உயர்கல்வி தேர்வு (choice): கவனிக்க வேண்டியவை 🤔
1) உயர்கல்வி வேலைக்கு பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் திருமணத்திற்கு அது ஒரு அடிப்படை தகுதி, ஆண் பெண் இருவருக்குமே. அதனால் குறைந்தபட்ச கல்லூரி பட்டம் அவசியம். குடும்ப சூழ்நிலையால் கல்லூரி சென்று படிக்க முடியவில்லையெனில் தொலைதூர கல்வி / பகுதி நேர கல்வி வாயிலாக பட்டம் பெறலாம்.
2) படிப்பில் அளவற்ற ஆர்வம் என்றால் வயது தடை இல்லை. இல்லையெனில் 23 முதல் 26 வயதுக்குள் கல்வியை முடித்து வேலையில் சேரும்படியான படிப்பை தேர்ந்தெடுப்பது நல்லது.
3) வீட்டின் பொருளாதார நிலை என்ன? எவ்வளவுக்கெவ்வளவு சுய சார்போடு / குறைந்த கடன் பெற்று பெற்றோர்களால் படிக்க வைக்க முடியும்? நமக்கு பின் எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்? நம்மை சார்ந்துதான் குடும்பம் உள்ளதா?
4) கணிதம் அவசியமான ஒரு பாடம் எங்கு சென்றாலும் அதை நாம் எதிர்கொண்டாக வேண்டும். ஆகவே கணிதத்தில் ஆர்வமும் நல்ல மதிப்பெண்ணும் உள்ளவர்கள் பொறியியல் படிப்பை தாராளமாக தேர்வு செய்யலாம். இல்லையெனில் பொறியியல் படிப்பை கடைசி தேர்வாக(choice) வைப்பது நல்லது. ஒரு பாடம் பிடிப்பதும் பிடிக்காததும் ஆசிரியர் நடத்தும் விதத்திலும் உள்ளது, பள்ளி வரை பிடிக்காத சில பாடங்கள் கல்லூரியில் பிடிக்க வாய்ப்புள்ளது.
5) நம்மை பற்றி நாம் சரியான புரிதல்களுடன் இருப்பது அவசியம் அதாவது நமக்கு என்ன வரும்? என்ன வராது? நமது பலம் பலவீனம் என்ன? எளிதாக வரும் விஷயங்கள் என்ன? சுட்டு போட்டாலும் வராத விஷயங்கள் என்ன? மிரட்டி உருட்டினால் செய்யும் விஷயங்கள் என்ன? இது போல.
கல்வி பிரிவுகளும் வேலை வாய்ப்புகளும்: (+2 விற்கு பிறகு)
3 வருட (B.A / B.Sc / BCA / BBA) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- Government Sector :
- Private Sector :
- Postgraduate studies:
- Self employment:
2 வருட (M.A / M.Sc / MBA) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- HR jobs, Sales & Marketing.
- M.Phil, PhD (after GATE / CSIR-NET/ UGC-NET Exam) with 25,000 - 28,000 rupees stipend per month for 5 years.
- Private / govt College Lecturer (with CSIR-NET)
- Self employment (Coaching job in Coaching centers), etc...
- Higher studies in foreign universities (after SAT, MCAT, LSAT, GMAT, GRE, IELTS and TOEFL exams)
- Journalism / Media
- Software/ BPO/Coding/App developer/Software testing/Debugging/Hardware & Software Analyst, etc...
5 வருட (PhD) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- Scientist (in ISRO / DRDO / CSIR labs)
- PDF (Post Doctoral Fellowship) in Foreign & India for 2-5 years. Salary varies from 45,000 - 1,50,000.
- Teaching in private / govt Colleges (Engg. as well as Arts & Science) and private / govt Universities.
- Teaching in Foreign colleges.
- R&D jobs in private / govt Companies.
4 வருட (B.E / B.Tech) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- Government Sector :
- Private Sector :
- Postgraduate studies:
- Self employment:
2 வருட (M.E / M.Tech / MBA) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- PhD (after GATE Exam) with 25,000 - 28,000 rupees stipend per month for 5 years.
- Higher studies in foreign universities (after one of these exams SAT, MCAT, LSAT, GMAT, GRE, IELTS and TOEFL).
- Core company jobs / Management jobs.
- TRB Exam (for Asst professor in Govt Polytechnic and Engg. colleges).
- Teaching in private Engg Colleges.
5 வருட (PhD) படிப்பிற்க்கு பிறகு உள்ள வாய்ப்புகள்:
- Scientist (in ISRO / DRDO / CSIR labs)
- PDF (Post Doctoral Fellowship) in Foreign & India for 2-5 years. Salary varies from 45,000 - 1,50,000. After PDF we can return to teaching job or scientist or we can be an Entrepreneur.
- Teaching in private / govt Colleges (Engg. as well as Arts & Science) and private / govt Universities.
- Teaching in Foreign colleges.
- R&D jobs in private / govt Companies.
தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள்
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும்
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று
WHAT AFTER 10 & 12?
No comments:
Post a Comment