Saturday, 30 September 2017

தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2

''36 வருஷம் பொதுப்பணித் துறையில் பொறியாளரா வேலை பார்த்தேன். அப்போது பல கிராமங்களில் தண்ணீர் தொடர்பான ஆய்வுகளில் எங்கள்  துறை ஆண்டுதோறும் ஈடுபடுவது வழக்கம். அத்தகைய ஆய்வுகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதைக் கண்டுபிடித்தோம். இந்த விஷயம், எதிர்காலத் தண்ணீர் தேவை குறித்து எனக்குள் ஒருவித கேள்வியை எழுப்பவே,  நீர்ச் சேமிப்புப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தேன்.


இதற்காகப் பல ஊர்களுக்கும் சென்றேன். இப்படி நான் செல்வது அலுவலகத்தில் சில சிக்கல்களை உருவாக்கவே, விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு முழுநேரமும் நீர் மேலாண்மைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டும் வேலையையும் தொடர்ந்தேன். அந்த அடிப்படையில், மொட்டை மாடியில் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளேன். இதுவரை 2,014 வீடுகளுக்கு இந்த முறையில் 'மழைநீர் சேமிப்புத் தொட்டி’ அமைத்துக் கொடுத்து இருக்கிறேன்.'சுமார் 80 சதவிகித நோய்கள் தண்ணீர் மூலம்தான் பரவுகிறது’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் குடி தண்ணீரில் 500 மில்லி கிராம் அளவுதான், தாது உப்புகளின் கூட்டுத்தொகை இருக்க வேண்டும். அவைதான் தரமான தண்ணீர் என்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளின் குடி தண்ணீரை ஆய்வு செய்தது. அவற்றில், நம்முடைய தண்ணீருக்கு 120-வது இடம்தான் கிடைத்து இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்த தாது உப்புகளின் கூட்டுத்தொகை ஆயிரத்தைத்  தாண்டியது. நம்முடைய பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்குத் தண்ணீரும் காரணமாக இருக்கிறது. இதுவரையில் நாம், குடிப்பதற்குப் பயன்படுத்திவந்த ஆற்று நீரிலும், குளத்து நீரிலும், கிணற்று நீரிலும் சாக்கடை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து தண்ணீர்  மாசடைந்துவிட்டது. நம்முடைய வருமானத்தில் கணிசமான தொகை, தரமான தண்ணீர் என்ற பெயரில் விற்பனை செய்யும்  மினரல் வாட்டருக்குத்தான் போகிறது. ஆனால், அவற்றில் எந்த  'மினரல்'களும் இல்லை.


இவை அனைத்துக்கும் மாற்று 'மழைநீர் சேமிப்பு’ ஒன்றுதான். மழைநீரில் அனைத்து விதமான மினரல்களும் தேவையான அளவுகளில் இருக்கின்றன. இதற்காகப் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை. வீடுகளில் சின்ன மாற்றம் செய்தாலே போதும். கான்கிரீட் வீடுகள் என்றாலே,  மொட்டை மாடியில் இருந்து மழை நீர் கீழே வருவதற்குக் குழாய்கள் இருக்கும். அந்தக் குழாய் வரும் பகுதியில் உள்ள ஜன்னலின் வெளியே மழை, வெயிலுக்காக அமைக்கப்படும் தடுப்பின் (சன் ஷேட்) மீது ஒரு சிறிய வடித்தொட்டி அமைத்து,  மழை நீரை வடிகட்டினால்,  தூய நீராகக் கிடைத்துவிடும். தூய்மையான இந்த நீரை அடுக்களையிலும்கூட சேமித்துச் சமையல், குடிநீர் என்று எல்லாவற்றுக்கும் பயன்படுத்த முடியும். அடுக்களையில் இருக்கும் டேங்கில் காற்றும் வெளிச்சமும் புகாத அளவுக்கு மூடி வைத்துவிட்டால், அதில் சேமிக்கப்படும் நீர் வருடக் கணக்கானாலும் கெட்டே போகாது. என்னிடம் இருக்கும் மழைநீர் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் கெட்டுப்போகாமல் இருக்கிறது.


அடுக்களைத் தொட்டியின் மேல்புறம் ஒரு குழாயை அமைத்து, அதை ஆழ்துளைக் கிணற்றில்  இணைத்துவிட்டால்,  கூடுதல் நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும். இத்தகைய பரண் சேமிப்புக் கலன் பல்வேறு அளவுகளில் கடைகளிலேயே தயாராகக் கிடைக்கிறது. ஒரு வீட்டுக்கு மொத்தம் 10.000 முதல் 12,000 ரூபாய் செலவு செய்தாலே நான்குபேர் உள்ள குடும்பத்துக்குத் தண்ணீர் போதுமானது. மழைநீரை, பூமிக்கு அடியில் சேகரிக்கும் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்திவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் அணைக்கட்டு அளவிலான நீரைத் தேக்கி வைத்திட முடியும். உபயோகத்துக்குப்போக உபரி நீரைக் கிணற்றிலும் பூமியிலும் சேகரிக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் கூடுவதோடு, தண்ணீரின் கார அமிலத்தன்மையும் மாறிவிடும். நீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் மழை நீரைச் சேமிக்கவேண்டியது அவசியம்'' என்றார் அக்கறையுடன்.

- காசி.வேம்பையன்Friday, 29 September 2017

"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா?" - ஆவாரையின் நன்மைகள்

ஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா!' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் பூவை புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி பொடியாக்கிய துாளை, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், சகல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதனால் தான், இந்த பழமொழி வந்தது. குத்து செடி இனத்தை சேர்ந்த ஆவாரை, 10 அடி உயரம் வரை வளரும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்கு பயன்படக் கூடியவை. ஆனாலும், பூவுக்கு மருத்துவ குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை என, பல உணவு வகைகளை செய்து சாப்பிடலாம்.சோர்வு நீங்க:
மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டு, கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி, மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில், கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரை, சூடான பாலில் கலந்து, 48 நாட்கள் குடித்து வந்தால், நோய் அனைத்தும் நீங்கி, புதுத்தெம்பு கிடைக்கும்.

சர்க்கரை பிரச்சனைக்கு:
சர்க்கரை நோய் பாதித்தவர்கள், ஆவாரம்பூ பொடியை சூடான பாலில் கலந்து, காலை, மாலை என தொடர்ந்து அருந்தி வந்தால், சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர, மற்றவர்கள், ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு:
ஆவாரம்பூ அல்லது அதன் பொடியை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அதனுடன் பால் சேர்த்து குடித்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களை, கறிக்கூட்டாக செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

மிருதுவான சருமத்திற்கு:
பாசிபருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக்கிழங்கு மற்றும் கஸ்துாரி மஞ்சளுடன், சம அளவு ஆவாரம்பூ, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைக்க வேண்டும். சோப்புக்கு பதில் இந்த மூலிகை கலவையை தேய்த்து குளிப்பதால், சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன், சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளி மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

தசை பிசகுதல், மூட்டு நழுவுதல்:
பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்து, தயிர், நாட்டு கோழி முட்டையின் வெள்ளைக் கரு, பொடியாக்கிய கறுப்பு உளுந்து, இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து, தசை பிசகுதல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்கு பற்று போட்டு வந்தால், பலன் கிடைக்கும்; விலகிய மூட்டை சரி செய்து, அதன் மீது பற்று போட வேண்டும்.

பற்கள் பிரச்சனைக்கு:
ஆவாரம் பட்டையை நன்றாக காய வைத்து இடித்து பொடியாக்கி, சலித்து கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவு பொடியை, நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து, ஒரு டம்ளராக வற்றுமாறு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி, இளஞ்சூட்டுடன் வாய் கொப்பளித்து வந்தால், பல் இறுகி கெட்டிப்படும். மேலும், ஆடிக் கொண்டிருந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால், இந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன், பற்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து

ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்
ஆவாரம் பூ மருத்துவ குணம்

Sunday, 24 September 2017

நவோதயா பள்ளிகளின் சிறப்புகள்:

: நாட்டின் முதல் நவோதயா பள்ளியின்முதலாவது முதல்வராக பணியாற்றியவர்.

ஜவஹர் நவோதயா பள்ளியின் தோற்றம் :

 • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் கனவுத் திட்டமான நவோதயா பள்ளியை அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் தொடங்கி வைத்தார்.
 • டூன் பள்ளியில் படித்த ராஜீவ்காந்தி அவர்கள் அதுபோன்ற உறைவிடப் பள்ளியை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்; அதில் கிராமப்புற ஏழை மாணவர்களைப் படிக்கவைக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவின் விளைவாகத் தோன்றியதுதான் ஜவஹர் நவோதயா பள்ளிகள்.
(டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளி( The Doon School): தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் என பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி)
 • நாட்டின் முதல் ஜவஹர் நவோதயா பள்ளி மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 1986-ல் தொடங்கப்பட்டது.
 • இன்று தமிழகத்தை தவிர, நாடு முழுவதும் சுமார் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன.இட ஒதுக்கீடு மற்றும் பயிற்று மொழி:
 • நவோதயா பள்ளிகளில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 33 சதவீதம், எஸ்.சி. - 15 சதவீதம், எஸ்.டி. - 7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3.5 சதவீதம் என இட ஒதுக்கீடு உண்டு.
 • 6 முதல் 12-ம் வகுப்பு வரை உணவு, விடுதி வசதி, சீருடை, புத்தகங்கள் என அனைத்தும் இலவசம்.
 • 6-ம் வகுப்பில் சேர வேண்டுமானால், 5-ம் வகுப்பு வரை எந்த பயிற்றுமொழியில் படித்தார்களோ, அந்த மொழியிலேயே நுழைவுத்தேர்வு எழுதலாம்.
 • நவோதயா பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. 2-வது மொழிப் பாடமாக அந்தந்த மாநில மொழிகள் இருக்கும்.
 • புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கிறது. அங்குகூட இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம்கூட இல்லை. எந்த பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடையாது.

தேசிய ஒருமைப்பாடு:
 • 9-ம் வகுப்பு மாணவர்களை வேறு மாநிலத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றுவார்கள். அவர்கள் அந்த ஓராண்டு முழுவதும் அங்கு படிப்பார்கள். தேசிய ஒருமைப்பாட்டை மாணவர்கள் உணர்வதற்காக இந்த ஏற்பாடு.
 • நவோதயா என்பது மாதிரி பள்ளிகளாகும். இப்பள்ளி மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

இப்படி நாடு முழுவதும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய பல வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவேதான், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளேன். 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது வழங்கியிருக்கிறது.

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து
ராஜீவ்காந்தியின் கனவு திட்டம்..: நவோதயா பள்ளியால் நாடு முழுவதும் தமிழ் வளரும் 

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  

Wednesday, 13 September 2017

பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS):

பள்ளிக்கு போகாமலே, 'பாஸ்' ஆகும், மாற்று முறை கல்வி குறித்து கூறும், பிரதீப் - பாலகார்த்திகா தம்பதி:

இன்றைய கல்வி முறை, மனப்பாடத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையாக மாறி விட்டது. பல பள்ளிகளில் பாடங்களைச் சரிவர நடத்தாமலே, கேள்வி-- பதில்களை மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெற வைக்கின்றனர். விளையாட்டு, வேடிக்கை எதுவும், இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இல்லை. எங்கள் குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்ற, நாங்கள் விரும்பவில்லை. எனவே, மத்திய அரசின் மனிதவள துறையின் கீழ் இயங்கும், தன்னாட்சி பெற்ற நிறுவனமான, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தில் சேர்த்து உள்ளோம். (National Institute of Open Schooling)

 • இங்கு, ஆரம்ப, அடிப்படை கல்வி, 8ம் வகுப்புக்கு சமமானது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை, வீட்டில் இருந்தவாறே படிக்கலாம். 
 • இதில், நமக்கு பிடித்த பாடங்களை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. 
 • 10ம் வகுப்பிலேயே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி முதலான, 17 மொழிகளில் விருப்பப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மொழிகளை தேர்வு செய்யலாம். 
 • கணிதம், அறிவியல், பொருளியல், வணிகவியல், ஓவியம், கணக்குப் பதிவியல் போன்ற, 11 பாடங்களில், 3 - 5 வரை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
 • மேல்நிலையில் ஒன்பது மொழிகளும், 33 பாடத் துறைகளும் உள்ளன.
 • உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில், நம் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில், 5 - 7 பாடங்களில் தேர்வு எழுதலாம்.

என் மகனுக்கு கணக்கு, அறிவியலில் மிகவும் ஆர்வம்; வரலாறு என்றாலே வேப்பங்காய். இப்போது அவன் கணிதம், அறிவியலுடன், உளவியல் அல்லது வணிகவியல் படிக்கலாம் என்றதும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
அடுத்ததாக, இந்த முறை படிப்பால் நேரம், தாங்கள் விரும்பியவற்றை கற்கும் வசதியும், சுதந்திரமும் இருக்கிறது.  

 • இந்திய மெடிக்கல் கவுன்சில், ஐ.ஐ.டி., முதலான பொறியியல் கல்லுாரிகளுக்கான குழுமம், அனைத்துப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அங்கீகாரம் பெற்ற அமைப்பு இது (NIOS). 
 • எனவே, இங்கு, 10ம் வகுப்பு முடித்தவர்கள், எந்த மாநிலத்தில் உள்ள பள்ளியிலும், பிளஸ் 1 சேர முடியும்.மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த விருப்ப பாடத்திற்கேற்ப, மருத்துவமோ, பொறியியலோ, வணிகவியல் சார்ந்த படிப்புகளையோ தொடர முடியும்.  

இந்தாண்டு, சென்னையில் இருந்து, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர் தான். தங்கள் பிள்ளைகளுக்கு சமூகத்தில் பழக வாய்ப்பு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. நான், வீட்டில் இருந்தபடியே செய்யும், 'வெப் - டிசைனிங்' வேலையையும், என் மனைவி, வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதால், எங்கள் குழந்தைகளை வீட்டில் இருந்தே படிக்க வைக்க முடிவு செய்தோம்.

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று, தனிமையில் இருக்க நேரும் குழந்தைகளுக்கு, இந்த முறை கொஞ்சம் கடினம் தான். இல்லையெனில், இதற்காக தனி வகுப்புகள் ஏற்பாடு செய்ய நேரிடும்.எங்கள் மூத்த மகள் பள்ளியில், 10ம் வகுப்பு முடித்து, இப்போது வீட்டில் இருந்தே மேல்நிலை வகுப்பைத் தொடர்கிறார். 6ம் வகுப்பை முடித்த இளைய மகனை, நேரடியாக, 10ம் வகுப்பு எழுத, வீட்டிலேயே தயார் செய்து வருகிறோம்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  

Friday, 8 September 2017

மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 1

"நாங்கல்லாம் பாத்தா பிடிக்கிற பசங்க இல்ல பாக்க பாக்க பிடிக்கிற பசங்க" என்ற படிக்காதவன் தனுஷ் வசனம் போல் இல்லாமல், முதல் முறை கேட்டஉடனேயே பசக் என்று மனதில் ஒட்டிக் கொண்ட இசை, எப்போது எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் / இசை இங்கு பட்டியலில்.

1) சைனீஸ் பாடல்:

சின்ன குழந்தை வாயில் சாப்பாட்டை வைத்து  கொண்டு  பேசுவதை போலவும், பிறர் பேசுவதை பார்த்து "சங் ஹொங் ஹொங் யாங் ஹொனிங் ஆஆஆஆ" என்று பேச முயற்சிப்பதை  போலவும் பாடல் புரியாத பாஷையில் இருந்தாலும் கேட்க இதமாக இருக்கும்.  இயற்கையை பற்றிய பாடல் என்று நினைக்கிறேன், பட காட்சிகளும் குரலும் அருமை.
 2) மேற்கத்திய இசை:

 Backstreet boys மற்றும் Adele அவர்களின் இந்த பாடல்கள் என்று கேட்டாலும் திகட்டாதவை.
3) The Piano Guys இசை:

Adele அவர்களின் Rolling in The Deep பாடலே பியானோ guys இவர்களின் இசையை கேட்ட பிறகுதான் தெரியவந்தது. Cello மற்றும் Pianoவில் பல்வேறு இயற்கையான சூழல்களில்  இவர்கள் வாசிக்கும் அழகே தனி. பாடலை வரிகளின்றி இசை வடிவில் கேட்பது பாடலின் இன்னொரு கோணத்தை காட்டுவது போல் உள்ளது.4) பஞ்சரத்ன கீர்த்தனை:

பஞ்சரத்ன கீர்த்தனையில் அனைத்துமே பிடிக்கும் என்றாலும் முதலில் அதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமூட்டிய பாடல் என்றால் அது "எந்தரோ மஹானுபாவுலு"  பாடல் தான். மோகன்லாலின் தேவதூதன் என்ற படத்தில் வரும் இந்த பாடல் இதோ.5) தமிழ்ப் பாடல்:

ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் ஆரம்பமாகும் ஆஆஆ ஆஆஆ  அந்த வரிகளை கேட்ட மாத்திரத்தில் இந்த பாடலில் கரைந்து விடாதவர்களும் உண்டோ. மற்றொன்று சேதுபதி படத்தில் வரும் "கொஞ்சி பேசிட வேணா" பாடல். இதிலும் துவக்கத்தில் வரும் அந்த இசை இருக்கே simply superb, அப்படியே பாடலினுள்  இழுத்துச் சென்றுவிடும்.


 

6) Aashiqui 2 பாடல்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிந்தியில் பிடித்த பாடல். அனைத்து பாடல்களும் பிடிக்கும் என்றாலும் இந்த பாடல்தான் சிறப்பு. நடிப்பு மற்றும் பாடல் என ஒரு கலக்கு கலக்கிய படம்.
Tuesday, 5 September 2017

திடக்கழிவு மேலாண்மை: (Reduce, Reuse, Recycle) -- மீள்பதிவு

மீபத்தில் குவஹாத்தியில் முனிசிபாலிட்டி குப்பை கொட்டும் பகுதிக்கு (GMC Dumping Site) முதல் முறையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்து. நகரத்திலிருந்து 25 km தொலைவில் இருக்கிறது, அந்த பகுதியில் இருந்த ஈரநிலத்தை(wetland) அழித்து அந்த இடம் உருவாக்கப்பட்டிருந்தது.  நகரத்தில் சேகரமாகும் குப்பைகளை அள்ளிக்கொண்டுவந்து குவியலாக கொட்டிவிடுவது. அங்கு பார்த்த காட்சிகள், அனுபவங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கமே இந்த பதிவு. இந்த பிரபஞ்சமே ஒரு முழுமை; அதாவது எற்றம் இறக்கம், இன்பம் துன்பம், இரவு பகல் இருப்பது போல ஒரு இடம் தூய்மையாக இருந்தால் ஒரு இடம் அசுத்தமாக இருக்கும். அந்த விதியை உடைத்து அப்படி ஒரு இடம் இல்லாமல் செய்தால் தான் வருங்கால சந்ததிகள் நன்றாக வாழ்ந்து அவர்களின் சந்ததிகளுக்கு ஒரு நல்ல இடத்தை வாழ்வதற்கு விட்டு செல்வார்கள்.


