Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Thursday, 5 December 2019

நெரூர் சதாசிவ ப்ரமேந்திராள் ஜீவ சமாதி

வெகு நாட்களுக்கு முன்பே இந்த ஜீவ சமாதி பற்றி தெரியும், போக வேண்டும் என்றும் தோன்றிக்கொண்டே இருக்கும்; ஆனால் இன்றுதான் நேரம் காலம் கூடி வந்தது போல.....அவரின் அருளை பெற. கரூரை அடுத்து 14 கி மீ தொலைவில் உள்ள நெரூர் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது சதாசிவ ப்ரமேந்திராள் அவர்களின் சமாதி. ஸ்ரீ காசி விசுவநாதர் விசாலாட்சி ஆலயமும் அதன் பின்புறம் சமாதியும் உள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ளதால் பக்தர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நினைத்தால்.....அது தவறு என்று நிரூபிப்பதை போல பக்தர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது; 13 ருபாய் கட்டணம். ஆட்டோவில் 250 ருபாய் --- செல்வதற்கு மட்டும், காத்திருந்து மீண்டும் கரூர் கூட்டி வர வேண்டுமென்றால் 400 ருபாய்.



(மூலம் :: Thedal blog)




(பேருந்து கால அட்டவணை)

தொடர்புடையவை:

ஜீவ சமாதிகள்:
Thedal

Thursday, 27 July 2017

தன்னையறிதல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

செவிவழி கேட்பதென்பது படிப்பின் வழி அறிவதைவிடவும் இனிமையான ஒன்று. தன்னையறிதல் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக படித்ததுண்டு, கேட்டதுண்டு ஆனால் தன்னையறிந்தவரே கூறிகேட்பதென்பது மிகப்பெரிய அனுபவம்தானே. அந்த வகையில் தன்னையறிதல் பற்றி கேட்டதில் என்னை பாதித்த மிக பிடித்தமான பேச்சு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுடையது.

வாழ்க்கையின் பல கட்டங்களில் பல கேள்விகள்  எழும், அப்படி எழும் கேள்விகளுக்கு பதில்களும் கிடைக்கிறது. பூட்டு விற்பவர் சாவியையும் சேர்த்துதானே விற்கிறார் அது போல உண்மையான தேடுதல் உணர்வோடு கேள்வி (இதை தான் ஓஷோ களங்கமற்ற வினா என்கிறார்) எழுந்தால் அதற்குரிய பதிலும் கிடைக்கும். ஆனால் எப்போது, எப்படி கிடைக்கும் என்று தெரியாது அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே.

உதாரணமாக "நாம் எதற்கு உழைக்க வேண்டும்?" என்ற கேள்வி பலமுறை தோன்றியதுண்டு. எதற்கு? சம்பாதிக்க, வாழ்க்கையில் முன்னேற, எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க, உழைப்பின் வெற்றியை ருசிக்க, மற்றவர்களுக்காக இப்படி எந்த பதிலும் எனக்கு திருப்தியாக தோன்றவில்லை. இதற்கு பதில் ஒரு முறை சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவில் கிடைத்தது.


இதனால் சுகிசிவம் அவர்களின் ஒளிப்படங்கள் மேலும் சிலவற்றை தேடி கொண்டிருந்தபோது கிடைத்ததுதான் 2002 ம் வருடத்தின் பாலகுமாரன் அவர்களுடைய "உன்னையறிந்தால்" தலைப்பிலான சொற்பொழிவு. சிங்கப்பூரில் நடந்த இந்த சொற்பொழிவில் எழுத்தாளர் சிவசங்கரி, சுகிசிவம் மற்றும் பாலகுமாரன் ஆகியோர் உரையாற்றினர்.

