Monday 24 October 2016

ஒன்றா? இரண்டா? தேர்ந்தெடுங்கள்......

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இரண்டு கஷ்டங்களில் ஒன்றை அனுபவித்தே ஆக வேண்டும்.

1) ஒன்று நல்ல விளைவுகளுக்கான முறையான, ஒரு காலந்தவராத தொடர் உழைப்பு.

2) சோம்பலும் ஒழுங்கில்லாத கட்டுப்பாடில்லாத வாழ்க்கை மூலம் பிற்காலத்தில் பெறும் கஷ்டங்கள்.

இந்த இரண்டில் முதலாவது கஷ்டம் சிறியது. இரண்டாவது கஷ்டமோ பல மடங்கு கொடியது. சுருங்க சொல்வதானால் கஷ்ட்டப்பட்டு முன்னேறுவது  அல்லது பின்னேறி கஷ்ட்டப்பட்டுக்கொண்டே இருப்பது. இது பணத்திற்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல சுக வாழ்வு, பழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் பொருந்த கூடியது.

(தனி) ஒருவன்:

ஒரு நல்ல நிலையை எட்டும் வரை இளமையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதும், சோம்பலில்லாமல் புத்திசாலித்தனமாக உழைப்பதும் கஷ்டம் தான். 

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியத்திற்கான உணவுக்கட்டுப்பாடும் கஷ்டம் தான். உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதும், நாக்கு ருசியைக் கட்டுப்படுத்துவதும் சுகமான  விஷயமில்லை தான். 
ஆனால் அப்படி ஒருவன் கட்டுப்பாடாக வாழ்ந்து, கடும் உழைப்பு உழைத்துக் கொண்டிருக்கிறான். 

மற்றொருவன்:
 
மற்றொருவன் சோம்பி இருந்தும், கேளிக்கைகளிலும், வீண் பேச்சிலும், சுற்றித்திரிதலிலும் கழித்துக் கொண்டிருக்கிறான்,
கட்டுப்பாடின்றி ருசிக்கு சாப்பிட்டு செருக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மற்றொருவன்

வேறுபாடு:
 
பத்து வருடங்கள் சென்ற பின் அவர்கள் இருவர் நிலையையும் பார்த்தால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, நன்றாக உழைத்த ஒருவன் உயர்ந்த நிலைக்குப் போயிருப்பதையும், மற்றொருவன் வாழ்க்கையில் சொல்லும்படியான நிலையை எட்டாமல் அன்றாட வாழ்க்கையே பிரச்னைக்குரியதாய் கஷ்டப்படுவதையும் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் வயோதிகம் கொடுமையான காலக்கட்டமாகி விடும். முதலாமவன் நல்ல ஆரோக்கியத்தோடு பல சந்தோஷங்களை இழக்காமல் வாழும் போது, இரண்டாமவன் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்து உடல் உபாதைகளால் தினமும் கஷ்டப்படுவதை நாம் காணலாம்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு. “சோகமான வார்த்தைகளிலேயே உச்சக்கட்ட சோகமான வார்த்தை ‘அப்படி இருந்திருக்கலாம்என்று காலங்கழிந்து சொல்வது தான்”.   

எப்படி வாழ விருப்பம் (தனி) ஒருவனாகவா அல்லது மற்றொருவனாகவா நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இணையதள வசதி இருக்கு, கணிப்பொறி இருக்கு, கைக்கு கீழ்  விசைப்பலகை, சுட்டி(Mouse) இருக்கு அப்படினு கைக்கு வந்ததை எழுதிவிட்டேன். இனி தனியொருவனாக மாறப்போகிறேன் ......இல்லை இல்லை தனி ஒருவனாக மாறலாம் வாங்க.


மூலம் :

சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவு இது, என்.கணேசன் அவர்களின் தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிவிட்டுள்ளேன். 
இதில் எந்தக் கஷ்டம் வேண்டும்? தீர்மானியுங்கள்!  

முதன் முதலில் 2012ல் என் நண்பன் செந்திலின் மூலமாக "மஹாசக்தி மனிதர்கள்" என்ற இவரின் பதிவு எனக்கு அறிமுகமானது. அதன் பிறகு இவருடைய எழுத்திற்கு வாசகனாகிவிட்டேன். சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் கதைகள் கொண்ட மிகவும் பயனுள்ள ஒரு தளம் இது
என்.கணேசன் 

  

Thursday 6 October 2016

உடல் உஷ்ணம் மற்றும் உடல் கட்டிகளுக்கு எளிய மருந்து:

வா மணிகண்டன் அவர்கள் தளத்தில்  படித்த பிடித்த செய்தியை இங்கே தருகிறேன் (சித்த மருத்துவக் குறிப்புகள்)

உடல் உஷ்ணம்:

** சிறுநீர்த் தொற்று இருந்தால் (சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால்) லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். 

** சிறுநீர் தொற்று இல்லாமல் சிறுநீர் போகும்போது   எரிச்சல் இருந்தால் உடற்சூடுதான் முக்கிய காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டை தணிக்க இது நல்ல வழி.

** கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களுடன் குறுமிளகு 6 சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால் கட்டைவிரல்களிலும் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும். 
  
சுரப்பிகள் வீக்கம் (அ) கட்டி:

** பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில் inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் (நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்) பயன் தரக் கூடியது. கழற்சி காயுடன்  ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும்.



** இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர் உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன் தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப் பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம். 





Tuesday 4 October 2016

இயக்குனர் வெற்றிமாறனின் கவலை: #BanGmMustard

"எனக்கு கொஞ்ச காலமாக கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நம் குழந்தைகளுக்கு விஷத்தை உணவாக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என்று. இதை நினைச்சு பார்க்கும்போதெல்லாம் இரவில் தூக்கம்கூட வருவதில்லை. நம் எதிர்காலம் என்பது அடுத்த தலைமுறைதான். அவர்களுக்கு ஊட்டும் விஷத்தை நிறுத்தவேண்டும். இன்னும் சில காலங்களில் காற்று, தண்ணீர் எதுவும் இருக்காது. அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால். இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதை பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. சில வருஷங்களாகவே ஆர்கானிக், சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டு வருகிறேன். அப்போதிருந்தே எனக்கு உடலில் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. மக்கள் விழிக்கும் தருணம் இதுதான். உண்மையான சுதந்திரம், நம்முடைய உணவை நாமே உற்பத்தி செய்து சாப்பிடுவதில்தான் இருக்கிறது. மக்களோட சுதந்திரத்துக்கு எதிராகத்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு  கொண்டிருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு" - இயக்குனர் வெற்றிமாறன்.

"மத்திய அரசோட மரபணு தொழில் நுட்பத்துக்கான உயர்மட்டகுழு, வணிகரீதியாக ஜி.எம். கடுகு பயிர் செய்றதுக்கு அனுமதி வழங்குறதுல இறுதி கட்டத்தை நெருங்கிட்டாங்க. இந்தியாவுல உணவு பயிருக்கு முதன்முதலா அனுமதி அளிக்கபட இருக்கிறது இந்த கடுகுக்குத்தான். மரபணு மாற்று உணவு பயிர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்க. முதல்ல பி.டி (BT) கத்திரிக்காய் அறிமுகப்படுத்தும்போது, மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் அதை நிறுத்தினாங்க. இப்போ அந்த பி.டி தொழில்நுட்பத்தை கடுகுல புகுத்தியிருக்காங்க. மரபணுமாற்று கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணுமாற்று பயிர்கள் வரிசையில நிக்குது. பி.டி கடுகை கொண்டு வருபவர்களுக்கு பணம், பலம் ரெண்டுமே இருக்குது. ஆனால், நமக்கான ஒரே பலம் உண்மை. அது ஒன்றுதான் நமக்கு துணை. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் வரவிட மாட்டோம். பி.டியை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மரபணு மாற்று கடுகோட தீங்கை எடுத்துச் சொல்லுங்க"   -நடிகை ரோகிணி.

செய்தி:

மீபத்தில் டெல்லிப் பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றுக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 (Source:Vikatan news )


எனது நிலைப்பாடு:

இயற்கையானது தாவரங்கள், விலங்குகள், உயிரினங்கள் மற்றும் மண் இவைகளிடையே ஒரு சுழற்சியை வைத்திருக்கிறது. அதாவது ஆற்றல் மண்ணிலிருந்து தாவரங்களுக்கு செல்கிறது, தாவரத்திலிருந்து மனிதனுக்கும், விலங்குகளுக்கும் செல்கிறது மீண்டும் கழிவுகள் மூலமாக மண்ணிற்க்கு தேவாயானது கிடைத்து விடுகிறது. 

இப்படி ஒரு உயிரியல் சுழற்சி இருக்கும் போது அதில் ஒரு அங்கமான தாவரத்தில் மட்டும் மரபை/மரபணுவை மாற்றி யாருக்கும் தீங்கு ஏற்படாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதா? ஏற்கமுடியாது இல்லையா. 

நமது உடலில் உள்ள ஜீரண மண்டலம் இயற்கையான சுழற்ச்சிக்கு உட்பட்டதே அதில் செற்கையான ஒரு பொருள் (ஆய்வகத்தில் மாற்றப்பட்ட மரபணு) உள்வரும் போது நமது அடுத்த சந்ததிகள் பாதிக்கபபடுவார்கள் என்பது தான் உண்மை. 

 Tamil Hindu news : மரபணுக் கடுகு: காரமும் இல்லை; சாரமும் இல்லை 




 

Monday 3 October 2016

சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது:

தனது இயற்கை வளத்தை தக்கவைத்துக்கொண்டது. தமது பாரம்பரிய உணவுமுறை, மரபு மருத்துவம், தாய்மொழியை மறந்துவிடாமல் இன்றும் பின்பற்றுவதே சீனா, பிறநாட்டை சாராமல் தனித்துவமாக இயங்குவதற்கு முதன்மையான காரணம.


தினமலர் நாளிதழில்  "டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ் சித்த மருத்துவ நிபுணர்", மதுரை, 98421 67567 எழுதிய கட்டுரை, சமீபத்தில் படித்ததில் மிக பிடித்தது அதை அப்படியே இங்கு ஒட்டியுள்ளேன், அதாங்க பேஸ்ட் பண்ணியிருக்கேன்.

உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து மற்ற நாடுகள் நிமிர்ந்து மரியாதையுடன் பார்க்கும் நாடு சீனா. அப்படிப்பட்ட சீனாவானது இந்தியாவின் மேல் மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் நமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் புத்த மதம்தான்.

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில், லின்யி மாவட்டத்தில் அரசின் சார்பாக நடந்த முதலாவது மருத்துவ கருத்தரங்கிற்கு சீன அரசின் சார்பாக பல்வேறு நாடுகளின் டாக்டர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், தாவரவியல், நுண்ணுயிரியல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில் இந்தியாவின் பழமை வாய்ந்த, பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவம் பற்றி பேச இந்தியாவில் இருந்து எனக்கும், கர்நாடகாவில் இருந்து டாக்டர் அருளமுதனுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

செப்.,19, 20ல் நடந்த இக்கருத்தரங்கில் பங்கேற்க சீனா சென்ற எங்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது. சென்றது முதல் திரும்பி வந்தது வரை எங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரும் பொறுப்பை சைனோ இந்தோ மென்பொருள் தொழில்நுட்ப மேலதிகாரி கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு ஏற்றுக்கொண்டார்.

சீனத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பை வாசகர்களுக்கு தெரிவிக்கும் கடமை எனக்கு உள்ளது.இந்தியாவும், சீனாவும் நாகரிகத்தால் ஒன்றுபட்டது. இரண்டு நாடுகளும் வலராற்று காலத்திற்கு முந்தைய பழமை வாய்ந்தவை.

சீனர்கள் ஆர்வம் :இந்தியாவில் தோன்றிய புத்தமதம் தற்போது சீனாவின் முதன்மையான மதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் சித்த மருத்துவம் பற்றி ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். அவர்களின் அக்குபஞ்சர், அக்குபிரஷர், ஹிப்னாடிஸம் மற்றும் நமது சித்த மருத்துவத்தின் பிரிவுகளையும், சித்த மருத்துவத்தின் அங்கமான யோகக்கலையின் சிறப்பையும் சேர்த்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தனர்.

சித்தாந்தம் - தாயோயிசம், மாத்திரை - சுன், வாசி - க்ஷீ, அண்டம் பிண்டம் - ஜாங்பூ, நாடி - ஜிங், இடகலை, பின்கலை - இங்யாங், பஞ்சபூத பஞ்சிகரணம் - ஷென்ஹோ என தமிழ் மருத்துவத்திற்கும், சீன மருத்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை நாங்கள் விளக்கியபோது கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

சீனாவில் சித்தர்கள்:இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்ற நமது நவபாஷாண சித்தர் போகர் 'போயாங்' என்றும், 'போதி தர்மர்' என்றும் அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம். அதுமட்டுமின்றி, கொங்கணவர், புலிப்பாணி, பூனைக்கண்ணர் போன்ற சித்தர்கள் சீனாவிற்கு சென்று வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன. போதி தர்மருக்கு சவோலின் கோயிலில் நினைவுச்சின்னம் அமைத்து வழிபடுகின்றனர்.

