எனக்கு கிடைத்த நேரடி அனுபவத்தையும், படித்த ஒரு செய்தியையும் பகிர்வதே இந்த பதிவு. நாம் எங்கிருக்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதை தெளிவு செய்து பயணத்தை துவக்குவது என்பது கண்மூடித்தனமாக மற்றவர்களுடன் போட்டியில் ஓடுவதை விட சாலச் சிறந்தது. பள்ளி, கல்லூரி, பணியில் இங்கெல்லாம் நமக்கான சுய அடையாளத்தை ஏற்படுத்த இந்த சுய பரிசோதனை மிக அவசியம்.
நேரடி அனுபவம்:
ராஜேஷ் என்ற நண்பர் ஒருவர் ஆசிரியப் பணியில் உள்ளார், வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முதுகலை பட்டம் முடித்து ஒரு வருடம் வேலை எதுவும் செய்யவில்லை, என்ன? என்று விசாரித்தால்,
"எனக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளது ஆனால் நான் வாங்கிய முதுகலை பட்டத்திற்கு நான் தகுதியானவன் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. அதனால் ஒரு வருடம் வேலைக்கு எங்கும் செல்லாமல் முதுகலை பாடங்களை திரும்ப திரும்ப எனக்கு நம்பிக்கை வரும் வரை படித்து நான் முதுகலை பட்டத்திற்கு தகுதியானவன் என்ற நம்பிக்கை வந்ததும் ஆராய்ச்சி படிப்பிற்கு சென்றேன். எனவே அந்த ஒரு வருடம் வீண் என்று நினைக்கவில்லை என் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை மறு ஆய்வு செய்ததாகவே நினைத்துக்கொண்டேன்"
என்கிறார், நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
படித்தது:
சாகரிகா சிவகுமார் நம்ம திருச்சி பொண்ணுதான் இவங்க, இப்போ பதினொன்றாவது படிச்சிக்கிட்டிருக்காங்க. பத்தாவது முடித்த பிறகு (நம்ம ஊர்ல இருக்குற நடைமுறைதான் தெரிந்ததாயிற்றே அனைத்து கட்டுப்பாடுகளையும் நம் மீது திணித்து புத்தகத்தை தவிர வேறு எதையுமே தொட விடமாட்டார்கள் ) பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு பாடங்களையும் அழுத்தங்களையும் தாங்க முடியாது என்று நினைக்க, அவரது பெற்றோரும் குழந்தைக்கு பக்குவம் வந்த பிறகு படிக்க வைக்கலாம் என்று ஒரு வருடம் பள்ளி கல்வி வேண்டாமென முடிவெடுத்தனர்.
பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி ஊர் சுற்ற அனுப்பாமல் தினசரி செயல்பாட்டுக்கான அட்டவனை கொடுத்து அதன்படி தங்கள் மகளை செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு தனது ஒரு வருட "பள்ளி செல்லா வாழ்க்கையை" பற்றி புத்தமாக அவரே எழுதி வெளியிடுமளவிற்கு பக்குவமும், அனுபவத்தையும் பெற்று விட்டார். கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதுள்ள கல்வி முறை ஏறக்குறைய அணைத்து நாடுகளிலும் , Finland ஐ தவிர, தகவல்களை திணிக்கும் கல்விமுறையாகவே உள்ளது.
நம்முள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணருவதற்கு Finland ல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை போலவும, சாகரிகாவின் பெற்றோர் போலவும் யாராவது இருந்தால்தான் உண்டு.
கல்வி என்பது நம் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும், அதுவே நமது அடுத்த தலை முறைக்கு இன்றைய தேவை.
My Unskooled Year Paperback
இன்றைய குழந்தைகள் தானே நாளைய தலைவர்கள், நாளைய சமுதாயம்.
தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள்
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்
WHAT AFTER 10 & 12?
No comments:
Post a Comment