Thursday 25 May 2017

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று

மாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி படிப்பிற்கு பின் என்ன செய்ய போகிறோம் என்ற ஒரு கேள்வியோடு உள்நுழைந்து அதற்க்கு விடையுடன் வெளிவந்தால் அதைவிட இனிமை எதுவும் இருக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கடைபிடித்தால் கல்லூரியை விட்டு தன்னம்பிக்கையோடு வெளி வரலாம்.


1) ஆங்கில வழி உரையாடல் சரளமாக பேச தெரிந்துகொள்வது பல வழிகளில் உதவும். உங்களை பற்றி (Self Introduction) சொல்லச் சொன்னால் குறைந்தது 1 நிமிடம் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். இந்த இணைப்பில் சில உதாரணங்கள் உள்ளது (HOW TO GIVE SELF INTRODUCTION IN ITERVIEW). அதோடில்லாமல் உங்களுக்கு பிடித்த பாடம் (Favorite subject) பற்றி பேசச் சொன்னால் 5 நிமிடங்கள் பேசுமளவிற்கு ஆங்கிலத்தில் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். இவை நேர்காணலின் (Interview) போது  உதவும்.

2) கணிப்பொறி சார்ந்த ஏதாவதொரு course சென்று certificate வைத்திருப்பது நல்லது. தற்போதைய trend ல் உள்ள ஒரு Computer Language அல்லது Basic Computer Course தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பு.

3)  Inter college competition, Summer Internship மற்றும் Conference போன்றவற்றில் பங்கேற்பது மிக  மிக அவசியம். நிறைய நட்பூக்களும்,  தொடர்புகளும்  கிடைக்கும். நமது Resume value உயரும். Summer Internship தேடுதலுக்கு உதவ தனி இணைய தளம் உள்ளது  

http://www.twenty19.com/
  
இந்திய மாணவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கிடைக்க கூடிய scholarship/loan  விபரங்கள்  பற்றிய தகவல்கள் 

https://www.scholarshipsinindia.com/ 
http://www.scholarships.gov.in/ 
http://mhrd.gov.in/scholarships-education-loan 
http://scholfin.com/ 
http://www.motachashma.com/ 
https://www.topuniversities.com/ 
https://www.wemakescholars.com/ 

4) College Seniors உடன் என்றும் தொடர்பில் இருங்கள். வேலை நிலவரம் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவியாய் இருக்கும். 

5) முடிந்தால் Part time job ஒன்று செய்ய முயற்சி செயுங்கள்.

6) இந்த துறைக்கு அல்லது இந்த பணிக்குதான் செல்வேன் என ஒரு குறிக்கோள் வைத்து வேலை செய்யுங்கள் / படியுங்கள். மனதளவில் இயங்கி கொண்டே இருக்க இந்த குறிக்கோள் உதவும். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் அல்லது முதல் ஆறு மாதம் இந்த குறிக்கோளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.

7) Extra curricular activities like Sports, Singing, Playing  instruments, Drawing, Martial Arts, Swimming, Trekking, Poem writing, Learning new language, etc..  இப்படி உங்களது கவனத்தையும், படைப்பாற்றலையும், சக்தியையும் கோரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது அவசியம். 


இன்றைய நிலை: 
 
முடிந்த வரை On campus / Off  Campusல் வேலை பெற முயற்சி செய்யுங்கள்

Reference இல்லாமல் சொந்த முயற்சியில் வேலை கிடைப்பது  சிறிது கடினம். 

கொஞ்சம் பொறுத்திருந்தால் / முயற்சி செய்தால் consultancy மூலமாக வேலைக்கு சேரலாம்  ஆனால் 3-4 மாத சம்பளத்தை consultancyக்கு நாம் கொடுக்க வேண்டும். 

நீங்கள் விரும்பிய வேலை  கிடைக்கவில்லை என்றால் காத்திருங்கள் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து விரும்பிய வேலைக்காக முயற்சி செய்துகொண்டே இருங்கள். முயற்சி வெற்றியை தரும்.

இது எனது/என்னை சுற்றி நடந்த அனுபவம், அதாவது average middle class மாணவர்களின் நிலைமை. இந்த சூழ்நிலை உங்களுக்கு வரலாம் வராமலும் போகலாம். ஆகவே பயப்பட ஒன்றுமில்லை, இலக்கு வைத்து செயல்படுங்கள். இழக்க ஒன்றுமில்லை உங்களிடம்  (மாணவர்களிடம் ), இந்த உலகில் அடைய நிறையவே இருக்கிறது. 

தொடர்புடைய பதிவுகள்:
WHAT AFTER 10 & 12?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள் 
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  



Tuesday 23 May 2017

உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்

உயர்கல்வி தேர்வு (choice): கவனிக்க வேண்டியவை 🤔


1) யர்கல்வி வேலைக்கு பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் திருமணத்திற்கு அது ஒரு அடிப்படை தகுதி, ஆண் பெண் இருவருக்குமே. அதனால் குறைந்தபட்ச கல்லூரி பட்டம் அவசியம். குடும்ப சூழ்நிலையால் கல்லூரி சென்று படிக்க முடியவில்லையெனில் தொலைதூர கல்வி / பகுதி நேர கல்வி வாயிலாக பட்டம் பெறலாம்.

2) டிப்பில் அளவற்ற ஆர்வம் என்றால் வயது தடை இல்லை. இல்லையெனில் 23 முதல் 26 வயதுக்குள் கல்வியை முடித்து வேலையில் சேரும்படியான படிப்பை தேர்ந்தெடுப்பது நல்லது.

3) வீட்டின் பொருளாதார நிலை என்ன? எவ்வளவுக்கெவ்வளவு சுய சார்போடு / குறைந்த கடன் பெற்று பெற்றோர்களால் படிக்க வைக்க முடியும்? நமக்கு பின் எத்தனை சகோதர சகோதரிகள் உள்ளனர்? நம்மை சார்ந்துதான் குடும்பம் உள்ளதா?

4) ணிதம் அவசியமான ஒரு பாடம் எங்கு சென்றாலும் அதை நாம் எதிர்கொண்டாக வேண்டும். ஆகவே கணிதத்தில் ஆர்வமும் நல்ல மதிப்பெண்ணும் உள்ளவர்கள் பொறியியல் படிப்பை தாராளமாக தேர்வு செய்யலாம். இல்லையெனில் பொறியியல் படிப்பை கடைசி தேர்வாக(choice) வைப்பது நல்லது. ஒரு பாடம் பிடிப்பதும் பிடிக்காததும் ஆசிரியர் நடத்தும் விதத்திலும் உள்ளது, பள்ளி வரை பிடிக்காத சில பாடங்கள் கல்லூரியில் பிடிக்க வாய்ப்புள்ளது.

5) ம்மை பற்றி நாம் சரியான புரிதல்களுடன் இருப்பது அவசியம் அதாவது நமக்கு என்ன வரும்? என்ன வராது? நமது பலம் பலவீனம் என்ன? எளிதாக வரும் விஷயங்கள் என்ன? சுட்டு போட்டாலும் வராத விஷயங்கள் என்ன? மிரட்டி உருட்டினால் செய்யும் விஷயங்கள் என்ன? இது போல.

கல்வி பிரிவுகளும் வேலை வாய்ப்புகளும்: (+2 விற்கு பிறகு)


3 வருட (B.A / B.Sc / BCA / BBA) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்:

  • Government Sector : 
 IBPS & Bank Exam / TNPSC Group Exams / UPSC Exam (for 24 posts including IAS & IPS) / IFS / SI & Police Exam / SSC Exam / Indian Army, Air force, Navy / TRB (after B.Ed) / CA Exam / RRB Exam.
  • Private Sector :  
Medical rep, private school teacher (with B.Ed), Software / BPO, Jobs in Publishing companies.
  • Postgraduate studies:  
M.A, M.Sc, MCA, MBA, B.Ed, M.Ed, PGDCA, etc...
  • Self employment:  
Family business or any interested business. 


2 வருட (M.A / M.Sc / MBA) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்:

  • HR jobs, Sales & Marketing.
  • M.Phil, PhD (after GATE / CSIR-NET/ UGC-NET Exam) with 25,000 - 28,000 rupees stipend per month for 5 years.
  • Private / govt College Lecturer (with CSIR-NET)
  • Self employment (Coaching job in Coaching centers), etc...
  • Higher studies in foreign universities (after SAT, MCAT, LSAT, GMAT, GRE, IELTS and TOEFL exams)
  • Journalism / Media
  • Software/ BPO/Coding/App developer/Software testing/Debugging/Hardware & Software Analyst, etc...

5 வருட (PhD) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்: 

  • Scientist (in ISRO / DRDO / CSIR labs)
  • PDF (Post Doctoral Fellowship) in Foreign & India for 2-5 years. Salary varies from 45,000 - 1,50,000.
  • Teaching in private / govt Colleges (Engg. as well as Arts & Science) and private / govt Universities.
  • Teaching in Foreign colleges.
  • R&D jobs in private / govt Companies.

4 வருட (B.E / B.Tech) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்:

  • Government Sector : 
IES Exam / GATE Exam for govt companies / UPSC Exam (for 24 posts including IAS & IPS) / IFS / IBPS & Bank Exam / TNPSC Group Exams / SI & Police Exam / SSC Exam / Indian Army, Air force, Navy / RRB Exam.
  • Private Sector :  
Core sector jobs, Software / BPO, Sales & Marketing.
  • Postgraduate studies:  
M.E & M.Tech in IIT's, NIT's or in state Govt colleges with 12,000 stipend per month (With GATE Exam), MBA (after one of these exams CAT, CET, JET, MAT, XAT, ATMA, SNAP, etc...) and Higher studies in Foreign institutes.
  • Self employment: 
 Family business or any interested business or Social Entrepreneur.
 

2 வருட (M.E / M.Tech / MBA) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்:  

  • PhD (after GATE Exam) with 25,000 - 28,000 rupees stipend per month  for 5 years. 
  • Higher studies in foreign universities (after one of these exams SAT, MCAT, LSAT, GMAT, GRE, IELTS and TOEFL).
  • Core company jobs / Management jobs.
  • TRB Exam (for Asst professor in Govt Polytechnic and Engg. colleges).
  • Teaching in private Engg Colleges.

5 வருட (PhD) படிப்பிற்க்கு பிறகு  உள்ள வாய்ப்புகள்: 

  • Scientist (in ISRO / DRDO / CSIR labs)
  • PDF (Post Doctoral Fellowship) in Foreign & India for 2-5 years. Salary varies from 45,000 - 1,50,000. After PDF we can return to teaching job or scientist or we can be an Entrepreneur.
  • Teaching in private / govt Colleges (Engg. as well as Arts & Science) and private / govt Universities.
  • Teaching in Foreign colleges.
  • R&D jobs in private / govt Companies.

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
WHAT AFTER 10 & 12?  

 

Thursday 18 May 2017

கதைகள்:

வாழ்வை கட்டமைக்கும் சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதில் கதைகளுக்கு முக்கிய பங்குண்டு. கதைகள் நம் மொழி, உணவு, கலாசாரம், நல்லது, கெட்டதுகளை கடத்த உதவும் ஒரு சாதனம், ஒரு வாகனம், ஒரு ஊடகம், ஒரு பாலம். மனத்தில் பதியும் வயதில் சொல்ல வேண்டிய நல்ல விஷயங்களை சொல்லி பிள்ளைகளை வளர்த்தால் என்றுமே பிள்ளைகளை நினைத்து நாம் கவலை பட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளிடம் நற் சிந்தனை, மூளை வளர்ச்சி மற்றும் கற்பனை திறனை வளர்க்கும் சக்தி படைத்தவை கதைகள். 
சிந்தனையை தூண்டும் கதைகளை கேட்டோ வாசித்தோதான் சான்றோர், எழுத்தாளர்கள், படைப்புலகில் உள்ளவர்கள், மேதைகள் அந்நிலையை அடைந்திருப்பார்கள். வெறுமனே கதைகளை சொல்லி நிறுத்தாமல் முடிவில் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நல்ல சமுதாயம் உருவாக பாட்டி/ தாத்தாகளும், நல்ல கதைகளுமே போதுமானது என்பதே என் எண்ணம். எனக்கு பிடித்த இரண்டு கதைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சிந்தனை செய் மனமே:


ரு அழகான, பசுமையான, அமைதியான தேசம் நதியின் ஒரு கரையிலும், மக்கள் வாழாத கொடிய விலங்குகளுடன் கூடிய அடர்ந்த காடு நதியின் மறு கரையிலும் உடைய நாடு ஒன்று இருந்தது. சில நிபந்தனைகளுக்கு பின்னரே அந்த நாட்டை ஆளும் அரசன் தேர்ந்தெடுக்கப்படுவான், அதாவது குறிப்பிட்ட ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின் அந்த அரசன் ஊருக்குள் வாழ கூடாது நதியின் மறு கரையில் உள்ள காட்டில் தான் வாழ வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு (எதிர்கொள்ள) பயந்து பலர் அரசனாக முன்வரவில்லை, சிலர் அரசனாக இருக்கும் வரை லாபம் அதன் பிறகு என்ன வந்தாலும் வரட்டும் என்று அரசனாகி காட்டிற்க்கு பயத்துடன் சென்று அங்கு துன்பபபட்டு இறந்தும் போனார்கள்.இப்போது ஒரு அரசனின் ஆட்சி காலம் முடிவுற்று காட்டிற்கு செல்ல வேண்டிய நேரம், மக்கள் அனைவரும் கூடிவந்து அரசனை ஒரு படகில் ஏற்றி அக்கரைக்கு அனுப்பி வைத்தனர். 

படகோட்டியும் அரசனும் மட்டும் படகில் சென்றுகொண்டிருந்தனர், அந்த படகோட்டிக்கு ஒரே ஆச்சரியம் இதுவரை வந்த ராஜாக்கள் அனைவருமே பயந்து போய் தான் வருவார்கள் ஆனால் இவரோ மகிழ்ச்சியாக காணப்பட்டார்.  படகோட்டியும் அரசனிடம் காரணத்தை கேட்டுவிட்டார். 

"நிச்சயம் அங்குப் போக போகிறேன் என்று தெரியும் அதனால் ஆட்சியில் இருக்கும் போதே ஆட்களை அனுப்பி அங்கு ஒரு அரண்மனை கட்டிவைத்து பணியாட்களையும் பணியில் வைத்து விட்டேன் அதனால் தான் மகிழ்ச்சியோடு செல்கின்றேன்" என்றான் அரசன்.

நிச்சயம் ஒரு நாள் நாம் மூப்பெய்த போகிறோம் அந்த நாட்களை  முன்பே அழகாக மாற்றினால் என்ன?


பிறருக்கல்ல நமக்கே:

ரு ராஜா. அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப் பின் யார் நாட்டை ஆள வேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார். 

‘காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக் காட்டத் தேவையில்லை’ என உத்தரவிட்டார். 

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல்பட்டுக் கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப் போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான். 

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ, "நீங்கள் இதை கொடுக்க வேண்டிய அந்த ஏழைகள் வேறு யாருமில்லை. நீங்கள்தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள்" என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார். 

நல்ல பழங்களை கொண்டு வந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(இயக்குனர் பேரரசு சொன்ன கதை)
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

 








கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...