Thriller க்கு தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது, Thriller - சிலிர்ப்பு என்ற மொழிபெயர்ப்பு சரியா என்று தெரியவில்லை ஆனால் சரியான வார்த்தை போன்று தோன்றவில்ல. Kshnam (ஷணம் ) என்ற தெலுகு படம் ஒன்று பார்க்க நேர்ந்தது, அருமையான Mystery Thriller படம், ஆரம்பித்த காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை விறு விறுப்பாகவும், திருப்பங்களுடனும் செல்லும்.
பாத்திர வடிவமைப்பு, கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என்று எதை எடுத்தாலும் பத்திற்கு எட்டு மதிப்பெண்கள் கொடுக்கலாம். பின்னணி இசை மிக பொருத்தமாக இருந்தது. தமிழில் மறு ஆக்கம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அதுவும் நடந்தது. அதில் சிபிராஜ் நடிக்க போகிறார் என்றதும் எப்படி பொருந்தி நடிப்பார் படம் தமிழில் சொதப்பலாக இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால் இன்று வெளியான முன்னோட்டம் பார்த்தவுடன் திருப்தியாக இருந்தது, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
எந்த விதத்திலும் தெலுகு படத்தின் அழகை சிதைக்காமல் மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். முக்கியமாக சிபிராஜ் தோற்றத்தில் நல்ல மாறுதல் கொடுத்திருக்கிறார்கள் நிச்சயம் இது அவருக்கு ஒரு திருப்பு முனை படமாக அமையும் நல்ல விளம்பரம் செய்யும் பட்சத்தில். பின்னணி இசை மற்றும் நடிகர்கள் தேர்வும் அருமை குறிப்பாக ரம்யா நம்பீசன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களின் கதாபாத்திரம் பேசப்படுவதாக இருக்கும் சதீஷ், ஆனந்த்ராஜ் அவர்களின் கதாபாத்திரமும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.
பாத்திர வடிவமைப்பு, கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என்று எதை எடுத்தாலும் பத்திற்கு எட்டு மதிப்பெண்கள் கொடுக்கலாம். பின்னணி இசை மிக பொருத்தமாக இருந்தது. தமிழில் மறு ஆக்கம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அதுவும் நடந்தது. அதில் சிபிராஜ் நடிக்க போகிறார் என்றதும் எப்படி பொருந்தி நடிப்பார் படம் தமிழில் சொதப்பலாக இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால் இன்று வெளியான முன்னோட்டம் பார்த்தவுடன் திருப்தியாக இருந்தது, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment