வா மணிகண்டன் அவர்கள் தளத்தில் படித்த பிடித்த செய்தியை இங்கே தருகிறேன் (சித்த மருத்துவக் குறிப்புகள்)
உடல் உஷ்ணம்:
** சிறுநீர்த் தொற்று இருந்தால் (சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால்)
லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு
டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின்
ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம்.
** சிறுநீர் தொற்று இல்லாமல் சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தால் உடற்சூடுதான் முக்கிய காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டை தணிக்க இது நல்ல வழி.
** கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களுடன் குறுமிளகு 6 சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால் கட்டைவிரல்களிலும் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும்.
சுரப்பிகள் வீக்கம் (அ) கட்டி:
** பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில்
inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் (நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்)
பயன் தரக் கூடியது. கழற்சி காயுடன்
ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு
வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும்.
** இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர்
உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப்
பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன்
தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது
பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப்
பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment