ஐயப்ப மசாகி:
நீர் காந்தி, நீர் வித்தைக்காரர்,
நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மசாகி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மேற்கு கர்நாடகத்தில் கடக் (Gadag) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய சூழலில் பிறந்து தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த
நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவருடைய அம்மா பல கி.மீ. தூரம் பானைகளைச் சுமந்து சென்று தண்ணீர் சுமந்து
வந்த காட்சிகள் பசுமரத்தாணிபோல் இவர் மனதில் பதிந்திருக்கின்றது. இதனால் 25
ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்குத் தன்னை
அர்ப்பணித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.
(Mr. Ayyappa Masagi, Founder and Director, Water Literacy Foundation)
" இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார் "
படிப்பும் பணியும்:
படிப்பு ஒரு புறம் சென்றுகொண்டிருந்தாலும், தண்ணீருக்காக தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் படக்கூடாது என்று தொடர்ந்து தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறார். இயந்திரவியல் தொழில்நுட்ப கல்வி முடித்து L&T யில் பணி கிடைக்கிறது, அங்கு 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார்.
மழைநீர் சேமிப்பும் விவசாயமும்:
பணிக்குஇடையில் தனது ஊரில் 6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கி அங்கு காபியும், ரப்பரும் வளர்க்கிறார். கனமழை, பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிகிறது. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிகிறது, அதாவது "இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை உள்ளது". இதற்க்கு தீர்வு தேடி நீர் மேலாண்மையில் வெற்றிகண்ட களப்பணியாளர்களான அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து தனது நெஞ்சில் இருக்கும் நீர் மேலாண்மை திட்ட கனவை நினைவாக்க வழிகளை தேடியெடுக்கிறார்.
போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம் என்பதை அறிகிறார். அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுக்கிறது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்கிறார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெறுகிறார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.
தொழில்நுட்பம்:
நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டு மழை நீரை உட்புக வைத்தால், அது கற்களையும் மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும். மேலும் ஒவ்வொரு நிலத்தின் அமைப்புக்கும், அந்த வட்டார நீர்வளம், மழைவளம் பொருத்தும், நிலத்தில் தடுப்புகள், குட்டைகள், நீர் சேகரம்-சேமிப்பு, நிலத்தடி செறிவூட்டும் அமைப்புகள் போன்ற ஆலோசனைகளை வழங்குகிறார். இதுவே இவரது நீர் சேகரிப்பு முறை திட்டம்.
சாதனைகளும் விருதுகளும்:
- கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார்.
- நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்.
- மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.
- 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என இவரது சாதனைகள் நீண்டு செல்கிறது.
- விவசாய சேவைக்காக அசோகா fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
புதிய முறை:
**கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள்.
**பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள்.
**தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.
**குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன்.
பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன, எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். 'வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்' என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் இவர்.
தொடர்புடைய பதிவுகள் மற்றும் காணொளிகள்:
1) ஐயப்பா மசாகி- வறட்சியிலும் நீர் சேமிக்க வழி சொன்ன மனிதர்!
2) ஐயப்ப மசாகி
3) வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'
4) India’s Water Warrior Has a Solution for India’s Droughts. The Best Part – We Can Play a Role Too!
5) Why is this man so obsessed to the cause of water conservation
6) Ayyappa Masagi's innovative technologies encompass methods for irrigation & rainwater harvesting, both in urban & rural context
7) Borewells run dry? Crops failing? The Water Doctor will see you now
8) Meet India’s ‘water doctor’, who has turned 84 acres of barren land into a water bowl
9) Ayyappa M Masagi at TEDx
10) Masagi Presentation
11) Water Literacy Foundation
12) Here is a water crusader
வாழ்த்துகள் அவருக்கும் உமக்கும்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்க்கும் நன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்க்கும் நன்றி ஐயா. இந்த வயதில் அவரது பேச்சும் செயலும்தான் அவரை பற்றி எழுத தூண்டியது.
Delete