ஐந்து கி.மீ.,க்கு மேல் மலை உச்சியில் இருக்கும் அவரது சிலையை அவரது சீடர்கள் தினமும் காலையில் அரைமணி நேரத்திற்குள் நடையும், ஓட்டமுமாக சென்று வணங்குகின்றனர். அவர் கற்றுக்கொடுத்த வர்மக்கலையானது, போதி தர்மரின் 'சவோலின் குங்பூ' என்று அங்கு அழைக்கப்படுகிறது.

காஞ்சி போதிதர்மர்

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவிற்கு சென்ற போதிதர்மர் என்ற சித்தர், 14 ஆண்டுகள் யாரிடமும் பேசாமல் அமர்ந்து தியானம் செய்துள்ளார். அவரை பார்த்து வியந்த மாங்க் துறவிகள், 'உங்களை போல் நாங்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டபோது, நமது சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட உணவு முறைகள், சிலம்பம், வர்மம், களரி போன்ற கலைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.

இந்த மருத்துவ கலையானது, 'போதி தர்மரின் சாயோலின் மருத்துவம்' என்று அங்கு அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் டாக்டர் செந்தில்வேலை, சாயோலின் நிர்வாகத்தினர் தற்போது தொடர்பு கொண்டு போதி தர்மர் பற்றிய பல்வேறு விளக்கங்களை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வந்திருந்த எங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, சித்தர்கள் பிறந்த புண்ணிய பூமியில் இருந்து நாங்கள் வந்துள்ளதாக பெருமைப்பட்டு கொண்டனர்.

பிறநாட்டவருக்கும் குங்பூ நமது நாட்டின் வர்மக்கலை போல், சீனாவில் சாயோலின் குங்பூ பிரபலமாக உள்ளது. இதை புத்த மரபாகவே சீனர்கள் வணங்குகின்றனர். நாம் சாமியார்கள் என்று சொல்வது போல், புத்த துறவிகளை 'மாங்க்' என்று சீனர்கள் அழைக்கின்றனர். கி.பி.791ல் இருந்து 1580ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்ட 248 மாங்க் சமாதி துாபிகள் அங்கு காணப்படுகின்றன.

சீனாவில் ஏறத்தாழ 5 நாட்கள் 3000 கி.மீ., துாரம் சுற்றினோம். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என மரங்கள் காணப்பட்டன. நகரில் பல இடங்களில் மரங்களை சுற்றி சாரம் கட்டுவது போல் முட்டு வைத்திருக்கின்றனர். என்னவென்று கேட்டபோது வியப்பாக இருந்தது. வனப்பகுதியில் இருந்து மரங்களை வேரோடு தோண்டி, நகர்ப்பகுதிகளில் சாலையோரங்களில் நட்டு பராமரிக்கின்றனர்.

சமஅளவில் சித்த மருத்துவர்கள் :பாரம்பரிய சீன மருத்துவத்திற்கு அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம். ஆனால் இலவச சேவை இல்லை. தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் இல்லை. ஆங்கில மருத்துவர்களும், சீன பாரம்பரிய முறை மருத்துவர்களும் சம அளவில் பணிபுரிகின்றனர்.

வலிப்பு, தண்டுவட கோளாறு, புற்றுநோய், இருதயநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இரு மருத்துவர்களும் சேர்ந்து சிகிச்சை அளிக்கின்றனர். பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தை கூடுதலாக 3 ஆண்டுகள் படித்து, தங்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மூலிகைக்கு நோபல் :பிற நாடுகளில் இருந்து ஆங்கில மருந்துகளை வாங்குவதில்லை. அனைத்து வித ஆங்கில மருந்துகளையும் அரசு, தனியார் மருந்து நிறுவனங்கள் தாங்களே தயாரிக்கின்றன. ஒவ்வொரு மருந்து செய் நிலையத்திலும் ஆங்கில மருந்துகளுக்கு சமமாக பாரம்பரிய மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன. உலகளாவிய காப்புரிமை பதிவு செய்கின்றனர். அப்படிதான் சீனாவின் பாரம்பரிய மூலிகை மருந்துக்கு நோபல் பரிசு கிடைத்தது. மருந்து நிறுவனங்கள், தங்களது ஆரோக்கியமான இளம் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி கொடுத்து ராணுவத்திற்கு தயார் செய்கிறது. இதற்கு மாநில அரசு கூடுதல் பங்களிப்பை தருகிறது.

