சமீபத்தில் குவஹாத்தியில் முனிசிபாலிட்டி குப்பை கொட்டும் பகுதிக்கு (GMC Dumping Site) முதல் முறையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்து. நகரத்திலிருந்து 25 km தொலைவில் இருக்கிறது, அந்த பகுதியில் இருந்த ஈரநிலத்தை(wetland) அழித்து அந்த இடம் உருவாக்கப்பட்டிருந்தது. நகரத்தில் சேகரமாகும் குப்பைகளை அள்ளிக்கொண்டுவந்து குவியலாக கொட்டிவிடுவது. அங்கு பார்த்த காட்சிகள், அனுபவங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கமே இந்த பதிவு. இந்த பிரபஞ்சமே ஒரு முழுமை; அதாவது எற்றம் இறக்கம், இன்பம் துன்பம், இரவு பகல் இருப்பது போல ஒரு இடம் தூய்மையாக இருந்தால் ஒரு இடம் அசுத்தமாக இருக்கும். அந்த விதியை உடைத்து அப்படி ஒரு இடம் இல்லாமல் செய்தால் தான் வருங்கால சந்ததிகள் நன்றாக வாழ்ந்து அவர்களின் சந்ததிகளுக்கு ஒரு நல்ல இடத்தை வாழ்வதற்கு விட்டு செல்வார்கள்.
பழைய குப்பை குவியல்கள்
புதிய குப்பை கொட்டப்படும் இடம் கொட்டப்படும் குப்பையில் உள்ள மறு சுழற்சி பொருட்களை எடுக்கும் மக்கள்
முதலில் குப்பை வகைகளை தெரிந்து கொள்வது நல்லது
மட்கும் குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின் உயிரினங்களால் சிதைக்கப்பட்டு மட்கி மண்ணோடு மண்ணாகும் பொருட்கள் அனைத்தும் மட்கும் குப்பையே.
உதாரணம்: உணவு & காய்கறி கழிவுகள், பருத்தி துணி, மர பொருட்கள், காகிதம், காகித அட்டைப்பெட்டி, இரும்பு, மற்றும் பல.....
மட்காத குப்பை :::: மண்ணில் வீசி எறிந்த பின்னர் மண்ணால் அரிக்கபடாமல், மண்ணில் உள்ள உயிரினங்களால் சிதைக்கபடமுடியாமல் உள்ள பொருட்களே மட்காத குப்பை.
உதாரணம்: Polythene, glass, rubber(sandals, shoes), plastic(chair, bottle caps,etc..), wrappers and covers of eatables (chocolate cover, oil cover, milk cover, tooth paste cover,etc..), Electrical and electronic waste (bulbs, phone, computer, etc..), tin (perfume tin, beverage tins,etc..),ballpoint pens, tooth brush, water bottles, tires, chemical waste(automobile batteries, watch & calculator battery ), etc...
இந்த மட்கும் மட்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து முக்கியமாக பாலிதீன் பைகளில் போடாமல் நேரடியாக குப்பைதொட்டிகளில் போடுவது மக்களாகிய நமது சமுதாய கடமை. குப்பைகளை ஒரே இடத்தில கொட்டுவதால் என்ன கெடுதல்? குப்பைகள் குவித்து ஒரே இடத்தில் கொட்டுவதால் அதன் மட்கும் தன்மை மட்டுபடுத்தப்படுகிறது. காற்றோட்டம் இருந்தால் தான் குப்பைகள் எளிதில் மட்கும்.மேலும் ஈர தன்மை அதிகமுள்ள கழிவுகளிலிருந்து வெளியேறும் நீர் பல பொருட்களுடன் கலந்து துர்நாற்றத்தை வெளியேற்றுகிறது. இதனால் தொற்று நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதனால் சுவாச கோளாறு, சரும கோளாறு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். மழைக்காலங்களில் இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் கழுநீரானது (Leachate) நிலத்தடி நீர், ஏரி, குளம் மற்றும் ஆற்று நீரில் கலக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் நீர் மாசுபடுத்தப்படும் விதத்தை கீழே உள்ள படத்தில் காணலாம் .

தற்போதுள்ள குப்பை மேலாண்மை திட்டம் ஒரு பார்வை:
முதல் இரண்டு வருடங்களுக்கு குப்பைகள் குவியலாக மட்டுமே கொட்டப்படும் அதை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு மூன்று வருடம் கழித்து மட்கிய குப்பைகள் குப்பை குவியலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு விற்கபடுகிறது. பிறகு புதியதாக சேகரமாகும் குப்பைகள் தனி ஒரு இடத்தில் கொட்டப்படும். இவ்வாறாக சுழற்சி முறையில் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவெனில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதை விட குப்பைகள் சேகரமாகும் வேகம் அதிகம் காரணம் மக்கள் தொகை பெருக்கம். சில இடங்களில் தனியார் நிறுவனங்களும் சில இடங்களில் அரசும் இந்த மட்கிய குப்பைகளை பிறத்து விற்கும் பணியை செய்கின்றன.
நாம் செய்ய வேண்டிய கடமைகள்:
இதை அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியம். இந்த பிரச்சனையின் வேர் வரை சென்று முளையிலேயே சரி செய்தால் தான் நம் வருங்கால தலைமுறை நம்மை பார்த்து அக்கறையுடன் செயல்படுவார்கள்.

REDUCE:(குறைத்துகொள்ளுதல்):நாம் பயன்படுத்தும் வேண்டாத பொருட்களை, அத்தியாவசியமில்லாத பொருட்களை குறைத்து கொள்வது பாலிதீன் பைகளை அறவே தவிர்ப்பது நல்லது.
REUSE:(மறுஉபயோகம்):உபயோகித்த பொருட்களை மறுபடியும் உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வது சிறந்தது. ஒரு முறை உபயோகம் (use and throw) தவிர்ப்பது நல்லது.
RECYCLE: (மறுசுழற்சி):மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை குப்பையில் எறியாமல் கடைகளில் கொடுப்பது நன்று. (பிளாஸ்டிக், இரும்பு, அலுமினிய பொருட்கள், அட்டைபெட்டி, காகிதம்)
இந்த முறைகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்தி குப்பையின் அளவை நம்மால் குறைக்க முடியும். இந்த வழியில் குழந்தைகளையும் ஈடுபடுத்துதல் நல்ல மாற்றத்தை கொண்டுவரும், ஏனெனில் எதிர்காலம் அவர்களுடையது. இந்த Waste management பற்றிய மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட வலைதலதளம் மற்றும் காணொளியை பாருங்கள். குறிப்பாக ஆமீர்கான் அவர்களின் சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சி மிகுந்த உபயோகமுள்ளதாய் இருக்கும.
https://www.youtube.com/watch?v=qimRK2Wzhuw
(Satyamev Jayate Season 2 | FULL Episode # 3 | Don't Waste your Garbage - Tamil )

No comments:
Post a Comment