1) உண்மை ஒன்றே ஒன்றுதான்; பொய்கள்தான் பல.
2) நமது மனங்கள் சிறியவை, புரிதல் ஆற்றலும் குறுகியது. முழுமையை பார்க்க நம்மால் முடிவதில்லை, ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்கிறோம்.
3) வெறுப்பு கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் மட்டுமே இருக்க கூடியது; அன்புக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை.
4) புலன்களை நம்பாதே, விழிப்புணர்வை நம்பு; விழிப்புணர்வு புலன்களுக்கு பின்னால் மறைந்திருப்பது.
5) பிறருடைய சத்தியத்தை நம்ப ஆரம்பிக்கும் போது நீ சிரமப்பட்டுதான் போகிறாய்.
6) மனம் என்பது சேர்த்து வைத்து கொண்டிருக்கும் எண்ணங்கள், கடந்த காலத்தின் குப்பை கூளம், நீ அதனிடமிருந்து முழுக்க வித்தியாசமானவன்.
-ஓஷோ
7) தினமும் 2 மணிநேரத்தை உங்களுக்காக இல்லாமல், லாப நோக்கத்திக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகவும், பொதுநலனுக்காகவும் செலவிடுங்கள் வாழ்க்கை பயணம் பெரிதும் இனிக்கும், முதுமை இனிமையாக கழியும். முதியோர் இல்லங்களுக்கு சென்று முதியோருடன் பேசுங்கள்.
-வரலொட்டி ரெங்கசாமி
கேட்டதில் பிடித்தது
8) மனுஷனோட மனுஷன் சேர்ந்து வாழறதுதானே சந்தோசம், இது தெரியாத அறிவு என்ன அறிவு?
-தம்பி ராமய்யா
9) வேணும்னு சொல்றதுல இல்ல, வேண்டாம் அப்படிங்கறத அழுத்தி சொல்றதுதான் கெத்து.
-பாபி சிம்ஹா
10) KNOWING IS OWNING
-Sherlock Holmes, Season-3(Episode-3)
அனைத்தும் அருமை
ReplyDeleteவருகைக்கும், பார்வைக்கும், இடுகைக்கும் நன்றி ஸ்ரீ. தங்களின் விதைக்கலாம் (vithaikkalam.blogspot.in) பார்த்தேன் நல்ல முன் மாதிரி.
DeleteCan you pls give your contact email if
ReplyDeleteவருகைக்கு நன்றி முரளி அவர்களே. krsomes@gmail.com
ReplyDelete