Sunday, 27 August 2017

விரலி (Pendrive) பிரச்சனைகளும் தீர்வுகளும்:

இந்த கணிணி  யுகத்தில் தரவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ளவும், கையாளவும் மிகவும் துணையாக உள்ள சாதனம் என்றால் அது "விரலி" என்று தமிழில் அழைக்கப்படும் Pen drive  தான். இது ஒரு வெளிப்புற நினைவாக சாதனம் (External Memory Device), நமது சட்டைப்பையில் வைத்து எங்கும் எடுத்துச்செல்ல முடியும். இந்த சாதனம் எத்தனை  எளிதானதோ அத்தனை  அளவுக்கு பாதிப்புக்கும் உள்ளாக கூடியது. முக்கியமாக 2 பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும், அந்த பிரச்சனைகள் அதன் தீர்வுகளை இங்கு பார்ப்போம்.


1) Shortcut virus பிரச்னை:
Browsing center கணிணி, virus ஆல் பாதிக்கப்பட்ட கணிணி, antivirus மென்பொருள் இல்லாத கணிணி, அதிக internet பயன்பாடு உள்ள கணிணி இவற்றில் pendriveஐ  பயன்படுத்தும் போது இந்த shortcut virus பிரச்னை ஏற்படுகிறது. pendrive உள்ளே இருக்கும் அனைத்து கோப்புகளுக்கும் கீழே படத்தில் உள்ளது போல ஒரு shortcut file உருவாகிவிடும் இதனை திறந்தால் ஒன்றுமே இருக்காது. சுருங்க சொல்ல வேண்டுமென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதுபோல, அதாவது pen driveல்  file இருக்கும் நம்மால் அதை பார்க்க முடியாது.


தீர்வு:

-Insert pen drive and note down the drive letter (for example L: or I:)
   Go to Start -> Run -> cmd.
-In command promt you will see like below
   C:\Documents and Settings\User>
-To go to your pen drive type pen drive letter as below. Here it is   "L:" 
   C:\Documents and Settings\User>L:   then press enter
-Now we entered in to our pen drive, you will see as below
   L:\>
-Then type the following command
   L:\>attrib -s -h /s /d *.*   then press enter
-Now remove your pen drive then again insert your pen drive now you can see your files.

NOTE: After when you got your files, just copy your files somewhere in your PC and format your drive and then copy again your files to the drive. Only then your shortcut virus will get off from your PC...!

2) Copying files to Pen drive பிரச்னை:
சில சமயங்களில் நமது pen driveல் போதுமான இடம் இருக்கும் ஆனால் கோப்புகளை paste செய்யும் போது "போதிய இடம் இல்லை" என்ற செய்தி வரும். உதாரணமாக 16GB pen driveல் 4GB அளவுள்ள file ஐ  copy பண்ண முடியாது. இத்தகைய பிரச்சனை FAT32 எனப்படும் file system அமைப்பினால் ஏற்படுகிறது. இதனை NTFS என்ற file systemற்கு  மாற்றினால் தீர்த்துவிடலாம்.

தீர்வு:

-Insert pen drive and note down the drive letter (for example L: or I:) and format it
-Then
   Go to Start -> Run -> cmd.
-In command promt you will see like below
   C:\Documents and Settings\User>
-Type the following command  
   C:\Documents and Settings\User>convert L: /FS:NTFS    then press enter

சில முன்னெச்சரிக்கைகள்:

1) Printout எடுக்க செல்லும் போது pen drive க்கு பதிலாக CD யில் copy செய்து எடுத்து செல்லுங்கள், பெரும்பாலான சமயங்களில் printout எடுக்கும் போதுதான் virus பிரச்னை வருகிறது.

2) மற்றவரிடமிருந்து pendriveல்  Image (photo) fileஐ  பெறும்போது antivirus மென்பொருளில் scan செய்வது அவசியம். ஒரு folder க்குள் இன்னொரு folder அமைப்பு மற்றும் image file போன்றவை virus ஐ எளிதாக கடத்தும்.

3) தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் pen driveஐ  கொண்டு printout எடுக்க நேர்ந்தால், printout எடுத்து முடித்தவுடன் அந்த கணிணியிலேயே pen driveஐ format செய்துவிடுவது பாதுகாப்பானது.
 

Thursday, 10 August 2017

வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!


மாண்டிசொரி (  Montessori ) ஆசிரியர் பயிற்சியை, 15 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளார், குழந்தை கல்வியாளர் விஜயா: 

 நான் பிறந்தது கும்பகோணம். அம்மா தமிழாசிரியை; அப்பா ஆவின் நிறுவன அதிகாரி. எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்து, இ.ஐ.டி., பாரி நிறுவனத்தில் ஸ்டெனோவாக பணியாற்றினேன்.வங்கிப் பணியில் சேரலாமே என்ற விருப்பத்தில் தேர்வு எழுதியதில், சிட்டி வங்கியில் வேலை கிடைத்தது; நல்ல சம்பளம். ஆனால், மனம் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தது. யாருக்கோ வேலை செய்கிறோம் என்ற எண்ணம்; அடையாளம் இல்லையே என்ற கவலை. 


இந்நிலையில், திருமணம் முடிந்து வேலையை விட்டு, கணவருடன் பாலக்காடு சென்று விட்டேன்.பாலக்காட்டில், 'மலரும் மொட்டுகள்' என்ற பொருளில், 'ப்ளூமிங் பட்ஸ்' என்ற பிளே ஸ்கூல் துவங்கினேன். சென்னையில் அதற்கான மாண்டிசொரி கல்வி முறையிலான ஆசிரியர் பயிற்சியை பெற்றேன். அங்கே தான் குழந்தைகளின் உலகைப் புரிந்து, கற்றுக் கொடுப்பது பற்றிய அனுபவம் கிடைத்தது.எனக்கு ஆண், பெண் இரட்டையர் பிறந்தனர். அவர்களை வளர்க்கும்போதே மாண்டிசொரி முறையைத் தான் பின்பற்றினேன்.

1.ஒரு குழந்தைக்கு உடல் வளர்ச்சி மட்டும் போதாது, உள்ளமும் வளர வேண்டும். 
2.குழந்தைகளின் நடத்தையை அறிந்து கற்பிக்க வேண்டும்; 
3.அதிகாரம் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. 
4.பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்போது குழந்தைகளே கற்றுக் கொள்வர்.

பாலக்காட்டிலிருந்து சென்னை திரும்பி, மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தை துவங்கினேன். மாண்டிசொரிஎன்றாலே, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி என்று நினைக்கின்றனர்; அது தவறு. அனைத்துக் குழந்தைகளுக்குமான சிறந்த கல்வி முறையாக, மாண்டிசொரி இருந்து வருகிறது. பெற்றோர், இரண்டாவது ஆசிரியர்கள்; ஆசிரியர்கள், இரண்டாவது பெற்றோர் என்று சொல்வர். பெற்றோரைப் பார்த்துத் தான், குழந்தைகள் கற்றுக் கொள்வர்.
குழந்தைகளைப் பற்றிய குறைபாடுகளை, தொடர் கவனிப்பில் தான் அறிய முடியும். அப்போது தான் நடத்தை, உடல் நலம், பேச்சு, உணவு, கற்பித்தல் என அனைத்திலும், மாற்றங்களை செய்ய முடியும். கற்றுக் கொள்வதே தெரியாத வகையில் கற்பிக்கும் முறை.எனவே, குழந்தைகளை சுதந்திரமாக வளர விடுங்கள். பறவை, விலங்குகள், தன் குஞ்சுகளை தன்னிச்சையாக பழக்குகின்றன. பெரும் ஆபத்து என்றால் தான், தாய் பறவை வருவதை பார்த்திருக்கலாம். குழந்தைகளுக்கு வழிகாட்டினால் போதும்; கற்றுக் கொள்வர்.

தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். ஆனால், வசதியை கொடுக்காதீர்; நமக்கு கிடைக்காதவை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று, அபரிமிதமான பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்.குழந்தையை நேருக்கு நேராகப் புகழாதீர். அது, கற்றுக் கொள்வதை நிறுத்தி விடும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காக, நீங்கள் நடிக்க வேண்டும். மிகவும் கூர்மையான கவனம் உள்ளவர்களாக, தற்கால குழந்தைகள் வளர்கின்றனர். சொல்லிப் புரிவதை விட, அவர்களுக்குச் சொல்லாமல் நிறைய புரிகிறது.
கொஞ்ச காலம் தான் நாம் வளர்க்கிறோம். மற்ற காலங்களில் சமூகம் தான் குழந்தைகளை வளர்க்கிறது. 


---தினமலர் நாளிதழிலிருந்து.

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற