நண்பனே...
கொட்டாம்பட்டி உன் ஊர் என்றாலும்
கொட்டகை அடித்தாய் என் இதயத்தில்,
நீண்ட நாட்கள் சேர்ந்திருக்கவில்லை என்றாலும்
நீண்டு கொண்டே வருகிறது நம் நட்பு இதயத்தில்,
மலைக்க வைக்கும் இடர்பாடுகள் உண்டென்றாலும்
மலைபோலுன்னை சாய்க்க முடியாது சுலபத்தில்,
பல வகை சிரிப்புகள் உண்டென்றாலும்
பளிச்சென மின்னலடிப்பது உன்சிரிப்பு என் ஞாபகத்தில்,
இயற்பியலில் முனைவர் பட்டம் உண்டென்றாலும்
இயல்பிலே தன முனைப்பு உன்னிடத்தில்,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழி சொன்னாலும்
தைவான் செல்வதால் தை திங்களுக்கே வழி உன்னிடத்தில்.
சென்று வா, வாழ்வில் புது அனுபவம் பெற்று வா,
உன் நடப்பு வட்டம் பெருகட்டும்,
உன் சிந்தனை புதிய தலைமுறையை உருவாக்கட்டும்.
என்னவளே...
என் எண்ண வெளியில் நிறைந்தவள்
என் குருதி நீரில் கரைந்தவள்
என் இதய நெருப்பில் எரிந்தவள்
என் மூச்சு காற்றில் கலந்தவள்
என் பசுமை நிலத்தில் விழுந்தவள்-இருந்தும்
எனதுடல் மிதக்கிறதே - என்னவளே
புவி ஈர்த்தும் தரையில் இல்லை, என் கால்கள்
உயிர் இருந்தும் துடிக்கவில்லை, என் இதயம்
இமை இருந்தும் மூடவில்லை, என் கண்கள்
நினைவிருந்தும் நானில்லை, என் நினைவில்
இருக்குதடி உடல் இவ்விடத்தில்,
வந்ததடி உயிர் உன்னிடத்தில்- என்னவளே
தரைமீது நடக்கவுமில்லை
தண்ணீரில் மிதக்கவுமில்லை
தலை நிமிர்ந்து பார்க்கவுமில்லை
தலை சுற்றி வீழவுமில்லை
முயற்சி செய்து பாராமலுமில்லை
நான் நானாக இருக்க- என்னவளே
No comments:
Post a Comment