Sunday, 18 June 2017

10 பயனுள்ள இலவச மென்பொருள் / வலைதளம்

ன்றைய அன்றாட வேலைகளில் கணிப்பொறியின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது, அத்தகைய சூழலில் சிறு சிறு வேலைகளுக்கு கூட நாம் Internet center சென்று பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு word document  to  PDF file ஆக மாற்றுவது, PDF fileன் size குறைப்பது (compress), Antivirus software வாங்குதல், video and audio file editing, தமிழ் typewriting போன்றவை. இந்த செயல்களுக்கு இலவசமாகவே மென்பொருளும் உள்ளது மற்றும் இணையதளமும் உள்ளது.

1) தமிழ் தட்டச்சு:

OFFLINE:  தமிழில் தட்டச்சு செய்ய Azhagi என்ற மென்பொருள் கிடைக்கின்றது, இது transliteration முறையில் செயல்படுகிறது.  http://www.azhagi.com/ONLINE: இணையதளத்தில் தட்டச்சு செய்ய Quillpad,Google உள்ளீட்டு கருவி

2) Word document to  PDF file conversion offline:

CutePDF என்ற மென்பொருள் இதற்கு பயன்படுகிறது, இந்த இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் Download cutePDF from FileHippo . சில சமயங்களில் Word document ஐ printout எடுக்கும்போது word fileன் அமைப்பு முழுவதுமாக மாறிவிடும் அதுபோன்ற சமயங்களில் word file ஐ PDF file ஆக மாற்றி printout எடுத்தால் எந்த பிச்னையும் இருக்காது. 

3) PDF document compression online :

இணையதளத்தில் ஏதேனும் விண்ணப்பிக்கும் சமயத்தில் சில கோப்புகளை (Photo, mark sheet, resume,...) பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும் அதுவும் குறைந்த அளவில். நம்மிடம் உள்ள கோப்பு பெரிய அளவில் (large file size) இருந்தால் பதிவேற்றம் செய்ய இயலாது. 

உதாரணமாக 100kb size உடைய file தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனும் போது நம்மிடம் உள்ள file 150kb size இருந்தால்.......அது போன்ற சமயங்களில் நமது கோப்பின் அளவை குறைக்க pdfcompressor பயன்படுத்தலாம்.

4) File format conversion online:

தரவுகளை பல்வேறு வகையான வடிவங்களில் (image, document, மற்றும் audio, video) நமது தேவைக்கு ஏற்ப சேமித்து வைக்கலாம். 

Image format         : png, jpeg, tiff, gif,....,etc
Document format    : doc, docx, pdf, djvu, pub, ppt, xlsx,....,etc
Audio format          : mp3, wma,....,etc
Video format          :3gp, avi, flv, wmv, mp4, mpeg,.....,etc
Compressed format : rar, zip,....,etc

மேலுள்ள format களில் ஒரு format ன் உட்பிரிவில் உள்ள எந்த வடிவத்தையும் எதற்கும் மாற்றலாம். உதாரணமாக நாம் ஒரு புகைப்படத்தை jpeg என்ற வடிவத்தில் வைத்திருக்கிறோம் ஆனால சில இடங்களில் அதனை பார்க்க முடியாது tiff வடிவத்தில்தான் பார்க்க முடியும். அதாவது Photo.jpeg -----> Photo.tiff என்று மாற்றித்தான் பார்க்க முடியும். இதுபோன்ற வடிவ மாற்றத்திற்கு zamzar


5) இலவச மென்பொருள் பதிவிறக்க:

Browser, media player, drivers,.... போன்ற category களில் உள்ள இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்ய filehippo.

6)  ஒலிப்பதிவு மற்றும் திருத்தம: (multi-track recording and editing

சிறிது கடினமான மென்பொருள், ஒலிப்பதிவும் செய்யலாம் பாடல்களில் திருத்தமும் செய்யலாம்Audacity

7) Video cutter and joiner

மிக எளிமையான video editing மென்பொருள் Free Video Cutter Joiner.

8) Plot Digitizer:

நம்மிடம் ஒரு ஸ்கேன் செய்யப்பட்ட வரைபடமோ (graph) அல்லது செயல்பாட்டு தரவு (functional data) இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதிலிருந்து தரவுகளை எடுக்க அற்புதமான மென்பொருள் Plot Digitizer

9) ஆங்கில அகராதி: மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள ஆங்கில அகராதி மென்பொருள் WordWeb

10) Antivirus: Microsoft நிறுவனமே இலவசமாக இந்த  Microsoft security essentials
ஐ கொடுக்கிறது, ஆனால் நம்முடைய இயங்குதளம் அசலாக இருக்க வேண்டும் (Operating system should be Genuine not pirtaed)

கொசுறு:

1) UBUNTU/FEDORA: Windows Operating System க்கு மாற்றாக பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படும் மாற்று Operating Systemமே இந்த ubuntu/fedora, Linux Operating System வகையை  சார்ந்தது.

சாதகம்: இலவசமானது, Virus பிரச்னை அறவே இல்லை, எளிதில் நிறுவி விட முடியும், இயக்குவதும் சுலபம், Windows Operating System உடன் இதையும் சேர்த்து நிறுவி கொள்ளலாம் (Dual operating system).

பாதகம்: புது புது பயன்பாடுகள் நிறுவுவது (கண்டிப்பாக இணைய  வசதி தேவை), சிறிது முன் அனுபவம் வேண்டும்.
Ubuntu is an open source software operating system 
Fedora is an Unix-like operating system based on the Linux kernel and GNU programs 

2) rufus: இது USB drive/pen drive களை bootable device ஆக மாற்ற பயன்படும் ஒரு மென்பொருள். 

கணினியில் ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது ஒரு Operating System ஐயோ நிறுவ CD/DVD தேவைப்படும். அப்படி இல்லாமல் pen drive ஐ கொண்டு நிறுவுவது மிகவும் எளிதான வழி, அதற்க்கு இது உதவுகிறது.
Rufus is a utility that helps format and create bootable USB flash drives, such as USB keys/pendrives, memory sticks, etc.
 

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டணமில்லா Open Source மென்பொருளுக்கான பிரத்யேக இணையதளம் 
 
OPENSOURCE.COM 

இதுபோன்று கணிணி சம்பந்தமான தகவல்களுக்கு மிகவும் பயனுள்ள தமிழ் வலைதளம்
 
    

No comments:

Post a Comment

கடந்த ஏழு(7) நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற