Sunday 24 September 2017

நவோதயா பள்ளிகளின் சிறப்புகள்:

: நாட்டின் முதல் நவோதயா பள்ளியின்முதலாவது முதல்வராக பணியாற்றியவர்.

ஜவஹர் நவோதயா பள்ளியின் தோற்றம் :

  • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் கனவுத் திட்டமான நவோதயா பள்ளியை அன்றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் தொடங்கி வைத்தார்.
  • டூன் பள்ளியில் படித்த ராஜீவ்காந்தி அவர்கள் அதுபோன்ற உறைவிடப் பள்ளியை நாடு முழுவதும் தொடங்க வேண்டும்; அதில் கிராமப்புற ஏழை மாணவர்களைப் படிக்கவைக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவின் விளைவாகத் தோன்றியதுதான் ஜவஹர் நவோதயா பள்ளிகள்.
(டேராடூனில் உள்ள புகழ்பெற்ற டூன் பள்ளி( The Doon School): தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் என பெரும் செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி)
  • நாட்டின் முதல் ஜவஹர் நவோதயா பள்ளி மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 1986-ல் தொடங்கப்பட்டது.
  • இன்று தமிழகத்தை தவிர, நாடு முழுவதும் சுமார் 600 நவோதயா பள்ளிகள் உள்ளன.



இட ஒதுக்கீடு மற்றும் பயிற்று மொழி:
  • நவோதயா பள்ளிகளில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 33 சதவீதம், எஸ்.சி. - 15 சதவீதம், எஸ்.டி. - 7.5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3.5 சதவீதம் என இட ஒதுக்கீடு உண்டு.
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை உணவு, விடுதி வசதி, சீருடை, புத்தகங்கள் என அனைத்தும் இலவசம்.
  • 6-ம் வகுப்பில் சேர வேண்டுமானால், 5-ம் வகுப்பு வரை எந்த பயிற்றுமொழியில் படித்தார்களோ, அந்த மொழியிலேயே நுழைவுத்தேர்வு எழுதலாம்.
  • நவோதயா பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. 2-வது மொழிப் பாடமாக அந்தந்த மாநில மொழிகள் இருக்கும்.
  • புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்கிறது. அங்குகூட இந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம்கூட இல்லை. எந்த பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடையாது.

தேசிய ஒருமைப்பாடு:
  • 9-ம் வகுப்பு மாணவர்களை வேறு மாநிலத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றுவார்கள். அவர்கள் அந்த ஓராண்டு முழுவதும் அங்கு படிப்பார்கள். தேசிய ஒருமைப்பாட்டை மாணவர்கள் உணர்வதற்காக இந்த ஏற்பாடு.
  • நவோதயா என்பது மாதிரி பள்ளிகளாகும். இப்பள்ளி மூலம் அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

இப்படி நாடு முழுவதும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய பல வாய்ப்புகள் தமிழக மாணவர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவேதான், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளேன். 

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது வழங்கியிருக்கிறது.

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து
ராஜீவ்காந்தியின் கனவு திட்டம்..: நவோதயா பள்ளியால் நாடு முழுவதும் தமிழ் வளரும் 

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...