"எனக்கு கொஞ்ச காலமாக கவலையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நம் குழந்தைகளுக்கு விஷத்தை உணவாக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே என்று. இதை நினைச்சு பார்க்கும்போதெல்லாம் இரவில் தூக்கம்கூட வருவதில்லை. நம் எதிர்காலம் என்பது அடுத்த தலைமுறைதான். அவர்களுக்கு ஊட்டும் விஷத்தை நிறுத்தவேண்டும். இன்னும் சில காலங்களில் காற்று, தண்ணீர் எதுவும் இருக்காது. அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுட்டு போகப்போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால். இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதை பார்க்கும் போதெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. சில வருஷங்களாகவே ஆர்கானிக், சிறுதானிய உணவுகளைத்தான் சாப்பிட்டு வருகிறேன். அப்போதிருந்தே எனக்கு உடலில் வித்தியாசங்கள் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. மக்கள் விழிக்கும் தருணம் இதுதான். உண்மையான சுதந்திரம், நம்முடைய உணவை நாமே உற்பத்தி செய்து சாப்பிடுவதில்தான் இருக்கிறது. மக்களோட சுதந்திரத்துக்கு எதிராகத்தான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு" - இயக்குனர் வெற்றிமாறன்.
"மத்திய அரசோட மரபணு தொழில் நுட்பத்துக்கான உயர்மட்டகுழு, வணிகரீதியாக ஜி.எம். கடுகு பயிர் செய்றதுக்கு அனுமதி வழங்குறதுல இறுதி கட்டத்தை நெருங்கிட்டாங்க. இந்தியாவுல உணவு பயிருக்கு முதன்முதலா அனுமதி அளிக்கபட இருக்கிறது இந்த கடுகுக்குத்தான். மரபணு மாற்று உணவு பயிர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்க. முதல்ல பி.டி (BT) கத்திரிக்காய் அறிமுகப்படுத்தும்போது, மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் அதை நிறுத்தினாங்க. இப்போ அந்த பி.டி தொழில்நுட்பத்தை கடுகுல புகுத்தியிருக்காங்க. மரபணுமாற்று கடுகு இந்தியாவில் நுழைந்தால், அடுத்து 50 வகையான மரபணுமாற்று பயிர்கள் வரிசையில நிக்குது. பி.டி கடுகை கொண்டு வருபவர்களுக்கு பணம், பலம் ரெண்டுமே இருக்குது. ஆனால், நமக்கான ஒரே பலம் உண்மை. அது ஒன்றுதான் நமக்கு துணை. எக்காரணம் கொண்டும் பி.டி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் வரவிட மாட்டோம். பி.டியை முழுமையாக ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இங்கே வந்திருப்பவர்கள் உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மரபணு மாற்று கடுகோட தீங்கை எடுத்துச் சொல்லுங்க" -நடிகை ரோகிணி.
செய்தி:
சமீபத்தில் டெல்லிப் பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை உருவாக்கியுள்ளது. இந்த மரபணு மாற்றுக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
(Source:Vikatan news )
எனது நிலைப்பாடு:
இயற்கையானது தாவரங்கள், விலங்குகள், உயிரினங்கள் மற்றும் மண் இவைகளிடையே ஒரு சுழற்சியை வைத்திருக்கிறது. அதாவது ஆற்றல் மண்ணிலிருந்து தாவரங்களுக்கு செல்கிறது, தாவரத்திலிருந்து மனிதனுக்கும், விலங்குகளுக்கும் செல்கிறது மீண்டும் கழிவுகள் மூலமாக மண்ணிற்க்கு தேவாயானது கிடைத்து விடுகிறது.
இப்படி ஒரு உயிரியல் சுழற்சி இருக்கும் போது அதில் ஒரு அங்கமான தாவரத்தில் மட்டும் மரபை/மரபணுவை மாற்றி யாருக்கும் தீங்கு ஏற்படாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதா? ஏற்கமுடியாது இல்லையா.
நமது உடலில் உள்ள ஜீரண மண்டலம் இயற்கையான சுழற்ச்சிக்கு உட்பட்டதே அதில் செற்கையான ஒரு பொருள் (ஆய்வகத்தில் மாற்றப்பட்ட மரபணு) உள்வரும் போது நமது அடுத்த சந்ததிகள் பாதிக்கபபடுவார்கள் என்பது தான் உண்மை.
Tamil Hindu news : மரபணுக் கடுகு: காரமும் இல்லை; சாரமும் இல்லை
No comments:
Post a Comment