Saturday, 1 October 2016

15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:

தினமலர் நாளிதழில் "சொல்கிறார்கள்" பகுதியில் வந்த சிலரது செய்திகளை  தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டில் குறைந்த லாபத்தை பெற கூடிய தொழில்கள் செய்கிறார்கள். 500 முதல் 20000 முதலீட்டில் ஆரம்பித்து 1000 முதல் 40000 வரை லாபம் பெற கூடிய தொழில்கள். லாபம், பணம் இவற்றை தாண்டி ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை என்பதே இவர்கள் அனைவரின் அறிவுரை.

1) மூலிகை சூப் ரெடிமிக்ஸ் வியாபாரம்: (Herbal  Soup Ready mix)

மதுரையை சேர்ந்த அனுராதா என்பவர் " அனு கிரீன்சூப்" என்ற பெயரில் இதை செய்து வருகிறார். சர்க்கரை நோய் கட்டுப்படுத்த, உணவுக்குழாய் சுத்தப்படுத்த, மஞ்சள் காமாலை குணப்படுத்த, ஞாபக சக்தியை அதிகப்படுத்த , மூட்டு வலி குணமாக்க, உடல் எடையை குறைக்க, சளி இருமல் போக்க என 7 வகையான சூப் மிக்ஸ் கூடவே மூலிகை டீ மற்றும் ஜுஸ் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 81444-55977.


2) அப்பளம் வியாபாரம்:

மதுரையை சேர்ந்த ரேவதி என்பவர் அப்பளம் பிசினஸ் செய்து வருகிறார். உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம் என்று வித விதமாக அப்பளம் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 94429-38305.
3) சிறுதானிய பிஸ்கட் வியாபாரம்:
 
சென்னையை சேர்ந்த அக்லீசியா என்பவர் வீட்டிலேயே சிறுதானியங்களை பயன்படுத்தி பிஸ்கட், முறுக்கு, அதிரசம் செய்து விற்பனை செய்கிறார். இதற்க்கு குக்கர் ஒன்றே போதும் என்பவர் வியாபாரத்திற்காக மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தி வருகிறார், தொடர்புக்கு 98431-80300.

  
4) சிறுதானிய உணவு வியாபாரம்:

30 வகையான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திருவையாரை சேர்ந்தவரும், சிறுதானிய உணவு தயாரிப்புக்காக மத்திய அரசின் ஸ்ருஷ்டி சம்மான் விருது பெற்றவரும், சுகா டயட் நாச்சுரல்ஸ் புட் நிறுவனருமான ராஜேஸ்வரி ரவிகுமார். ஆர்வமும், தொடர் புத்தக வாசிப்புமே தனது இந்த நிலைக்கு காரணம் எனினும் தனது கணவரின் பங்கும் முக்கியமானது என்கிறார், தொடர்புக்கு 94431 63206.


5)  சாக்லேட் வியாபாரம்:

விருதுநகரை சேர்ந்த கல்லூரி மாணவி அர்ஜிதா இதை செய்து வருகிறார். இயந்திரங்களின் விலை 20,000 - 30,000 ரூபாய் வரை இருக்கும், மூலதன பொருட்களுக்கு 5000 ரூபாய் போதும் என்கிறார்.6) கை மற்றும் வீடு சுத்தம் செய்யும் க்ளீனர்கள் வியாபாரம்:

பினாயில், ஹேண்ட் வாஷ், புளோர் க்ளீனர், டாய்லட் க்ளீனர் மற்றும் சோப் ஆயில் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் கலைசெல்வி அவர்கள் தனது தயாரிப்புகளில் துளியும் ஆசிட் இல்லை என்கிறார், தொடர்புக்கு 94441 74865.


7) குஷன் மற்றும் தலையணை தயாரிப்பு வியாபாரம்:

குஷன் மற்றும் தலையணை தயாரிக்க ஆர்வமும், புதிய புதிய டிஸைன் உருவாக்கும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த செல்விதிலீப் என்பவர், தொடர்புக்கு  98404 37131.


8) மூலிகை குளியல் பொடி வியாபாரம்:

கற்றாழை, நெல்லி முல்லை, ஆவாரம் பூ, செம்பருத்தி, துளசி, கோரக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பேஸ் வாஷ் மற்றும் குளியல் பொடி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையை சேர்ந்த சோபனா என்பவர், தொடர்புக்கு 95001-48840.


9) ஐஸ்கிரீம் வியாபாரம்:

தனது மகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுக்க போய் அதுவே இன்று முழு நேர தொழிலாக மாறியதாக கூறும் திருவள்ளூரை சேர்ந்த பிருந்தா அவர்கள், சீசனை பொறுத்து இரண்டு மூன்று மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார், தொடர்புக்கு 91761 89314.


10) சணல் பை தயாரிப்பு வியாபாரம்:

பர்ஸ், கை பை, சுற்றுலா பை, உணவு பை, தாம்பூல பை, மளிகை சரக்கு வாங்கும் பிக் ஷாப்பர் பை என பல வகையான பைகளை தயாரிக்கலாம் அதோடு கூட மொபைல் பவுச், டேபிள் மேட், தோரணம்  ஆகியவற்றையும் சணல் மூலம் தயாரிக்கலாம் என கூறுகிறார் மடிப்பக்கத்தை சேர்ந்த கிரிஜா அவர்கள். மூல பொருட்களுக்கு 2000 மற்றும் இயந்திரத்திற்கு 8000 ரூபாய் என மொத்தமாக 10000 முதலீடாக போட்டு வீட்டிலிருந்த படியே தொழில் செய்யலாம் என்கிறார்.
 11) மசாலா தயாரிப்பு வியாபாரம்:

மத்திய அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மசாலா தயாரிப்பு தொழிலை கற்று கொண்டு இன்று சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, குருமா மசாலா, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி, ரச பொடி, அடை மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ், தேங்காய் சாத பொடி, தக்காளி குழம்பு, வத்த குழம்பு  என்று பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த சித்ரா அவர்கள், தொடர்புக்கு 95241-35003.


12) ஊறுகாய் வியாபாரம்:

கடந்த 18 வருடங்களாக பாகற்காய், நார்த்தங்காய், இஞ்சி, நெல்லிக்காய், வெஜிடபிள் மிக்ஸ், கருவேப்பிலை, புதினா, வடுமாங்காய், எலுமிச்சை ஊறுகாய் என 35 வகையான ஊறுகாய்களை செய்து விற்று வருகிறார் மதுரை ஆண்டிபட்டியை சேர்ந்த லட்சுமி, மீனாஸ் ஊறுகையின் நிறுவனரும் இவரே.13) நட்ஸ் அண்ட் ட்ரை ப்ரூட்ஸ் வியாபாரம்: (Nuts and Dry Fruits Business)

மேல்தட்டு, நடுத்தர மக்கள் பிறர் வீடுகளுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும் போது தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் அத்தி, பேரீச்சை போன்றவற்றை சாக்லேட்டுடனோ  அல்லது தனியாகவோ பேக் செய்ததைத்தான் வாங்கி செல்கின்றனர் அதனால் திட்டமிட்டு உழைத்தால் நல்ல வருமானம் பெறலாம் என்கிறார் பவானிதேவி அவர்கள்.

14) ஜவுளி வியாபாரம்:

கண்ணை கவரும் டிசைன், விளம்பரம், ஏஸியுடன் கூடிய அடுக்கு மாடி துணிக்கடைகள் இருக்கும் இந்த காலத்திலும் கடந்த 15 வருடங்களாக வீடு வீடாக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் பழைய வண்ணார பேட்டையை சேர்ந்த ராணி அவர்கள். ப்ளவுஸ் பிட், சேலை, உள்பாவாடை, வேட்டி, சட்டைகளை முதலில் விற்க ஆரம்பித்திருக்கிறார், துணியின் தரத்தினாலும் இவரது அணுகுமுறையினாலும் இன்று சென்னை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள இவருக்கு மகன்களும், மருமகள்களும் வியாபாரத்தில் உதவுகின்றனர்.


15) தேனீ வளர்ப்பு:

"வீட்டிற்கு ஒரு தேனீ பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி"ங்கிற அடிப்படையோட திருமதி ஜோஸ்பின் அவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள்ல, தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியை வழங்குறாங்க. தொடர்புக்கு...மதுரை கடச்சனேந்தல் விபிஸ் இயற்கை பண்ணை, 98655 55047.** முதலில் நமக்கு ஆர்வம் உள்ள தொழிலை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
** அதில் பயிற்சி பெற்று நம் மீதான நமது நம்பிக்கையை உயர்த்த வேண்டும்.
** நம் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டுகாரர்கள், உறவினர்கள் இவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
** பின் லாப நோக்கம் பாராமல் சிறிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும்.
** பின்னூட்டங்களை பெற்று குறை இருப்பின் நிவர்த்தி செய்து தொழிலை விரிவாக்க வேண்டும்.
** தொழில் வளர நமது நேரடி கண்காணிப்பும், தரமும், பொறுமையும் அவசியம்.
** பிறகு பணம் நாம் கேட்காமலேயே நம்மிடம் வரும். 

வியாபார நோக்கமின்றி திருப்திக்காக சில வேலைகள்:

1) கோலம் வரைதல்: 

25 ஆண்டுகளில் 10 ஆயிரம் வகை கோலங்கள் போட்டு, கோலத்திற்க்காக கலைமாமணி விருது வாங்கியிருக்கிறார் மாலதி அவர்கள். கல் உப்பு, தூள் உப்பு, மரத்தூள், நவதானியம், அரிசி, கலர் வத்தல், மணி, முத்து, மணல், கற்பூரம் போன்ற நம் வீட்டில் கிடைக்க கூடிய எளிமையான பொருட்களை பயன்படுத்தியே புதுமையான கோலம் போடலாம் என்கிறார் இவர். பிரெஞ் சாக் பவுடர் பயன்படுத்தி தண்ணீருக்கு அடியிலும், தண்ணீருக்கு மேலும் கோலம் போடலாமாம். திருமணங்களில் மணமக்களின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைவாராம் இவர், அதனாலேயே பத்திரிக்கையில் கூட "மாலதியின் மணமக்கள் கோலம்" என்று போடும் அளவிற்கு பிரபலம் இவர். லலிதா கலை பயிற்சி வகுப்பு மூலமாக கோலம் வகுப்பு எடுத்து வரும் இவரின் லட்சியம் கோலத்தில் கின்னஸ் சாதனை செய்வதுதானாம்.


2) மாடி தோட்டம்/ வீட்டு தோட்டம் :

2 அடி நிலத்தில் ஒரு சவாலாக செடி வளர்க்க ஆரம்பித்து இன்று 20 சென்ட் நிலத்தில் புடலை, சுரைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், கொத்தவரை, தக்காளி, மிளகாய், சோளம், 20 வகை கீரைகள் ஆகியவற்றை இயற்க்கை வேளாண் முறையில் வளர்த்து இயற்க்கை அங்காடிக்கு விற்பனைக்கு கொடுத்தும், தனியே நிலம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறார் ஏ.எம். மாலதி அவர்கள். ஒற்றை பயிர் முறையை விட்டு கலப்பு பயிர் வேளாண்மை செய்து வருகிறார் இவர், தொடர்புக்கு 9791072194. (இப்போ நான் விவசாயி : பயிர்களைத் தேடும் பெண் டிடெக்டிவ் )


3) அக்குபஞ்சர் மருத்துவம்:

நாடி பரிசோதனை மூலம் 12 உடல் உள் உறுப்புகளின் நிலையறிந்து தலை முடி தடிமனுடைய ஊசியை கொண்டு உடலின் சக்தி ஓட்டங்களை சரி செய்து நோய் தீர்க்கும் ஒரு மருந்தில்லா மருத்துவமுறையே அக்குபஞ்சர். ஊசிக்கு பதிலாக விரல்களை கொண்டு அழுத்தினால் அது அக்குபிரஷர் மருத்துவம். கோவை, மதுரை, சேலம், காரைக்குடியில் உள்ள சில தனியார் நிலையங்களிலும் மற்றும் சில பல்கலைக்கழகங்களிலும் படித்து இந்த மருத்துவ முறையை நாம் மேற்கொள்ளலாம். மருத்துவர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் வெளியிடும்  "ஹெல்த் டைம்" பத்திரிக்கையில் மேலும் விபரங்களை பெறலாம். 


மேலும் சில இணைப்புகள்:

1) http://owenbusiness.blogspot.in/2015/08/20.html 
2) http://thozhil.paramprojects.com/node/15 
3) குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்கள்!
4)வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்   
5) லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag  
6) http://siruthozhilgal.blogspot.in/ 
7) Entrepreneurship Development Institute (EDI)
8) தேனீ 
 

9 comments:

 1. மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டும் பெரும்பாலான மக்கள் சிந்திக்கும் முக்கியமான விஷயம் - குறைந்த முதலீட்டில், ஏதாவது ஒரு நல்ல லாபம் தரும் தொழிலை ஆரம்பித்து எப்படியாவது வாழ்வில் முன்னுக்கு வந்துவிட வேண்டும். என்பதே. அவர்களுக்கு பொருத்தமான கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள், இந்த தொழில்களை முழு நேர தொழிலாகவும் செய்யலாம் அல்லது குடும்பத்தில் வரும் முதன்மை வருவாயோடு சேர்த்து ஏதாவது தொழில் செய்து சிறிது சேமிக்கலாம் என்ற நோக்கிலும் செய்யலாம். நமது நாடு கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு அனைவருக்கும் வேலை வேண்டுமெனில் அல்லது இருக்கும் விலைவாசிக்கு சிறிதாவது சேமிக்க வேண்டுமெனில் சிறுதொழில்களே நடுத்தர மக்களுக்கு சிறந்தது. தங்களது கருத்திற்கு நன்றி @Tamil.

   Delete
 2. பயனுள்ள தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி @sengutblogger.

   Delete
 3. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி @ENGLISH GRAMMAR USAGE.

   Delete
 4. மிக்க நனறி 🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி @Divya Sree.

   Delete

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற