நெருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் தன்மையுடையது, மஞ்சள் நிற சிறு பூவும், அறுகோண வடிவ முட்களையும் கொண்டிருக்கும். சிறு வயதில் விளையாடும் போது இந்த செடியெல்லாம் எதற்கு இருக்கிறது என்று யோசித்ததுண்டு, அதன் பயன்கள் தெரிந்த பின் மலைக்க வைக்கிறது. மருத்துவர் நவீன் பாலாஜி (Herbocare மருத்துவமனை) சொன்னதாக கூறி வீட்டில் அம்மா இந்த மருத்துவ முறையை கடைபிடிக்க அவருக்கு நல்ல பலன் கிடைத்தது. இடுப்பு வலியால் அடிக்கடி அவதியுறும் அம்மா இந்த செடியின் உதவியால் ஓரளவிற்கு உற்சாகமாக நடமாடுகிறார். எனக்கும் குதிகால் வலி அதிகமாகி கொண்டிருந்த தருணத்தில் நானும் 4 நாட்கள் முயற்சிசெய்தேன் நன்றாக இருக்கிறது இப்போது.
உபயோகப்படுத்தும் முறை:
** இந்த செடியை வேரோடு (முடிந்தால்) பிடுங்கி தண்ணீரில் நன்கு அலசி (பூ, முள், வேர், தலை எதையும் தவிர்க்க தேவையில்லை) சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியிலோ அல்லது அம்மியிலோ வைத்து நன்கு துவையல் போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
** அரைத்தவற்றை பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி (4 cup) கலக்கி பின் வடிகட்டினால் தயார்.
நாங்கள் பயன்படுத்திய முறை: (அரைத்தவற்றை பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி(4 cup) கொதிக்க வைத்து சிறிது உப்பு, சீரகம் சேர்த்து வடிகட்டி குடித்தோம்.)
** மேற்சொன்னது 4 பேருக்காக. 5-10 செடிகளை (செடியின் அளவை பொறுத்தது, வறண்ட காலங்களில் செடியில் இலைகள் சிறியதாகவும் குறைவாகவும் இருக்கும் ) எடுத்து 4cup நீர் ஊற்றி தயார் செய்யலாம்.
** காலை உணவுக்கு முன்னும், மாலையில் ஒருமுறையும் முறையே 15 நாட்கள் எடுத்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். பின் இடைவெளி விட்டு வலி இருந்தால் மீண்டும் எடுக்கலாம்.
எளிய முறைதான், செடி கிடைக்காதவர்கள் நெருஞ்சி முள் பொடியை உபயோகிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும், எப்போது, யார் யார் இந்த மருந்து எடுக்கலாம் என்று ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை செய்து பின்பற்றினால் நல்லது. மேலும் சில பயனுள்ள தகவல்கள் கீழ் உள்ள இணையத்தில் இருக்கிறது.
பலருக்கும் பயனுள்ள தகவல்கள் நண்பரே நன்றி
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வருக வருக, தங்களின் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி ஐயா.
Delete