Sunday 25 June 2017

அடேங்கப்பா ............இதுக்கு டெல்லி அளவு இடம் வேணுமாம்ல........

குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தேவையினால் “இப்பெரும் நிலப்பரப்புகள் வேறு பயன்களுக்கு பயன்படுத்த முடியாத உருப்படியற்ற நிலப்பகுதியாக இருக்கும்.

2050-ல் 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று இந்தியாவில் கழிவு மேலாண்மை: மாறும் நிலமைகள் என்ற ஆய்வறிக்கையில் அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி கூறியுள்ளது.

இந்தியாவின் 50% மக்கள் தொகை நகரப்பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது இந்த அறிக்கை.

2021- ம் ஆண்டில் கழிவுகளின் உற்பத்தி 101 மில்லியம் மெட்ரிக் டன்கள் என்றும் 2031-ல் 164 மெட்ரிக் டன்கள் என்றும் 2050-ல் இது 436 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் அடுக்கு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80% கழிவுகளை உற்பத்தி செய்யும், என்கிறது இந்த அறிக்கை.


2050-ம் ஆண்டுவாக்கில் குப்பைகளை கொட்ட புதுடெல்லி அளவுக்கு இடம் தேவைப்படும்: அறிக்கையில் தகவல் (தமிழ் ஹிந்து செய்தி)



நுகர்வு கலாச்சாரம் என்ன விளைவுகளை நம் சந்ததிகளின் மீதும் நம்மீதும்  ஏற்படுத்த போகிறது என்று யோசிக்கையிலேயே மலைக்க வைக்கிறது. வீதியில் இருக்கும் குப்பைகளை கொண்டு சென்று கடை கோடியில் உள்ள இடத்தில் கொட்டுவது இல்லை சுத்தம்,  நமது குப்பைகளை நாமே மறுசுழற்சி செய்து குப்பை வண்டிக்கு வேலை இல்லாமல் செய்வதே சுத்தமாக இருக்க முடியும். நமது குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் தொடக்கமும் அது சென்று சேரும் இடத்தை பற்றியம் செய்தியை கொடுக்க வேண்டும். அது அவர்களை சிந்திக்க வைக்கும்.

தற்போது உள்ள குப்பை மேலாண்மை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய எனது முந்தய பதிவு . Awareness on Solid WasteManagement: (Reduce, Reuse, Recycle) 



இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும், நல்ல நல்ல திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளது சிறிது கஷ்ட்டப்பட்டாலும் குப்பையிலிருந்தும் சம்பாதிக்கலாம். மேலும் பயனுள்ள தகவல்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள் இணைந்து செயலாற்றுவோம்.


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...