Monday 26 September 2016

படித்ததில் பிடித்தது 4

1) இரண்டாவதாக பிடித்த வேலையை முழு நேர வேலையாக வைத்துக்கொள்; மிகவும் பிடித்த வேலையை பகுதி நேர வேலையாக வாழ்நாள் முழுதும் பத்திரமாக வைத்துக்கொள்.
--கொரியன் நாடகம்

2) கடந்த காலத்தில் மிச்சம் வைக்கும் எந்த செயலும்  மீண்டும் நம்மை வந்தடையும், நல்லதானாலும் சரி கெட்டதானாலும் சரி.

3) மனிதனின் கடமை பிரபஞ்சத்தின் பிரச்சனையை தீர்த்துவைப்பதில்லை, தான் செய்ய வேண்டிய செயலை சரியாய் செய்வதே.

4) சரியாக செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.

5) சிடு மூஞ்சி கடை வைக்க கூடாது.

6) ஒரு புது தொடக்கம் தான் நமக்கு நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று காட்டும்.
--பதிவர் யாசிர் அஸனப்பா

7) நினைப்பது அல்ல நீ... (உனக்கு)  நிரூபிப்பதே நீ...
-ஜாக்கி சேகர்

8) Man's greatness lies in his power of THOUGHT

9) சந்தோஷமான நினைவுகளே உங்கள் உற்ற நண்பன், கடினமான நேரங்களில் அவனை அழைத்து கொள்ளுங்கள்.
--கொரியன் நாடகம்

10)  கற்றுக்கொடுப்பவர்கள் எல்லோரும் ஆசிரியர்கள் கிடையாது; யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

11) சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே.

12) பயணம் கற்றுக்கொடுக்கும் முதல் பாடமே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். பயணத்தில் நோயுற்றால் பயணம் தடைப்படுவதோடு மனதில் காரணமற்ற நூறு பயங்கள் கவ்விக்கொள்ளத் துவங்கிவிடும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே பயம் கிளைவிட்டு நம்மை முடக்கிவிடும்.

       அதே போல வாழ்க்கை பயணத்தில் மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் தான் பயத்தின் பிடியில் சிக்காமல் வாழ்வை சுலபமாக கடக்க முடியும்.
--எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்

தொடர்புடையவை...
படித்ததில் பிடித்தது 5
படித்ததில் பிடித்தது 3
படித்ததில் பிடித்தது 2
படித்ததில் பிடித்தது 1



 




2 comments:

  1. 7) பிறருக்கு அறிவுரை சொல்லும் போது 6 பாயிண்டோடு நிருத்தக்கூடாது.

    கொஞ்சம் பெருசா எழுதுங்க சகோ. பேஸ்புக் பதிவுமாதிரி இருக்கு. (அங்க மட்டும் என்ன வாழுதாம்னு கேட்க கூடாது, அறிவுரை என்பது அடுத்தவனுக்கு மட்டும்தான்.)

    ReplyDelete
    Replies
    1. இந்தபதிவில் மேலும் சிலவற்றை சேர்க்க வேண்டும் நண்பரே, காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதையே மறந்துவிடும் அபார நினைவுதிறன் என்னுடையது, அதனால்தான் பதிவு செய்ய நினைத்ததை உடனே பததிவிட்டேன்.

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...