காலை உணவு 7:00 மணி, மதிய உணவு 12:00 மணி, இரவு உணவு 6:00 மணி என்று சரியாக உட்கொள்கின்றனர். 7:00 மணிக்கு பின், பல நகர் தெருக்கள் அமைதியாகி விடுகின்றன. 60 ஆண்டுகள் பழமையான தனியார் கட்டடமாக இருந்தாலும், அரசே இடித்து அப்புறப்படுத்தி விடுகிறது. எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த கட்டடங்களே உள்ளன. மின்தடை எங்கும் இல்லை. கட்டடங்கள் இரவு மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.

தொழில் நுட்பமுன்னேற்றம்

கட்டடத்தில் சூரியஒளி தகடு பதிக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் சீனர்கள் முன்னேறி இருக்கின்றனர். நாம் பயன்படுத்தும் பார்கோடு, மணி டிரான்ஸ்பர் என அனைத்தையும் 1999ம் ஆண்டு முதலிருந்தே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் பெரும்பாலான பொருட்கள் மிகவும் மலிவாக கிடைக்கிறது. 10 ஆயிரம் ரூபாய் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத செலவிற்கு போதுமானது.பணி நேரம் போக மற்ற நேரங்களில் வெளியில் சென்று உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். டாக்சி டிரைவர், பஸ் டிரைவர், போலீஸ், டூரிஸ்ட் கைடு என அனைத்திலும் பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர்.

தனது இயற்கை வளத்தை தக்கவைத்துக்கொண்டது. தமது பாரம்பரிய உணவுமுறை, மரபு மருத்துவம், தாய்மொழியை மறந்துவிடாமல் இன்றும் பின்பற்றுவதே சீனா, பிறநாட்டை சாராமல் தனித்துவமாக இயங்குவதற்கு முதன்மையான காரணம் என உணர முடிந்தது. 

சுயச்சார்பும், தொன்மையை போற்றுவதுமே ஒரு நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை உணர செய்தது இந்த கட்டுரை.



Sunday 2 October 2016

மண் குளியல்:

மண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் முழுவதிலுமே கடைபிடிக்கப்படுகிறது. தசை இறுக்கத்தை நீக்க, உடல் வலிகளை போக்க, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, தோல் ஒவ்வாமைகளை போக்க மற்றும் தோலை மிருதுவாக்க என்று பல பயன்களை தர கூடியது மண்குளியல். பொதுவாக மனிதர்கள் பயன்படுத்தாத இடங்களில் உள்ள தூய்மையான களிமண், செம்மண் மற்றும் புற்று மண் ஆகியவற்றை மண் குளியலுக்கு பயன்படுத்தலாம். இவற்றில் களிமண், வண்டல் மண், மணல் மற்றும் நீர் கலந்து காணப்படுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளது. உடலில் தோல் தான் மிகப்பெரிய சுவாச உறுப்பு, அதன் மூலம் தான் அதிகப்படியான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. எனவே தோலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு சமானம்.


என் அனுபவம்: கிராமங்களில் கிணற்று பாசனம் உள்ள இடங்களில் தொட்டி கட்டி வைத்திருப்பார்கள், கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீர் தொட்டியில் விழுந்து பின் வாய்க்கால் வழியாக வயலுக்கு செல்லும். அந்த தொட்டியில் பாசான், மண் ஆகியவை கலந்திருக்கும் (சில தொட்டிகள் சுத்தமாக இருக்கும் அது வேறு விஷயம்). சிறு வயதில் எனக்கு நீர் ஒவ்வாமை இருந்தது, அதாவது அசுத்தமான தொட்டி நீரில் குளிக்கும் போது உடல் முழுதும் எறும்பு கடித்தார் போல சிறு சிறு தடிப்புகளாக வந்துவிடும் கூடவே அரிக்கவும் செய்யும். பல மாத்திரைகள், லோஷன்கள் தடவியும் பிரயோசனமில்லை. யாரோ ஒருவர் போகிற போக்கில் "புத்து மண்ண கொழச்சி 2 நாள் தடவுங்க சரியாப்போயிடும்" என்று சொல்லி செல்ல அதை முயற்சி செய்து பார்த்தேன் சரியானது, அதன் பின் கிட்டத்தட்ட 15 வருடங்களாக எனக்கு எந்த தோல் ஒவ்வாமையும் வந்ததில்லை. அந்த யாரோ ஒருவருக்கு நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை இயற்கை உணவு என்ற தளத்திலிருந்து அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.

(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.

(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.

(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.

(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.

(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். 

(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.

(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.

(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.

(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.

சில தொடர்புடைய தளங்கள்:

ii  ) sithamaruthuvam 
v ) Mud Baths

 
 


Saturday 1 October 2016

15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:

தினமலர் நாளிதழில் "சொல்கிறார்கள்" பகுதியில் வந்த சிலரது செய்திகளை  தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டில் குறைந்த லாபத்தை பெற கூடிய தொழில்கள் செய்கிறார்கள். 500 முதல் 20000 முதலீட்டில் ஆரம்பித்து 1000 முதல் 40000 வரை லாபம் பெற கூடிய தொழில்கள். லாபம், பணம் இவற்றை தாண்டி ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை என்பதே இவர்கள் அனைவரின் அறிவுரை.

1) மூலிகை சூப் ரெடிமிக்ஸ் வியாபாரம்: (Herbal  Soup Ready mix)

மதுரையை சேர்ந்த அனுராதா என்பவர் " அனு கிரீன்சூப்" என்ற பெயரில் இதை செய்து வருகிறார். சர்க்கரை நோய் கட்டுப்படுத்த, உணவுக்குழாய் சுத்தப்படுத்த, மஞ்சள் காமாலை குணப்படுத்த, ஞாபக சக்தியை அதிகப்படுத்த , மூட்டு வலி குணமாக்க, உடல் எடையை குறைக்க, சளி இருமல் போக்க என 7 வகையான சூப் மிக்ஸ் கூடவே மூலிகை டீ மற்றும் ஜுஸ் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 81444-55977.


2) அப்பளம் வியாபாரம்:

மதுரையை சேர்ந்த ரேவதி என்பவர் அப்பளம் பிசினஸ் செய்து வருகிறார். உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம் என்று வித விதமாக அப்பளம் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 94429-38305.
3) சிறுதானிய பிஸ்கட் வியாபாரம்:
 
சென்னையை சேர்ந்த அக்லீசியா என்பவர் வீட்டிலேயே சிறுதானியங்களை பயன்படுத்தி பிஸ்கட், முறுக்கு, அதிரசம் செய்து விற்பனை செய்கிறார். இதற்க்கு குக்கர் ஒன்றே போதும் என்பவர் வியாபாரத்திற்காக மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தி வருகிறார், தொடர்புக்கு 98431-80300.

  
4) சிறுதானிய உணவு வியாபாரம்:

30 வகையான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திருவையாரை சேர்ந்தவரும், சிறுதானிய உணவு தயாரிப்புக்காக மத்திய அரசின் ஸ்ருஷ்டி சம்மான் விருது பெற்றவரும், சுகா டயட் நாச்சுரல்ஸ் புட் நிறுவனருமான ராஜேஸ்வரி ரவிகுமார். ஆர்வமும், தொடர் புத்தக வாசிப்புமே தனது இந்த நிலைக்கு காரணம் எனினும் தனது கணவரின் பங்கும் முக்கியமானது என்கிறார், தொடர்புக்கு 94431 63206.


5)  சாக்லேட் வியாபாரம்:

விருதுநகரை சேர்ந்த கல்லூரி மாணவி அர்ஜிதா இதை செய்து வருகிறார். இயந்திரங்களின் விலை 20,000 - 30,000 ரூபாய் வரை இருக்கும், மூலதன பொருட்களுக்கு 5000 ரூபாய் போதும் என்கிறார்.



6) கை மற்றும் வீடு சுத்தம் செய்யும் க்ளீனர்கள் வியாபாரம்:

பினாயில், ஹேண்ட் வாஷ், புளோர் க்ளீனர், டாய்லட் க்ளீனர் மற்றும் சோப் ஆயில் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் கலைசெல்வி அவர்கள் தனது தயாரிப்புகளில் துளியும் ஆசிட் இல்லை என்கிறார், தொடர்புக்கு 94441 74865.


7) குஷன் மற்றும் தலையணை தயாரிப்பு வியாபாரம்:

குஷன் மற்றும் தலையணை தயாரிக்க ஆர்வமும், புதிய புதிய டிஸைன் உருவாக்கும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த செல்விதிலீப் என்பவர், தொடர்புக்கு  98404 37131.


8) மூலிகை குளியல் பொடி வியாபாரம்:

கற்றாழை, நெல்லி முல்லை, ஆவாரம் பூ, செம்பருத்தி, துளசி, கோரக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பேஸ் வாஷ் மற்றும் குளியல் பொடி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையை சேர்ந்த சோபனா என்பவர், தொடர்புக்கு 95001-48840.


9) ஐஸ்கிரீம் வியாபாரம்:

தனது மகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுக்க போய் அதுவே இன்று முழு நேர தொழிலாக மாறியதாக கூறும் திருவள்ளூரை சேர்ந்த பிருந்தா அவர்கள், சீசனை பொறுத்து இரண்டு மூன்று மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார், தொடர்புக்கு 91761 89314.


10) சணல் பை தயாரிப்பு வியாபாரம்:

பர்ஸ், கை பை, சுற்றுலா பை, உணவு பை, தாம்பூல பை, மளிகை சரக்கு வாங்கும் பிக் ஷாப்பர் பை என பல வகையான பைகளை தயாரிக்கலாம் அதோடு கூட மொபைல் பவுச், டேபிள் மேட், தோரணம்  ஆகியவற்றையும் சணல் மூலம் தயாரிக்கலாம் என கூறுகிறார் மடிப்பக்கத்தை சேர்ந்த கிரிஜா அவர்கள். மூல பொருட்களுக்கு 2000 மற்றும் இயந்திரத்திற்கு 8000 ரூபாய் என மொத்தமாக 10000 முதலீடாக போட்டு வீட்டிலிருந்த படியே தொழில் செய்யலாம் என்கிறார்.
 11) மசாலா தயாரிப்பு வியாபாரம்:

மத்திய அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மசாலா தயாரிப்பு தொழிலை கற்று கொண்டு இன்று சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, குருமா மசாலா, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி, ரச பொடி, அடை மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ், தேங்காய் சாத பொடி, தக்காளி குழம்பு, வத்த குழம்பு  என்று பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த சித்ரா அவர்கள், தொடர்புக்கு 95241-35003.


12) ஊறுகாய் வியாபாரம்:

கடந்த 18 வருடங்களாக பாகற்காய், நார்த்தங்காய், இஞ்சி, நெல்லிக்காய், வெஜிடபிள் மிக்ஸ், கருவேப்பிலை, புதினா, வடுமாங்காய், எலுமிச்சை ஊறுகாய் என 35 வகையான ஊறுகாய்களை செய்து விற்று வருகிறார் மதுரை ஆண்டிபட்டியை சேர்ந்த லட்சுமி, மீனாஸ் ஊறுகையின் நிறுவனரும் இவரே.



13) நட்ஸ் அண்ட் ட்ரை ப்ரூட்ஸ் வியாபாரம்: (Nuts and Dry Fruits Business)

மேல்தட்டு, நடுத்தர மக்கள் பிறர் வீடுகளுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும் போது தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் அத்தி, பேரீச்சை போன்றவற்றை சாக்லேட்டுடனோ  அல்லது தனியாகவோ பேக் செய்ததைத்தான் வாங்கி செல்கின்றனர் அதனால் திட்டமிட்டு உழைத்தால் நல்ல வருமானம் பெறலாம் என்கிறார் பவானிதேவி அவர்கள்.

14) ஜவுளி வியாபாரம்:

கண்ணை கவரும் டிசைன், விளம்பரம், ஏஸியுடன் கூடிய அடுக்கு மாடி துணிக்கடைகள் இருக்கும் இந்த காலத்திலும் கடந்த 15 வருடங்களாக வீடு வீடாக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் பழைய வண்ணார பேட்டையை சேர்ந்த ராணி அவர்கள். ப்ளவுஸ் பிட், சேலை, உள்பாவாடை, வேட்டி, சட்டைகளை முதலில் விற்க ஆரம்பித்திருக்கிறார், துணியின் தரத்தினாலும் இவரது அணுகுமுறையினாலும் இன்று சென்னை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள இவருக்கு மகன்களும், மருமகள்களும் வியாபாரத்தில் உதவுகின்றனர்.


15) தேனீ வளர்ப்பு:

"வீட்டிற்கு ஒரு தேனீ பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி"ங்கிற அடிப்படையோட திருமதி ஜோஸ்பின் அவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள்ல, தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியை வழங்குறாங்க. தொடர்புக்கு...மதுரை கடச்சனேந்தல் விபிஸ் இயற்கை பண்ணை, 98655 55047.