என்ன ஒரு உரை!!! என்ன ஒரு ஆற்றல்!!! புதிதாக எதுவும் கிடையாது, அவருடைய வாழ்க்கை வரலாறுதான். பல உரைகளில் பேச்சாளர்கள் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதை விளக்கி விவரிப்பார்கள். ஆனால் இவரோ தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்குகிறார். நமது மனதின் அடிநாதம் எது? தன்னையறிதலை  எங்கிருந்து துவக்குவது என்ற ஆரம்ப புள்ளியை மிக தெளிவாக சுட்டி காட்டுகிறார். 

அந்த 40 நிமிட உரை முழுமையும் மனம் வேறெங்கும் போகாது, 'இவர் இல்லாததை சொல்கிறாரோ?' என்ற எண்ணம் தோன்றாது. அந்த உரையை கேட்க்கும் போது, நமது மனதின் கண்ணை கட்டி கூட்டிப்போகும்படியான ஒரு அருமையான அனுபவத்தை உணர்வீர்கள். மீண்டும் அதே உரையை 13 வருடங்கள் கழித்து கோவையிலும் பேசியிருக்கிறார் கேட்டு பயன்பெறுங்கள்.

  1. Unnaiyarinthaal-Ezhuthu sidhar Balakumaran(உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்) (2002 Singapore Speech)
  2. Writer Balakumaran speech on Guru Darisanam in Coimbatore 2015 
தன்னையறிதல் என்றால் என்ன? எதற்கு தன்னை அறிய வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது? தன்னையறிந்து கொண்டால் சாமியாராகத்தானே போக முடியும் அது எதற்கு இப்போது? போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகிறது இவரது உரை. தன்னையறிதலுக்கு உணர்வளவில் ஒரு விழிப்பு நிலை தேவை, அந்த நிலையை அடைந்துவிட்டால் இந்த உலக வாழ்வில் நாம் மிகச்சிறந்த செயல்களை செய்ய முடியும், வாழ்வே எளிமையாகி விடும்.



Saturday, 14 January 2017

ரமண மஹரிஷி பொன்மொழிகள்:

லகில் பல மதங்கள் உள்ளது, எண்ணற்ற ஆன்மீக பெரியவர்கள் அனைத்து மதங்களிலும் தோன்றி மக்களை நல்வழி படுத்தியிருக்கிறார்கள், பல்வேறு இடங்களில் பல்வேறு புனித தளங்கள் உள்ளன, ஏன் இவ்வளவு பிரிவுகள்? எதற்க்காக அனைத்தும்? யார் சொன்னதை/சொல்வதை கேட்பது? ஏன் இவ்வளவு குழப்பங்கள்? சிலர் சொல்வது பலிக்கிறது சிலர் சொல்வது நடப்பதில்லை. 

அனைத்திற்குமான விடை மிக எளியது. ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கைதான் அனைத்திற்குமான ஆணிவேர், ஆதாரம். மதம், உணவு, மருத்துவம், தொழில், நட்பு, பகை, உறவுகள் இப்படி எதை எடுத்தாலும் அனைத்தின் அடிநாதமும் நமது நம்பிக்கை மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

அதாவது நம் வாழ்க்கை இயங்குவது முதலில் எண்ண வெளியில்தான் (In Mental Space), அங்கு ஒரு எண்ணம் உருவான பிறகுதான் இந்த உலகில் (Physical Space) செயலாக மாறுகிறது. முழுமையான நம்பிக்கையோடு ஒரு செயலில் இறங்கினால் என்றும் வெற்றியே. கடவுள் நம்பிக்கையானாலும் சரி, மருத்துவ நம்பிக்கையானாலும் சரி, உறவுகள் மீது வைக்கும் நம்பிக்கையானாலும் சரி நாம் எந்த அளவு நம்புகிறோம் என்பதை பொறுத்துதான் நமக்கு கிடைக்கும் பலன்களும் அமையும்.

இந்த நம்பிக்கை பிறரிடமிருந்து வரலாம் அல்லது இயற்கையாகவே நமக்குள்ளிருந்து வரலாம். ஆனால் பிறரின் நம்பிக்கைகளை நம்புவதை விட நமது திடமான நம்பிக்கையை கொண்டு நமது வாழ்வை வாழும் போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் பிறக்கிறது. அதாவது பிறர் நம்புகிறார்களே அதனால்  நாமும் நம்பினால் நமக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

ஒருவரின் செயல்கள், வாழ்க்கை, உபதேசங்கள் இவற்றின் மூலம் நம்பிக்கை பிறந்து அதை நம்புவது வேறு விஷயம். அந்த வகையில் எனக்கு இயற்கையாகவே ஈர்ப்பு ஏற்பட்ட மஹான்கள் மிக சிலரில் ரமண மகரிஷியும் ஒருவர். "நான்  யார்?" இந்த ஒற்றை கேள்வியில் அனைத்தையும் அடக்கியவர். அவரது விளக்கங்கள் அனைத்தும் இந்த கேள்வியை முன்னிறுத்தியே இருக்கும்.  அதில் சிலவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன்.



3



மனசு ஒரு மந்திர சாவி மாதிரி நம்பினால் எந்த அதிசயத்தையும் நடத்திக் காட்டும்

Never Stop Believing Because Miracles Happen Every Day
 

Thursday, 22 September 2016

ஜீவ சமாதிகள்:

உயரிய உண்மையை தெரிந்து கொண்ட மஹான்கள் தமக்கு விதிக்கப்பட்ட உலக பணியை முடித்து, தம் இறுதி காலத்தை தெரிந்து கொண்டு தாங்களாகவே உடலை விடுத்து ப்ரபஞ்சத்தோடு ஒன்று படுவதே சமாதிநிலை. ஜீவ சமாதி நிலையில் உடல் உயிர்ப்போடு இருக்கும் ஆனால் உயிரோடோ அல்லது இறந்தோ போகாது, உயிர் ஆற்றல் அந்த உடலை சுற்றி இருந்துகொண்டே இருக்கும். அந்த உடல் எந்த விதமான இயற்க்கை நிகழ்விற்கும் உட்படாது, மனது மற்றும் உடல் சம்பந்தமான இயக்கங்கள் அற்ற நிலை. அத்தகைய ஜீவ சமாதிகள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன, அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.


1) மாயம்மா ஜீவ சமாதி- சேலம்



 
http://knowingyourself1.blogspot.in/2013/07/mayamma-jeeva-samadhi-salem.html

2) கோடீஸ்வர ஸ்வாமிகள்- புரவிபாளையம், பொள்ளாச்சி



http://www.indiadivine.org/kodi-swamigal-the-300-year-old-saint-of-puravipalayam/

3) சதாசிவ ப்ரமேந்திரர் மஹா சந்நிதி- நெரூர், கரூர்



http://nerureswarartemple.tnhrce.in/warning.html
http://www.tamilbrahmins.com/showthread.php?t=7663&page=2&s=1003624efabcaaa099c1dd928aa34c26

4) குகை பெருமாள் ஸ்வாமி- ரெட்டியார் மடம், பொள்ளாச்சி

http://authoor.blogspot.in/2016/07/2.html

தமிழகத்தில் உள்ள பல ஜீவ சமாதிகள் பற்றிய தொகுப்பு மற்றும் வாகன போக்குவரத்திற்கு கீழ்கண்ட இணைய தளங்களை பாருங்கள்.

http://asksolutionmdu.blogspot.in/2012/07/blog-post_19.html 
http://spiritualcbe.blogspot.in/search/label/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D 
https://soonyata.home.xs4all.nl/jeevasamadhi.htm
http://www.samadhitours.com/
.
Praba Kara
18/39 Bavaji Nagar Chengam Road
Thiruvannamalai
606 603 Tamil Nadu
India
Phone: +919487233458
Email: prabukara@yahoo.co.in




கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...