Saturday, 2 April 2016

சென்னை -கல்வி சுற்றுலா :2

நேரம் ஆக ஆக ஆட்டம் பாட்டம் குறைய தொடங்கியது, சூர்யா அவர்களின் காக்க காக்க படம் போடப்பட்டது, படம் முடிவதற்குள் அனைவரும் உறங்கிவிட்டோம். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல்மருவத்தூரை அடைந்து காலை பணிகளை முடித்து, குளித்து 7.45 மணிக்கு கிளம்பினோம். வைகைபுயல் அவர்களின் நகைச்சுவையை ரசித்துக்கொண்டே கொடுக்கப்பட்ட சப்பாத்தியை (செய்து கூடவே எடுத்து வந்தது) சாப்பிட்டு முடித்தோம். இந்த 22 வருடங்களில் சென்னை செல்வது இதுவே முதல் முறை அதனால் பயணத்தில் ஒரு கூடுதல் எதிர்பார்ப்பு. செல்லும் வழியில் முதலில் பார்த்த பிரபலமான ஒரு இடம்  S R M University. இந்த university பற்றி முன்பே கேள்விபட்டிருந்ததால் அதை பார்க்கும் போது அங்கு செல்ல வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் தோன்றியது (பின்னாளில் அங்கு சென்று படிப்போம் என்று நான் அப்போது நினைத்துபார்க்கவில்லை, அந்த உள்ளார்ந்த எண்ணம் அவ்வளவு சக்தி வாய்ந்தது).


(http://libgc.unom.ac.in/aboutus.html)

சிறிது நேரம் சேர வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் அலைந்துவிட்டு காலை 10.30 மணிக்கு கிண்டி Anna university சென்றடைந்தோம். அதன் அருகில் Madras university physics lab உள்ளது அதனை பார்க்கதான் நாங்கள் சென்றிருந்தோம். 11 மணியளவில் நாங்கள் அனைவரும் 8 பேர் அடங்கிய 5 குழுக்களாக பிரிக்கப்பட்டோம். XRD LAB, UHV CHAMBER, THERMAL LAB , Mössbauer  SPECTROSCOPY, POSITRON ANHILATION ஆய்வஹங்களை ஒவ்வொரு குழுவாக சென்று பார்த்து முடித்து வெளி வருவதற்குள் மதியம் 2 ஆகிவிட்டது. Canteen ல்  11 ரூபாய்க்கு அளவான உணவு சுவையாக கிடைத்தது, சாப்பிட்டு முடித்தவுடன் சில ஆய்வகங்களை பார்க்காத குழுக்கள் பார்க்க சென்றனர். எங்கள் குழு (நான், ஜோஷ்வா, ஆலன்மேத்யு, லக்ஷ்மி, பெல்பா, ஷாலினி, கல்பனா, உமாவதி) அனைத்து ஆய்வகங்களையும் பார்த்து விட்டதால் Anna university சென்று பார்த்து வர அனுமதிக்கப்பட்டோம்.

 
(http://www.justdial.com/Chennai/World-University-Service-Centre-%3Cnear%3E-Near-T-B-Hospital-Chetpet/044P7002658_BZDET)

அன்று இரவு தங்குவதற்கு சேத்துபட்டில் உள்ள World University Service Centre (WUS) ல் இடம் கேட்டிருந்தோம் ஆனால் அது இன்னும் உறுதியாகாமல் இருந்ததாலும்,  தொலைபேசியில் அழைத்தாலும் எந்த மறுமொழியும் இல்லாததாலும் இருவர் நேரில் சென்று பார்த்து வருமாறு ஆசிரியர் கூறினார். ஆனந்தும், ஜோஷ்வாவும் கிளம்பினார்கள். ஆய்வகங்களை பார்த்தவிட்டு சும்மயிருப்பதால் நானும் அவர்களுடன் கிளம்பினேன். 23C பேருந்தில் ஏறி Egmore சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டோம். முதன் முதலில் சென்னை வீதிகளில் செல்வது சந்தோஷமாக இருந்தது. எங்கு நோக்கினும் வாகனங்களும், புகை மூட்டமும், மக்கள் நெரிசளுமாகத்தான் சென்னை காட்சியளித்தது. அதுவரை திரைப்படங்களிலும், பிறர் சொல்லியும் கேள்விப்பட்ட இடங்களை (தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, Spencerplaza, LIC, Egmore, SUNTV & RAJTV office) நேரில் பார்ப்பது மகிழ்ச்சியை தந்தது.

Egmore to WUS செல்ல 20 ரூபாய் ஆட்டோ கட்டணம். அங்கு சென்று தங்குவதை உறுதி செய்த பின் ஆசிரியருக்கு தொலைபேசியில் தெரிவித்தோம். 3.30 மணி போல WUS விட்டு வெளிவந்து எங்கெங்கோ அலைந்து திரிந்து எத்திராஜ் , காய்தேமில்லத் கல்லூரி வந்து அண்ணாசாலை வந்தடைந்தோம். அருகில்தான் Spencerplaza என கேள்விப்பட்டு  அங்குசென்று சுற்றி பார்ப்பது என  முடிவாயிற்று. வாயை பிளந்து கொண்டு உள்ளே சென்றேன், பிரம்மாண்டம். உள்ளூர் ரெங்கவிலாஸ், திருச்சி சாரதாஸ் தவிர வேறு எதையும் பார்த்திராத எனக்கு அது பிரம்மாண்டமாக தோன்றியது. சுற்றி பார்க்கும் ஆர்வத்தில் கண்ணில் பட்ட வழியில் எல்லாம் சென்று எங்கு செல்வதென்று அறியாமல் கடைசியில் வெளியில் வந்துவிட்டோம். மீண்டும் அதே வாயில் வழியாக உள்ளே சென்று ஆசைதீர சுற்றி மட்டும் பார்த்துவிட்டு 5 மணிக்கு பல்கலைகழகம் வந்தடைந்தோம்.


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற