Friday 30 June 2017

பிளாஸ்டிக் அரிசி............வதந்தியோ?


'பிளாஸ்டிக்' அரிசியின் பின்னணி குறித்து கூறும், வேளாண் வல்லுனர், அரச்சலுார் செல்வம்: 

பிளாஸ்டிக் அரிசி பற்றி நாம் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் சந்தையில் வாங்கி சாப்பிடும் பளபளப்பான அரிசிகள் அத்தனையுமே நல்ல அரிசிகள் இல்லை.பளபளப்பாகவும், வெண்மையாகவும் நாம் அரிசி கேட்கிறோம். நம்முடைய இந்த ஆசையைப் பயன்படுத்தி, பல ரசாயன மேற்பூச்சுக்களை பூசி பளபளப்பாகவும், வெண்மையாகவும் அரிசியை விற்கின்றனர்.

இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வளவு அதிகமாக, தினசரி உணவில் அரிசியை உட்கொள்ளவில்லை. விழாக்கால உணவாக மட்டுமே, அரிசி இருந்தது. பசுமைப் புரட்சிக்கு பின் தான், தினமும் மூன்று வேளையும் அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது. அதன் பின், சரிவிகித உணவே இல்லாமல் போய் விட்டது. இதனால் தான், நோய்களும் அதிகமானது. அரிசியை பட்டை தீட்டாமல், பழுப்பு அரிசியாக சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால், நாம் வெண்மையான அரிசியை விரும்புவதால், பட்டை தீட்டி தருகின்றனர். இதனால், வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே சாப்பிடுகிறோம். இதே நிலை தான், சர்க்கரையிலும் நடக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் தான், இன்று பிளாஸ்டிக் அரிசி வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.


எண்ணெய்:
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கடுகு எண்ணெயில் கலப்படம் காரணமாக, 18 பேர் இறந்ததாக செய்தி வந்தது. அதன் பின், உபரியாக எண்ணெய் விற்க கட்டுப்பாடுகள் அதிகமாகி, செக்கில் எண்ணெய் ஆட்ட, விற்க கெடுபிடிகள் வந்தன. இதன் காரணமாக பல லட்சம் செக்கு தொழில் செய்வோர், வேலை இழந்தனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, 'ரிபைண்ட்' செய்யப்பட்ட எண்ணெய் தான் சுத்தமானது, சுகாதாரமானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதன்பின் தான் தெரிந்தது, ரிபைண்ட் எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனம் செய்த, 'லாபி' என்று.

உப்பு:
இதுபோலவே தான், உப்புக்கும் நடந்தது. அயோடின் உப்பு தான் சிறந்தது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக பெரிய உணவு அரசியல் செய்யப்பட்டு, சிறிய உப்பு வியாபாரிகள் அழித்தொழிக்கப் பட்டனர்.

அரிசி:
இதுபோலவே பிளாஸ்டிக் அரிசி போன்ற பீதியை உருவாக்கி, 'நாங்கள் சுத்தமான அரிசியை தருகிறோம்' என, அரிசி சந்தையை கைப்பற்றத் தான், இந்த வதந்தியோ என்று அச்சப்படாமலும் இருக்க முடியவில்லை; மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம் பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கி, பட்டை தீட்டாமல் சாப்பிட வேண்டும். அருகாமையில் சிறிய கடையில் பொருட்களை வாங்க, பழக வேண்டும் அல்லது நேரடியாக விளைவிப்பவர்களிடம் வாங்கலாம். 


வெண்மையாக இருக்கும் பொருள் தான் சுத்தமானது, பெரிய நிறுவனத்தின் பொருள் தான் தரமானது என்ற மனநிலையை விட வேண்டும்.

----தினமலர் நாளிதழிலிருந்து


மக்கள் தான்விழிப்புடன்இருக்க வேண்டும்!

'பிளாஸ்டிக்' அரிசியின் பின்னணி குறித்து கூறும், வேளாண் வல்லுனர், அரச்சலுார் செல்வம்: பிளாஸ்டிக் அரிசி பற்றி நாம் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் சந்தையில் வாங்கி சாப்பிடும் பளபளப்பான அரிசிகள் அத்தனையுமே நல்ல அரிசிகள் இல்லை.பளபளப்பாகவும், வெண்மையாகவும் நாம் அரிசி கேட்கிறோம். நம்முடைய இந்த ஆசையைப் பயன்படுத்தி, பல ரசாயன மேற்பூச்சுக்களை பூசி பளபளப்பாகவும், வெண்மையாகவும் அரிசியை விற்கின்றனர்.
இந்தியாவில், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வளவு அதிகமாக, தினசரி உணவில் அரிசியை உட்கொள்ளவில்லை. விழாக்கால உணவாக மட்டுமே, அரிசி இருந்தது. பசுமைப் புரட்சிக்கு பின் தான், தினமும் மூன்று வேளையும் அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது. அதன் பின், சரிவிகித உணவே இல்லாமல் போய் விட்டது. இதனால் தான், நோய்களும் அதிகமானது.
அரிசியை பட்டை தீட்டாமல், பழுப்பு அரிசியாக சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால், நாம் வெண்மையான அரிசியை விரும்புவதால், பட்டை தீட்டி தருகின்றனர். இதனால், வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே சாப்பிடுகிறோம். இதே நிலை தான், சர்க்கரையிலும் நடக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் தான், இன்று பிளாஸ்டிக் அரிசி வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், கடுகு எண்ணெயில் கலப்படம் காரணமாக, 18 பேர் இறந்ததாக செய்தி வந்தது. அதன் பின், உபரியாக எண்ணெய் விற்க கட்டுப்பாடுகள் அதிகமாகி, செக்கில் எண்ணெய் ஆட்ட, விற்க கெடுபிடிகள் வந்தன. இதன் காரணமாக பல லட்சம் செக்கு தொழில் செய்வோர், வேலை இழந்தனர்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, 'ரிபைண்ட்' செய்யப்பட்ட எண்ணெய் தான் சுத்தமானது, சுகாதாரமானது என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. அதன்பின் தான் தெரிந்தது, ரிபைண்ட் எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனம் செய்த, 'லாபி' என்று.இதுபோலவே தான், உப்புக்கும் நடந்தது. அயோடின் உப்பு தான் சிறந்தது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக பெரிய உணவு அரசியல் செய்யப்பட்டு, சிறிய உப்பு வியாபாரிகள் அழித்தொழிக்கப் பட்டனர்.இதுபோலவே பிளாஸ்டிக் அரிசி போன்ற பீதியை உருவாக்கி, 'நாங்கள் சுத்தமான அரிசியை தருகிறோம்' என, அரிசி சந்தையை கைப்பற்றத் தான், இந்த வதந்தியோ என்று அச்சப்படாமலும் இருக்க முடியவில்லை; மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம் பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கி, பட்டை தீட்டாமல் சாப்பிட வேண்டும். அருகாமையில் சிறிய கடையில் பொருட்களை வாங்க, பழக வேண்டும் அல்லது நேரடியாக விளைவிப்பவர்களிடம் வாங்கலாம்.
வெண்மையாக இருக்கும் பொருள் தான் சுத்தமானது, பெரிய நிறுவனத்தின் பொருள் தான் தரமானது என்ற மனநிலையை விட வேண்டும்.

2 comments:

  1. நல்ல பதிவு ! நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும் பின்னூட்டதிற்க்கும் நன்றி ரமேஷ் அவர்களே. பாராட்டுகள் தினமலருக்கு உரியவை.

    ReplyDelete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...