Monday, 20 February 2017

சினிமாவும் வாழ்க்கையும்:ஒரு ஒப்பீடு

ன் நமக்கு சினிமா மிகவும் பிடிக்கிறது?, தினம்தோறும் நம் வாழ்வில் பலவகையிலும் அறிந்தோ அறியாமலோ சினிமாவோடு நாம் பயணிக்கிறோம். நாம் எளிதில் நம் வாழ்க்கையை சினிமாவோடு தொடர்பு படுத்தி கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை, மறுபிறப்பு, ஆன்மா இந்த நம்பிக்கைகளின் அடிப்படையை கொண்டு  சினிமா மற்றும் வாழ்க்கை இடையேயான ஒப்பீட்டை விளக்க முயற்சித்துள்ளேன்.தேர்வு:
நாம் வாழ்கிற வாழ்க்கை நாம் தேர்ந்தெடுத்த ஒன்றுதான். நாம் பூமிக்கு வருவதற்கு முன்பே நம் வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்டுதான் வருகிறோம். அதுமட்டுமில்லாமல் நம் வாழ்க்கையில் நம்மோடு யார் யார் வர போகிறார்கள் என்பதும் நமக்கு தெரியும்.

எப்படி ஒரு நடிகர் தன விருப்பத்திற்க்கேற்ப ஒரு பாத்திரத்தை தேர்வு செய்து மற்ற நடிகர்களையும் தெரிந்து கொண்டு நடிக்கிறாரோ அதுபோல.

மாயை:
வாழ்க்கை ஒரு மாயை. நம் நிஜ ஸ்வரூபம், இயல்பு, குணம் ஆகியவை நமக்கு தெரியாது ஆனால் இதுதான் நான், இதுதான் என் பெயர், இதுதான் என் குணம், என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

எப்படி ஒரு நடிகர் தன் பெயர், குணம், இயல்பு வேறாயிருக்க ஒரு கற்பனை பாத்திரத்தை முழுதுமாக ஏற்று உள்வாங்கி நடிக்கிறாரோ அதுபோல.

காலம்:
மூன்று காலங்கள் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) உண்மையில் கிடையாது. காலங்கள் நிலையானது  அனைத்தும் நமது மனமே, மனதின் இயக்கம் நின்று விட்டால் அதுவே  காலத்தை கடந்த நிலை. காலத்தால் அழியாது என்று சொல்கிறோமே அது மூன்று காலத்தையும் தாண்டி என்றும் நிலைத்து நிற்பது என்று பொருள். பெரிய மஹான்கள் இறந்து விட்டால் காலமாகிவிட்டார் என்று சொல்லும் வழக்கமுண்டு. இறந்த பின் நம் முழு வாழ்க்கையையும் நாம் பார்க்க முடியும்.

எப்படி படம் உருவான பின்பு எத்தனை முறை வேண்டுமானாலும் முன் பின் நகர்த்தி நமக்கு வேண்டிய இடத்தை பார்க்க முடியுமோ அது போல.

உணர்வு:
நாம் எப்படிபட்டவராக இருந்தாலும் நம்மை நாம் நேசிக்க வேண்டும், கடைசி வரை நம்மை தவிர நம்மோடு யாரும் வரமாட்டார்கள். எனவே நமது சந்தோசத்தை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். பிறரோ, புற பொருட்களோ நமது சந்தோஷத்தை முடிவு செய்ய கூடாது. அடுத்தவரோடு நம்மை ஒப்பிட கூடாது, நமக்குரிய கடமையை முடிக்கவே நாம் இந்த உலகத்தில் தோன்றியுள்ளோம். நம்மை தவிர நமது பொறுப்பை யாராலும் துல்லியமாக செய்ய முடியாது.

ஒரு திரைப்படத்தில்  நாம் என்ன எதிர்பார்க்கிறோம் நல்ல நடிப்பு தானே?, நடிகர் உணர்வு பூரவமாக நடித்தால்தான்  அந்த படம் நன்றாக இருக்கும். கதாநாயகன் அவரது வேடத்தை உணர்ந்து செய்ய வேண்டும், அது போலவே வில்லன் பாத்திரமும். 

சுவாரஸ்யம்:

இன்பம், துன்பம், வெறுப்பு இன்னும் பிற உணர்வுகள் மற்றும் எண்ணங்களால்தான் நம் வாழ்க்கை சுவாரஸ்யம் ஆகிறது.

ஒரு படம் உணர்வு பூர்வமாகவும், சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருப்பதையே நாம் விரும்புவோம் இல்லையா அது போல.

நோக்கம்:
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே நாம் பிறந்துள்ளோம், காலம் செல்ல செல்ல நமக்கு அது தெரியும். ஒவ்வொரு பிறவியிலும் நாம் பெறும் அனுபவங்களே நம்மோடு எஞ்சி இருக்கின்றன. இறுதியில் நாம் யார் என்று முழுமையாக உணரும் வரை நாம் பிறவி எடுத்து கொண்டே இருப்போம். கண்டிப்பாக இந்த பிறவியோடு நம் வாழ்க்கை முடியப்போவதில்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஒரு படம் செல்ல செல்லத்தான் எதை நோக்கி படம் செல்கிறது என்பதை நம்மால் உணர முடியும். ஒரு நடிகர் ஒவ்வொரு படத்திலும் நடிக்க நடிக்கதான் நடிப்பு மெருகேறுகிறது.

முடிவு:
இறந்த பின் நாம் செல்வதாக கூறப்படும் சுவர்க்கம், நரகம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது, நாம் வாழும் போது நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது.

எப்படி ஒரு நடிகர் தனது பாத்திரத்தை நிறைவாக நடித்து படத்திலிருந்து வெளிவருகிறாரோ அது போல. படத்தில் இந்த பாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு தண்டணையா வழங்கப்படும்? விருது வழங்கப்படலாம்.


துன்பங்கள் ஏன்? ❓❓❓❓❓❓

** வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது, நமது மனம்தான் (கர்வம்/ அகந்தை/ நான் என்ற எண்ணம்) நமது துன்பங்கள் அனைத்திற்கும் காரணம். துன்பம், இன்பம் அனைத்தும் மனதில் எழும் எண்ணங்களே. எண்ணங்களை, அனுபவங்களை தாண்டி  வேறெதுவும் மிஞ்சி இருக்கப்போவதில்லை. அனைத்திற்கும் அறியாமையே காரணம். 

குழந்தைகள் மற்றும் பிராணிகள்:

குழந்தைகள், செல்லப்பிராணிகள் மற்றும் மரங்கள் செடி கொடிகளிடம் எல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் பிற மனிதர்களிடத்தில் மகிழ்ச்சியாகவோ, கோபமாகவோ, பொறாமையோடு அல்லது பிற எண்ணங்களோடோ இருப்போம் ஏன்?

**இங்கும் மனம்தான் (எண்ணங்களின் தொகுப்பு) முக்கிய காரணம். முதல் மூவரிடத்திலும் நாம் மறைக்க ஏதுமில்லை. அதாவது நான் நல்லவன், நான் திறமையானவன், நான் அதிகாரம் மிக்கவன் என நிரூபிக்க தேவை இல்லை அல்லது நமது இயல்பை மறைத்து அவர்களிடம் பழக அவசியமில்லை. நாம நமது இயல்பான நிலையில் இருப்போம். ஆனால் சக மனிதர்களிடத்தில் நாம் அவ்வாறு இருக்க முடிவதில்லை.

கெட்டவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ஏன்?

**கெட்டவர்கள் என்று நம்மால் அறியப்படும் மற்றவர்கள் தங்களது இயல்பான, உண்மையான நிலையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நல்லவர்கள் (ஈ, எறும்புக்கு கூட கெடுதல் நினைக்காதவர்கள் ) என்று அறியப்படுகிறவர்கள் அடுத்தவர்களுக்கு அஞ்சி தங்களை கஷ்டப்படுத்தி கொள்வார்கள் அல்லது தங்களது இயல்பை சூழ்நிலை கருதி வெளிப்படுத்தாமல் இருப்பவர்கள். 

இந்த பிரபஞ்ச ஷக்தி நம் வழியாக வெளிப்படுகிறது, அதனை முழுமையாக அதன் போக்கில் வெளிப்பட வைப்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்படி இல்லாதவர்கள் நோயாலும், மன கஷ்டத்தாலும் அவதிப்படுகிறார்கள்.

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பா ஒரு கஷ்ட்டத்தை மறைக்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற