Sunday 25 September 2016

Korean Dramas: My favourite

வீட்டில் இருப்பவர்கள் நாடகமோ, புராண தொடரோ, அழுகாச்சி சீரியல்களோ, அடாவடி சீரியல்களோ, வட நாட்டு தொடர்களோ பார்க்கும் போது எரிச்சலாக இருக்கும், சில சமயம் பரிதாபமாக கூட இருக்கும், இப்படி இதை போய் விழுந்து விழுந்து பார்க்கிறார்களே என்று.



ஒரு முறை ஒரு படம் பற்றி தேடி கொண்டிருக்கையில், ஒரு கொரியன் நாடகம்  கிடைத்தது, பார்த்தேன் நன்றாக இருந்தது. அதில் நடித்த நடிகை கொள்ளை அழகு, பிறகு மேலும் பல கொரியன் ட்ராமாக்களை பார்க்க நேர்ந்தது, அனைத்துமே அருமை, அட்டகாசம் வகை. வாரத்தில் திங்கள், செவ்வாய் 2 நாட்கள் மட்டுமே நாடகம், அனைத்து நாடகங்களுமே 16-20 பகுதிதான். இப்பொழுதெல்லாம் எப்படா திங்கள் செவ்வாய் வரும் என்று இருக்கிறது. இப்போது தெரிகிறது ஏன் அவர்கள் எல்லாம் நாடகத்தை அப்படி பார்க்கிறார்கள் என்று!!!!! நாமும் நாடக (கொரிய) பிரியர் ஆகிவிட்டோம்.



Some favorite Korean Dramas :

1) Page Turner :

மேல் நிலை பள்ளியில் பயிலும் 2 நண்பர்களுக்கிடையில் திறமைக்காக நிகழும் ego மோதல் மற்றும் பார்வை இழந்த பெண்ணிற்கு (நாயகி கொள்ளை அழகு ) உதவ வரும் ஒருவன் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் நட்பு, ஈகோ மற்றும் திறமை (பியானோ வாசிப்பு) பற்றிய கதை. 3 பகுதி தான்


2) Hey Ghost, Lets Fight:

இதுவும் பள்ளியில் நடக்கும் ஒரு கதைதான். கோமா நிலையில் இருக்கும் உடலை விட்டு அலையும் ஆத்மா, பேயோட்டும் உப தொழில் செய்து வரும் பணத்தில் படிக்கும் ஹீரோ, ஹீரோவின் 2 நண்பர்கள், ஒரு சாமியார் மற்றும் தன்னை அழிக்கக்கூடிய  ஒரு மந்திர மாலையை அழிக்க துடிக்கும் ஒரு பேய் ஆகியோருக்கு இடையில் நடக்கும் கதை.


3) Healer :

சிறந்த action, thriller and romantic ட்ராமா. computer hacking மூலம் பல திருட்டு வேலைகள் செய்து பிழைத்து வரும் ஹீரோ, பத்திரிக்கை துறையில் பெரிய ஆளாக நினைக்கும் ஹீரோயின், தாங்கள் நினைக்கும் படி தான் நாடு செல்ல வேண்டும் என்று நினைக்கும் அரசியல் கட்சி, உண்மை தெரிந்து பிழையான வரலாற்றை சரி செய்ய நினைக்கும் நேர்மையான பத்திரிக்கையாளர் ஆகியோருக்கு இடையே நடக்கும் கதை. இது வரை இந்த ட்ராமா தான் the best.


4) City  Hunter :

ஒரு secret operation செய்ய போகும் 20 படை வீரர்களை அந்த நாடே அரசியல் காரணங்களுக்காக கொலை செய்கிறது, அதில் தப்பி பிழைத்த ஒரு அதிகாரி தன் நண்பனின் மகனை கொண்டு துரோகம் செய்த அதிகாரிகளை பழிவாங்கும் கதை. கிட்டத்தட்ட இந்த கதையில் இருந்து தான் மேற்சொன்ன Healer எடுத்திருப்பார்கள் போல, இரண்டுமே ஒரே பழிவாங்கும் கதையம்சம் கொண்டவை, இரண்டிலுமே ஒரே ஹீரோயின் தான் பிரமாதமான நடிப்பு.


5) Descendants of The Sun :

ஒரு ராணுவ வீரன் மற்றும் மருத்துவர் இடையிலான காதல், ராணுவத்தில் பணிபுரியும் இருவர்கிடையேயான காதல், கடமை இவற்றை மையமாக கொண்டு stylish ஆக எடுக்கப்பட்ட அருமையான நாடகம்.


6) Doctors Crush:

மருத்துவராயிருந்து ஆசிரியராகி பின் மீண்டும் மருத்துவராகும் ஹீரோ, பாட்டியுடன் வசித்து மாணவியாக வந்து ஆசிரியரை காதலித்து மருத்துவராகும் ஹீரோயின், மருத்துவத்தின் மூலம் காசு பார்க்க நினைக்கும் மருத்துவமனையின் chairman , அதை தடுக்க நினைக்கும் ஹீரோவின் அப்பா, 2 முக்கோண காதல் இவற்றை உள்ளடக்கி செல்லும் அருமையான ட்ராமா. இந்த ட்ராமாக்களை drama4u.org  என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


7) Moon Lovers: Scarlet Heart Ryeo:

நிகழ்காலத்தில்  காதல் தோல்வியால் வருத்தத்தில் இருக்கும் நாயகி சூரிய கிரஹணத்தின் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி மயக்கமுற்று 10 நூற்றாண்டுகளுக்கு முன் அவரை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் உடலில் விழித்தெழுகிறாள். அந்த நூற்றாண்டில் அரச குமாரனுடனான காதல், அரச அதிகாரத்தில் நாயகியால் ஏற்படும் குழப்பம், அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் அரசியல், நாயகி எப்படி இந்த நூற்றாண்டுக்கு வருகிறாள் ஆகியவற்றை கலந்து கட்டிய ஒரு நாடகம்.


8) Moonlight Drawn By Clouds / Love in the Moonlight:

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண் வேஷத்தில் இருக்கும் நாயகி அரசகுமாரனின் பணியாள் ஆகிறாள் அதன் பிறகான நிகழ்வுகள், முக்கோண காதல, அரசியல் போட்டி, புரட்சி மற்றும் நட்ப்பை சொல்லும் நாடகம்.


9) The K2:

அருமையான action drama. ஹீலர் நாடகத்தின் ஹீரோதான் இதிலும் ஹீரோ, சண்டை காட்சிகள் அனைத்திலும் மிரட்டலான நடிப்பு. பாதுகாப்பு பணியில் இருக்கும் போது வீண் பழி சுமத்த பட்டதால் தனது நாட்டிலேயே மறைந்து வாழும் நாயகன் ஒரு நிகழ்வின் மூலம் அரசியல் தலைவரின் மனைவியின் மெய்காப்பாளராக மாறுகிறார். அதன் பிறகான வாழ்க்கை, அரசியல் தலைவரின் மகளுடன் காதல், அரசியல் போட்டி உள்ளிட்டவற்றை action கலந்த விறுவிறுப்புடன் விவரிக்கிறது நாடகம்.



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...