காட்சிகள், அருமையான தட்பவெப்ப நிலை, குறிப்பாக நண்பர்களுடனான பயணம், அருமையான தங்கும் விடுதி, மிக சிறப்பான அனுபவங்கள் (அருமையான புகைபடங்கள், 10 ரூபாய்க்கு ரொட்டி 70 ரூபாய்க்கு குருமா, Visvesvaraya museum, Mysore  palace, Zoo, Brindavan garden, Mysore youth hostel, Ooty 7th mile) என்று மிக சிறப்பாக அமைந்தது. 

எண்ணங்கள் செயல்களாகும் என்பதற்கேற்ப M.Sc 2nd year 2nd semesterல் இரண்டு நாள் கல்வி சுற்றுலாவிற்காக துறைத்தலைவர்(HOD) அனுமதியும் பெற்றோம். அனைவரும் வர சம்மதிப்பார்கள் என நாங்கள்(10 பேர்) எடுத்த முடிவு சிறு குழப்பத்தில் முடிந்தது. ஆரம்பம் முதலே மொத்தம் எத்தனை பேர் சுற்றுலாவிற்கு வருவார்கள், எங்கு தங்குவது, எந்த இடங்களை சுற்றி பார்ப்பது என்பதில் முடிவு எட்டப்படாமலேயே இருந்தது. சில மறைமுக பிரச்சனைகளும் இருந்ததை மறுப்பதற்கில்லை. M.Sc Physicsல் Morning, Evening  என இரண்டு Sectionகள் இருந்தன, அதில் Morning section மாணவர்கள் இத்தனை பேர் என்ற இறுதிப்பட்டியல் தயாராகிவிட்டது, நான் Evening sectionஐ சேர்ந்தவன் எங்கள் section list மட்டும் தயாராகவில்லை. 


 

சுற்றுலா செல்ல 2007  February 24 மற்றும் 25 என தேதிகள் முடிவானது  மேலும் அதே தேதியில் Job Fair வருவதால் மாணவர்களின் எண்ணிக்கையில் மீண்டும்  ஒரு பிரச்சனை. அதனால் HODயிடம் சென்று ஒரு வாரம் தள்ளி செல்லலாம் என்று தெரிவித்தால், அவர் "Madras University அனுமதி கொடுத்திருப்பது அந்த தேதிகளுக்கு மட்டுமே அதனால் சென்றால் அந்த தேதி  அல்லது   வேறு வழியே இல்லை"  என்று சொல்லிவிட்டார். எங்கள் நண்பர் ஒருவரின் தந்தை சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன்பு காலமாகிவிட்டார், அவர் மற்றும் job fair செல்ல உள்ள 5 பேர் தவிர  மற்ற  விருப்பமுள்ள  அனைவரும் செல்வதாக முடிவாயிற்று.  ஆசிரியர்களில்  யார்  உடன்  வருவது  மற்றும் பேருந்து  தேடுவது  பணம்  சேகரிப்பதில்  சிறு குழப்பம்  நிலவியது. Evening section மாணவர்கள் எத்தனை பேர் வருவார்கள் என்பதிலும் முடிவு எட்டப்படவில்லை. 

அன்று 20/02/2007 செவ்வாய்கிழமை பையன்களில் 6 பேரும் பெண்பிள்ளைகளில் 15 பேரும் வருவதாக முடிவாயிற்று, அடுத்த நாள் Ash Wednesday என்பதால் கல்லூரி விடுமுறை. மீண்டும் 22/02/2007 அன்று சுற்றுலா வருபவர்களிடம் (evening  section) கையெழுத்து பெற்ற போது வெறும் 5 பையன்கள் மட்டுமே கையெழுத்து போட்டிருந்தோம், 15 பெண்பிள்ளைகளில் ஒருவரும் கையெழுத்து போடவில்லை. இது தெரிந்ததும் ரவிதாஸ் ஐயா சுற்றுலா வேண்டாம் என்று சொல்லிவிட்டார், எங்களுக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. இந்த விஷயம் கல்வி மற்றும் பல்கலைகழகம் சார்ந்தது அனுமதி வாங்கி போகவில்லை என்றால் நமது கல்லூரி நற்பெயர் கெட்டுவிடும் என்று யோசித்த ரவிதாஸ் ஐயா Morning Section மாணவர்கள் மட்டும் ஒரு நாள் சென்று பார்வையிட்டு திரும்புமாறு கூறினார் மேலும்  வருகிறோம் என்று சொன்ன Evening  Section boys 5 பேரையும் சில காரணங்களுக்காக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.



வெள்ளிகிழமை செய்தி அறிந்த HOD மிகவும் வருத்தப்பட்டார். இயற்பியல் துறையில் வியாழக்கிழமை மதியம் முதல் வெள்ளிகிழமை மாலை வரை ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. என்ன நடந்ததோ தெரியவில்லை வெள்ளிக்கிழமை மலை பார்த்தசாரதி (Class Representative ) சென்று Evening  Section மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய போது 15 பெண்பிள்ளைகளும் வருவதாக கையெழுத்து போட்டனர், இப்பொழுது வரை இது ஏன் என்றே புரியவில்லை!!!!!!!!!!!!!!!. வெள்ளிகிழமை மாலையே Evening  Section மாணவர்களும் வருகிறோம் என்று HOD இடம் அனுமதி வாங்கி ஒரு வழியாக 46 பேர் (ஆசிரியர்கள், இரண்டு  Section மாணவர்கள்)செல்வதாக முடிவாயிற்று. 

அன்று மாலையே சுற்றுலா ஏற்பாடு வேலைகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்றது. Water, Medicine purchase, Banner, Audio set,  Accounts and Bus arrangements என்று வேலைகள் பிரித்துகொடுக்கப்பட்டு படு வேகமாக முடிக்கப்பட்டது. நானும் ராஜகோபால் என்ற நண்பனும் முசிறி சென்று பணம் கொடுத்து பேரூந்து எடுத்து வரும் பொறுப்பை ஏற்று கொண்டோம். முசிறியில் பேரூந்தின் முதலாளியிடம் பணம் கொடுத்து விட்டு திருச்சியில் வந்து பேரூந்து அழைத்து கொண்டு கல்லூரி வரும்பொழுது மணி இரவு 11 மணி. 11.45க்கு வண்டி கிளம்பியது. நகரை தாண்டியதும் அமர்க்களம் ஆரம்பமானது. விசில் அடித்துக்கொண்டும், conductor விசில் அடித்துக்கொண்டும் (விசில் அடிக்க தெரியாதவர்கள்), ஆட்டம் பாட்டதுடனும் பயணம் ஆரம்பமானது. ......................

(http://proposals.goeducationaltours.com/wp-content/uploads/2012/10/logo3.png
http://mithibai.ac.in/Department%20of%20Physics/M__471)



கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...