பழைய குப்பை குவியல்கள்


புதிய குப்பை கொட்டப்படும் இடம்  கொட்டப்படும் குப்பையில் உள்ள மறு சுழற்சி பொருட்களை எடுக்கும் மக்கள்
                                                                                                                                                                     
முதலில் குப்பை வகைகளை தெரிந்து கொள்வது நல்லது

மட்கும் குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின் உயிரினங்களால் சிதைக்கப்பட்டு மட்கி மண்ணோடு மண்ணாகும் பொருட்கள் அனைத்தும் மட்கும் குப்பையே. 
உதாரணம்: உணவு & காய்கறி கழிவுகள், பருத்தி துணி, மர பொருட்கள், காகிதம், காகித அட்டைப்பெட்டி, இரும்பு, மற்றும் பல.....

மட்காத குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின்னர் மண்ணால் அரிக்கபடாமல், மண்ணில் உள்ள உயிரினங்களால் சிதைக்கபடமுடியாமல் உள்ள பொருட்களே மட்காத குப்பை.     
உதாரணம்: Polythene, glass, rubber(sandals, shoes), plastic(chair, bottle caps,etc..), wrappers and covers of eatables (chocolate cover, oil cover, milk cover, tooth paste cover,etc..), Electrical and electronic waste (bulbs, phone, computer, etc..), tin (perfume tin, beverage tins,etc..),ballpoint pens, tooth brush, water bottles, tires, chemical waste(automobile batteries, watch & calculator battery ), etc...

இந்த மட்கும் மட்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து முக்கியமாக பாலிதீன் பைகளில் போடாமல் நேரடியாக குப்பைதொட்டிகளில் போடுவது மக்களாகிய நமது சமுதாய கடமை. குப்பைகளை ஒரே இடத்தில கொட்டுவதால் என்ன கெடுதல்? குப்பைகள் குவித்து ஒரே இடத்தில் கொட்டுவதால் அதன் மட்கும் தன்மை மட்டுபடுத்தப்படுகிறது. காற்றோட்டம் இருந்தால் தான் குப்பைகள் எளிதில் மட்கும்.மேலும் ஈர தன்மை அதிகமுள்ள கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் பல பொருட்களுடன் கலந்து துர்நாற்றத்தை வெளியேற்றுகிறது. இதனால் தொற்று நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதனால் சுவாச கோளாறு, சரும கோளாறு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். மழைக்காலங்களில் இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் கழுநீரானது (Leachate) நிலத்தடி நீர், ஏரி, குளம் மற்றும் ஆற்று நீரில் கலக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் நீர் மாசுபடுத்தப்படும் விதத்தை கீழே உள்ள படத்தில் காணலாம் .
(கழிவு நீரினால் நிலத்தடி நீர், ஏரி, கிணறு  மாசுபடும் விதம்)

தற்போதுள்ள குப்பை மேலாண்மை திட்டம் ஒரு பார்வை: 

முதல் இரண்டு வருடங்களுக்கு குப்பைகள் குவியலாக மட்டுமே கொட்டப்படும் அதை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு மூன்று வருடம் கழித்து மட்கிய குப்பைகள் குப்பை குவியலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு விற்கபடுகிறது. பிறகு புதியதாக சேகரமாகும் குப்பைகள் தனி ஒரு இடத்தில் கொட்டப்படும். இவ்வாறாக சுழற்சி முறையில் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவெனில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதை விட குப்பைகள் சேகரமாகும் வேகம் அதிகம் காரணம் மக்கள் தொகை பெருக்கம். சில இடங்களில் தனியார் நிறுவனங்களும் சில இடங்களில் அரசும் இந்த மட்கிய குப்பைகளை பிறத்து விற்கும் பணியை செய்கின்றன.


நாம் செய்ய வேண்டிய கடமைகள்:  

இதை அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம். இந்த பிரச்சனையின் வேர் வரை சென்று முளையிலேயே சரி செய்தால் தான் நம் வருங்கால தலைமுறை நம்மை பார்த்து அக்கறையுடன் செயல்படுவார்கள்.
REDUCE:(குறைத்துகொள்ளுதல்):நாம் பயன்படுத்தும் வேண்டாத பொருட்களை, அத்தியாவசியமில்லாத பொருட்களை குறைத்து  கொள்வது பாலிதீன் பைகளை அறவே தவிர்ப்பது நல்லது.
REUSE:(மறுஉபயோகம்):உபயோகித்த பொருட்களை மறுபடியும் உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது சிறந்தது. ஒரு முறை உபயோகம் (use and throw) தவிர்ப்பது நல்லது.
RECYCLE: (மறுசுழற்சி):மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை குப்பையில் எறியாமல் கடைகளில் கொடுப்பது நன்று. (பிளாஸ்டிக், இரும்பு, அலுமினிய பொருட்கள், அட்டைபெட்டி, காகிதம்)
இந்த முறைகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்தி குப்பையின் அளவை நம்மால் குறைக்க முடியும். இந்த வழியில் குழந்தைகளையும் ஈடுபடுத்துதல் நல்ல மாற்றத்தை கொண்டுவரும், ஏனெனில் எதிர்காலம் அவர்களுடையது. இந்த Waste management பற்றிய மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட வலைதலதளம் மற்றும் காணொளியை    பாருங்கள். குறிப்பாக ஆமீர்கான் அவர்களின் த்தியமேவ ஜெயதே நிகழ்ச்சி மிகுந்த உபயோகமுள்ளதாய் இருக்கும.
 
https://www.youtube.com/watch?v=qimRK2Wzhuw 
(Satyamev Jayate Season 2 | FULL Episode # 3 | Don't Waste your Garbage - Tamil )

விவசாயத்தை லாபகரமாக்கலாம்!

வெளிநாட்டு வேலை:

வெளிநாட்டு வேலையை உதறி, விவசாயம் செய்து லாபம் ஈட்டி வரும் வீரமணி: புதுக்கோட்டை, விராலிமலை அருகே, மீளவேலி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, நான்காண்டுகள் இங்கும், சிங்கப்பூரில் இரு ஆண்டுகளும் வேலை பார்த்தேன்; நல்ல வருமானம் கிடைத்தது. விவசாயிகளின் நிலை, மனதை பாதித்தது. வெளிநாட்டில், 14 மணி நேரம் வேலை பார்ப்பது போல, நம் ஊரில் வேலை பார்த்தால், விவசாயத்திலும் மாற்றத்தை உருவாக்க முடியும் என, தோன்றியது.


உறுதியான முடிவு:

ஊர் திரும்பி, வீட்டில் கூறியதும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எங்கள் நிலத்தில், யூகாலிப்டஸ் மரம் பயிர் செய்திருந்தனர்; அது, மண்ணுக்கும், சூழலுக்கும் கெடுதல் தரக்கூடியது. விவசாயம் பார்க்க ஆரம்பித்ததும் அதை அழித்து, எலுமிச்சை பயிர் செய்தேன். அப்புறம், நிலத்தின் தன்மை, மண் வளத்தை கண்டறிந்து, ஆலோசனை பெற்று, கத்தரி, தக்காளி, வெண்டை, நெல் என, மாற்று பயிரிடல் முறையில் தொடர்ச்சியாக செய்து வருகிறேன். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. மேலும், தினசரி வருமானத்திற்காக கீரையும், நீண்ட நாள் பயிர்களான தென்னை, வாழை; தண்ணீர் வசதி இல்லாத வறட்சி காலங்களில், கள்ளிச் செடி, கற்றாழை என, பயிர் செய்வேன். வேலிக்கு பதிலாக தேக்கு, தென்னை வைத்துள்ளேன். இவ்வாறு சிறு முயற்சிகள் கூட வீண் போகாமல், வருமானத்தை கொடுக்கிறது.

சந்தைபடுத்துதல்: 

விவசாயம் லாபகரமாக இருக்க காரணம், என் தோட்டத்தில் விளையும் பொருட்களை வியாபாரிகளிடம் கொடுக்காமல், நேரடியாக சந்தைப்படுத்துவது தான். விவசாயம் எனில், நெல் தான் என இல்லை. காலத்திற்கேற்ப மாற்று விவசாயம் பண்ணலாம். நல்ல மழை பெய்தால் நெல், மழை குறைவாக இருந்தால் கம்பு, கேழ்வரகு, சோளம் போடுவேன். விவசாயம் செய்யும் போது, அது ஒருங்கிணைந்த பண்ணையாக இருந்தால், இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால், ஆடு, மாடு, கோழி வளர்க்கிறேன். அதன் மூலம் மண்ணுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது; வருமானமும் வருகிறது. விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்பதே, என் நோக்கம். அதன் மூலமாக, இதை முன்மாதிரி பண்ணையாக்கி,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


அரசு இயந்திரம் உதவினால்.........:

விவசாயம் நஷ்டமடைய, விவசாயத்துறை அதிகாரிகளும் முக்கிய காரணம். அரசிடம் நிறைய விவசாயம் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும், அது மக்களுக்கு தெரிவதே இல்லை அல்லது தெரிவதற்குள் கால அவகாசம் முடிந்து போகிறது. இப்போது நான், மாட்டுக்கு தீவனத்துக்காக விண்ணப்பித்துள்ளேன். அதற்கு சரியான பதில் கொடுக்காமல் அலைய விடுகின்றனர்.
படிப்பறிவு உள்ள என்னால் தேட முடியும், அலைய முடியும். வயதான, படிக்காத விவசாயிகள் என்ன செய்வர். இது போன்ற சிக்கல்களை தீர்க்க, அரசு முன்வந்தால் தான், விவசாயத்தை லாபகரமாக மாற்ற முடியும்.நிம்மதியான இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, கண்டிப்பாக விவசாயம் கொடுக்கும். விவசாயி என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

---தினமலர் நாளிதழிலிருந்து.Friday, 1 September 2017

மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!

வனத்தை உருவாக்குவதற்கு மியவாக்கி என்றொரு முறை இருக்கிறது. குறைந்த இடத்தில் அடர்வனத்தை (Thick forest) உருவாக்குகிற முறை இது. அகிரா மியவாக்கி (Akira Miyawaki) என்றொரு ஜப்பானியரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இத்தகைய காடுகள் ஜப்பானில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.  தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.  


இம்முறையில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டிக் காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியாவாக்கி. இவர் கண்டறிந்த முறை என்பதால், இவருடைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2006-ம் ஆண்டு ‘புளூ பிளானெட் விருது' (Blue Planet Prize) கொடுத்து கௌரவித்திருக்கிறது சர்வதேசச் சுற்றுச்சூழல் அமைப்பு.

இந்த முறையோட சிறப்பு என்னன்னா, பத்து வருஷத்துல ஒரு மரத்துக்கு என்ன வளர்ச்சி கிடைக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும்னு ஆய்வு முடிவுகள் சொல்லுது. ஆழமான குழிகளை எடுத்து அதில் கழிவுகளைப்போட்டு, நெருக்கமா செடிகளை நட்டுட்டாப் போதும். ஒளிச்சேர்க்கைக்காகச் சூரிய ஒளியைத் தேடிச் செடிகள் வேகமா வளர்ந்திடும். ஆழமான குழியில செடியை நடவு செய்றதால வேர் வேகமா கீழே இறங்கி, நல்லா நங்கூரம் பாய்ச்சி நின்னுக்குது. மியவாக்கியின் அறிவுரைப்படி செடிகளை நட்ட பிறகு முதல் மூன்று வருடங்களுக்குச் செடிகளை நீருற்றி பராமரிக்க வேண்டும். அதன்பிறகு அவை வனமாகிவிடும்.

வியக்க வைக்கும் மியாவாக்கி

குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள்.

1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள்.

பூமியில் வெப்பம் குறையும்.

காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.

பறவைகளுக்கு வாழிடம் உருவாகும்.

பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.

மூலம் :

And into the Forest I go, to lose my Mind and find my Soul

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற