மண் குளியல் என்பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் முழுவதிலுமே கடைபிடிக்கப்படுகிறது. தசை இறுக்கத்தை நீக்க, உடல் வலிகளை போக்க, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, தோல் ஒவ்வாமைகளை போக்க மற்றும் தோலை மிருதுவாக்க என்று பல பயன்களை தர கூடியது மண்குளியல். பொதுவாக மனிதர்கள் பயன்படுத்தாத இடங்களில் உள்ள தூய்மையான களிமண், செம்மண் மற்றும் புற்று மண் ஆகியவற்றை மண் குளியலுக்கு பயன்படுத்தலாம். இவற்றில் களிமண், வண்டல் மண், மணல் மற்றும் நீர் கலந்து காணப்படுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து உள்ளது. உடலில் தோல் தான் மிகப்பெரிய சுவாச உறுப்பு, அதன் மூலம் தான் அதிகப்படியான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. எனவே தோலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு சமானம்.
என் அனுபவம்: கிராமங்களில் கிணற்று பாசனம் உள்ள இடங்களில் தொட்டி கட்டி வைத்திருப்பார்கள், கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீர் தொட்டியில் விழுந்து பின் வாய்க்கால் வழியாக வயலுக்கு செல்லும். அந்த தொட்டியில் பாசான், மண் ஆகியவை கலந்திருக்கும் (சில தொட்டிகள் சுத்தமாக இருக்கும் அது வேறு விஷயம்). சிறு வயதில் எனக்கு நீர் ஒவ்வாமை இருந்தது, அதாவது அசுத்தமான தொட்டி நீரில் குளிக்கும் போது உடல் முழுதும் எறும்பு கடித்தார் போல சிறு சிறு தடிப்புகளாக வந்துவிடும் கூடவே அரிக்கவும் செய்யும். பல மாத்திரைகள், லோஷன்கள் தடவியும் பிரயோசனமில்லை. யாரோ ஒருவர் போகிற போக்கில் "புத்து மண்ண கொழச்சி 2 நாள் தடவுங்க சரியாப்போயிடும்" என்று சொல்லி செல்ல அதை முயற்சி செய்து பார்த்தேன் சரியானது, அதன் பின் கிட்டத்தட்ட 15 வருடங்களாக எனக்கு எந்த தோல் ஒவ்வாமையும் வந்ததில்லை. அந்த யாரோ ஒருவருக்கு நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை இயற்கை உணவு என்ற தளத்திலிருந்து அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.
(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த
மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல்
நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை
குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி
அடைய வைக்கிறது.
(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.
(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.
(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.
(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.
(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.
(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.
சில தொடர்புடைய தளங்கள்:
i ) மண் குளியல்
ii ) sithamaruthuvam
v ) Mud Baths
No comments:
Post a Comment