** முதலில் நமக்கு ஆர்வம் உள்ள தொழிலை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
** அதில் பயிற்சி பெற்று நம் மீதான நமது நம்பிக்கையை உயர்த்த வேண்டும்.
** நம் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டுகாரர்கள், உறவினர்கள் இவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
** பின் லாப நோக்கம் பாராமல் சிறிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும்.
** பின்னூட்டங்களை பெற்று குறை இருப்பின் நிவர்த்தி செய்து தொழிலை விரிவாக்க வேண்டும்.
** தொழில் வளர நமது நேரடி கண்காணிப்பும், தரமும், பொறுமையும் அவசியம்.
** பிறகு பணம் நாம் கேட்காமலேயே நம்மிடம் வரும். 

வியாபார நோக்கமின்றி திருப்திக்காக சில வேலைகள்:

1) கோலம் வரைதல்: 

25 ஆண்டுகளில் 10 ஆயிரம் வகை கோலங்கள் போட்டு, கோலத்திற்க்காக கலைமாமணி விருது வாங்கியிருக்கிறார் மாலதி அவர்கள். கல் உப்பு, தூள் உப்பு, மரத்தூள், நவதானியம், அரிசி, கலர் வத்தல், மணி, முத்து, மணல், கற்பூரம் போன்ற நம் வீட்டில் கிடைக்க கூடிய எளிமையான பொருட்களை பயன்படுத்தியே புதுமையான கோலம் போடலாம் என்கிறார் இவர். பிரெஞ் சாக் பவுடர் பயன்படுத்தி தண்ணீருக்கு அடியிலும், தண்ணீருக்கு மேலும் கோலம் போடலாமாம். திருமணங்களில் மணமக்களின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைவாராம் இவர், அதனாலேயே பத்திரிக்கையில் கூட "மாலதியின் மணமக்கள் கோலம்" என்று போடும் அளவிற்கு பிரபலம் இவர். லலிதா கலை பயிற்சி வகுப்பு மூலமாக கோலம் வகுப்பு எடுத்து வரும் இவரின் லட்சியம் கோலத்தில் கின்னஸ் சாதனை செய்வதுதானாம்.


2) மாடி தோட்டம்/ வீட்டு தோட்டம் :

2 அடி நிலத்தில் ஒரு சவாலாக செடி வளர்க்க ஆரம்பித்து இன்று 20 சென்ட் நிலத்தில் புடலை, சுரைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், கொத்தவரை, தக்காளி, மிளகாய், சோளம், 20 வகை கீரைகள் ஆகியவற்றை இயற்க்கை வேளாண் முறையில் வளர்த்து இயற்க்கை அங்காடிக்கு விற்பனைக்கு கொடுத்தும், தனியே நிலம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறார் ஏ.எம். மாலதி அவர்கள். ஒற்றை பயிர் முறையை விட்டு கலப்பு பயிர் வேளாண்மை செய்து வருகிறார் இவர், தொடர்புக்கு 9791072194. (இப்போ நான் விவசாயி : பயிர்களைத் தேடும் பெண் டிடெக்டிவ் )


3) அக்குபஞ்சர் மருத்துவம்:

நாடி பரிசோதனை மூலம் 12 உடல் உள் உறுப்புகளின் நிலையறிந்து தலை முடி தடிமனுடைய ஊசியை கொண்டு உடலின் சக்தி ஓட்டங்களை சரி செய்து நோய் தீர்க்கும் ஒரு மருந்தில்லா மருத்துவமுறையே அக்குபஞ்சர். ஊசிக்கு பதிலாக விரல்களை கொண்டு அழுத்தினால் அது அக்குபிரஷர் மருத்துவம். கோவை, மதுரை, சேலம், காரைக்குடியில் உள்ள சில தனியார் நிலையங்களிலும் மற்றும் சில பல்கலைக்கழகங்களிலும் படித்து இந்த மருத்துவ முறையை நாம் மேற்கொள்ளலாம். மருத்துவர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் வெளியிடும்  "ஹெல்த் டைம்" பத்திரிக்கையில் மேலும் விபரங்களை பெறலாம். 


மேலும் சில இணைப்புகள்:

1) http://owenbusiness.blogspot.in/2015/08/20.html 
2) http://thozhil.paramprojects.com/node/15 
3) குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்கள்!
4)வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்   
5) லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag  
6) http://siruthozhilgal.blogspot.in/ 
7) Entrepreneurship Development Institute (EDI)
8) தேனீ 
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...