இதுவரை பேலியோ டயட் பற்றி படித்திருக்கிறேன், காணொளிகள் பார்த்திருக்கிறேன் ஆனால் நேரில் யாரையும் பார்த்ததில்லை. முதல் முறையாக பேலியோ டயட் பின்பற்றி எடை குறைந்த நண்பர் ஒருவரின் மாறுதல்களை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அது முதல் அதை பற்றி தகவல்கள் சேகரித்து பதிவிட வேண்டும் என்ற அவா எழுந்தது, இதோ நண்பரின் தகவல்கள் இங்கே கேள்வி பதில் வடிவில்.
1) பேலியோ டயட் முறையை கடைபிடிக்க காரணம் என்ன?
முக்கிய நோக்கம் எடை குறைப்புதான். குறைந்த உடலுழைப்பாலும், கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகளை எடுப்பதாலும் உடல் எடை கூடி விட்டது. மூச்சு வாங்குதல், விரைவில் சோர்வு ஏற்படுவது மற்றும் வியர்த்தல் ஆகியவை அதிக எடையின் அறிகுறிகளாக வெளிப்படடன, அதனால் எடை குறைக்கும் எண்ணம் தோன்றியது.
2) பேலியோ டயட் பற்றி எப்படி தெரிந்தது, எப்படி நம்பினீர்கள்?
இந்த டயட் முறையைப் பற்றி தெரிந்திருந்தாலும் நண்பர் ஒருவர் இந்த முறையை பின்பற்றி எடையை குறைத்ததை பார்த்து நானும் பின்பற்ற துவங்கினேன். பேலியோ டயட் கடைப்பிடிக்க ஆரம்பித்த முதல் மாதத்திலேயே நண்பர் 7 கிலோ குறைந்தது மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது அதன் பிறகுதான் நான் ஆரம்பித்தேன்.
குறிப்பு: தானிய உணவுகள் உடலில் அதிகமாக நீர் சத்தை சேர்ப்பதுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம், தானியங்களை தவிர்த்து கொழுப்பு உணவுகளை உண்ணும் போது இந்த நீர் சத்தினால் உண்டாகும் எடை கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால்தான் முதல் மாதத்தில் அதிக எடை இழப்பு ஏற்படும்.
3) பேலியோ டயட் ஆரபிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசித்தீர்களா?
பேலியோ டயட் என்ற முடிவெடுத்தப்பின் இரத்தப் பரிசோதனை செய்து மருத்துவரை சந்தித்து பேலியோ டயட் முறையை பின்பற்ற உள்ளதாக தெரிவித்தேன் அவரும் சரி மேற்கொள்ளுங்கள் அவ்வப்போது வந்து உடல் நலத்தை சரிபார்த்து கொள்ளுங்கள் என்றார், மேலும் நண்பர் ஏற்கனவே ஒருமாதம் இந்த டயட் பின்பற்றுவதால் அவரது ஆலோசனைகளையும் பெற்ற பின்னரே துவங்கினேன்.
4) வேறு விதமான ஆலோசனை ஏதாவது?
முக்கியமாக சொல்லியே ஆகவேண்டிய ஒரு துணை "Paleo LCHF Diet - India" என்ற Facebook பக்கம்தான். இங்கு பல லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த facebook பக்கத்தின் நிறுவனரும் மற்றும் இந்த உணவு முறையை தொடர்ந்து பின்பற்றி மிகவும் பிரபலப்படுத்தியவருமான நியாண்டர் செல்வன் மற்றும் ஷங்கர் ஜி, தொடர்ந்து பல வருடங்களாக பேலியோ டயட் பின்பற்றுபவர்கள், என்னைப்போல பயனடைந்தவர்கள் மற்றும் ஆரம்ப நிலை பயனர்களும், மருத்துவர்களும் அடக்கம்.
5) Facebook பக்கம் எந்த விதத்தில் உதவியது?
முதலில் இருந்தே மிக மிக உதவியாக இருந்தது என்றால் மேற்சொன்ன facebook பக்கம்தான்.
6) இந்த உணவு முறையை ஆரம்பிக்கும் முன் ஏதாவது கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டுமா?
ஆம், புகையிலை பழக்கமோ, குடிப்பழக்கமோ அல்லது புகைப்பழக்கமோ இருப்பின் முற்றிலுமாக அதை விட வேண்டும். உடனடியாக அரிசி உணவுகளை விடமுடியாதவர்கள் படிப்படியாக அதை குறைத்து பேலியோ டயட்டிற்கு மனதளவில் முதலில் தயாராக வேண்டும். Junk food, fast food மற்றும் packet food உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
7) சரி பேலியோ டயட் உணவு முறை பின்பற்ற ஆரம்பித்துவிடீர்கள் ஏதாவது மாறுதல் தெரிந்ததா?
ஆம், ஆரம்பித்த இரண்டாவது நாள் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது பிறகு படிப்படியாக சரியாகிவிட்டது.
8) பயமாக இல்லையா, உணவு முறையை நிறுத்தவில்லையா?
இல்லை... பயமாக இல்லை, உணவு முறையையும் நிறுத்தவில்லை. ஏனெனில் ஆரம்பிக்கும் முன்பே இதை பபற்றி அறிந்திருந்தேன், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற தகவல் facebook பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற விளைவுகள் ஏற்படும் ஆனால் பயப்பட தேவையில்லை இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும்.
9) சமைக்கும் முறை என்ன, சமைப்பதற்கு ஏதாவது சிறப்பு பொருள் வேண்டுமா?
10) எப்படி சாப்பிட வேண்டும், ஏதாவது முறை உள்ளதா?
பேலியோ டயட்டில் நாள் ஒன்றுக்கு ஒருவர் 1200 முதல் 1500 கலோரி வரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது, இந்த அளவிற்கு மேலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது (ஆற்றல் பற்றாக்குறை வந்துவிடும்). இந்த 1500 கலோரி அளவை மூன்றாக பிரித்து மூன்று வேலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 12 மணி நேர இடைவெளியில் 3 வேலை உணவையும் முடித்து விட வேண்டும். (9 மணிக்கு காலை உணவு என்றால் இரவு 9 மணிக்குள்ளாக இரவு உணவை முடித்து விட வேண்டும்). வாரம் ஒரே ஒரு முறை 40 கிராம் மட்டும் தானிய உணவு வகையில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.
11) நீங்கள் சைவமா? அசைவமா?
இரன்டும் கலந்த கலவையாகத்தான் எடுத்துக்கொண்டேன், ஆனால் சைவம்தான் அதிகமாக எடுத்துக்கொண்டேன். காலையில் 100 பாதாம் பருப்புகள் (20 மணிநேரம் ஊறவைத்தது) அல்லது முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து, மதியம் எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிய காய்கறிகள், இரவு பன்னீர் அல்லது சிறிது மாமிசத்துடன் சேர்த்து காய்கறிகள்(மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்).
12) இந்த டயட் மேற்கொண்ட பிறகு என்ன மாற்றம் தெரிந்தது?
முதல் மாதத்தில் 5 கிலோ எடை குறைந்தது, அடுத்தடுத்த 2 மாதங்களில் முறையே 4, 4 என 8 கிலோ குறைந்தது. ஆக 100 நாட்களில் தோராயமாக 15 கிலோ எடை குறைந்தது. மூச்சு வாங்குதல், விரைவில் சோர்வு ஏற்படுவது குறைந்துள்ளது. நான் நினைத்த அளவு எடை குறைத்துவிட்டேன் அடுத்த இரத்தப் பரிசோதனை எடுக்கப் போகிறேன், பிறகு ஒரே எடையை பராமரிக்க சிறிது மாறுதல்களுடன் பேலியோ டயட் பின்பற்ற வேண்டும்.
13) இதை தவிர வேறு ஏதாவது பின்பற்றினீர்களா?
ஆம், கொழுப்புணவுகளை(பன்னீர் மற்றும் மாமிசம்) எடுத்த பின், எப்போது எடுத்தாலும் சரி(மதியமோ அல்லது இரவோ) "பசுமஞ்சள்(1 inch), 10 மிளகு, ஒரு சின்ன வெங்காயம் மற்றும் 3-5 துளசி இலைகள்" இவைகளை சேர்த்து நன்கு அரைத்து அப்படியே சாப்பிட வேண்டும், பிறகு 20 நிமிடங்கள் கழித்து 2 பள்ளு வெள்ளைப்பூண்டு சாப்பிட வேண்டும் பேலியோ டயட் பின்பற்றாதவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். உறங்கச் செல்லும் முன் சிறிதளவு ஆப்பிள் ஸீட் வினிகர் அருந்த வேண்டும்.
14) நடை பயிற்சி:
கடைசியாக ஆனால் முக்கியமாக நாள் ஒன்றுக்கு 3000 அடி கண்டிப்பாக நடக்க வேண்டும். இதுவும் எடை குறையும் வரை கடைபிடிக்க வேண்டும்.
facebook பக்கத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளது, பலரது அனுபவங்களையும், அவர்கள் சந்தேகங்களுக்கு கிடைத்த பதில்களையும் படித்தே நான் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
ஒரே ஒரு விஷயம் தான் நாம் செய்ய வேண்டும், அது என்னவெனில் தீர்மானமான முடிவு எடுத்து அதை பின்பற்ற உறுதி பூணுவது அவ்வளவே. பிறகு சகல விஷயங்களும் தானாக நடந்தேறும்.
என் அனுபவம் பிறருக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.
முனைவர் தாமோதரன் மற்றும் திரு விக்னேஷ் அவர்களுக்கு நன்றிகள்.
What is paleo diet ? brief explain in tamil by Shankar ji
ஆரோக்கியம் & நல்வாழ்வு (Facebook Tamil Paleo diet group)
தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 1

- அந்த பக்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.
- பின் நமது இரத்தப் பரிசோதனை தகவலை அங்கு பதிவிட்டால் நாம் மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்கம் பற்றி ஆலோசனை கிடைக்கும். (நமது சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்)
- என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் அவை எங்கெங்கு கிடைக்கும் போன்ற தகவல்களும் கிடைக்கும்.
6) இந்த உணவு முறையை ஆரம்பிக்கும் முன் ஏதாவது கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டுமா?
ஆம், புகையிலை பழக்கமோ, குடிப்பழக்கமோ அல்லது புகைப்பழக்கமோ இருப்பின் முற்றிலுமாக அதை விட வேண்டும். உடனடியாக அரிசி உணவுகளை விடமுடியாதவர்கள் படிப்படியாக அதை குறைத்து பேலியோ டயட்டிற்கு மனதளவில் முதலில் தயாராக வேண்டும். Junk food, fast food மற்றும் packet food உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
7) சரி பேலியோ டயட் உணவு முறை பின்பற்ற ஆரம்பித்துவிடீர்கள் ஏதாவது மாறுதல் தெரிந்ததா?
ஆம், ஆரம்பித்த இரண்டாவது நாள் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது பிறகு படிப்படியாக சரியாகிவிட்டது.
8) பயமாக இல்லையா, உணவு முறையை நிறுத்தவில்லையா?
இல்லை... பயமாக இல்லை, உணவு முறையையும் நிறுத்தவில்லை. ஏனெனில் ஆரம்பிக்கும் முன்பே இதை பபற்றி அறிந்திருந்தேன், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற தகவல் facebook பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற விளைவுகள் ஏற்படும் ஆனால் பயப்பட தேவையில்லை இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும்.
9) சமைக்கும் முறை என்ன, சமைப்பதற்கு ஏதாவது சிறப்பு பொருள் வேண்டுமா?
- வழக்கமான சமையல் முறைதான் அதில் எந்த மாற்றமும் இல்லை.
- கண்டிப்பாக மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய், வெண்ணை பயன்படுத்த வேண்டும், Refined oil, sunflower oil மற்றும் கடலெண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
- அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் சிறுதானியங்கள், பருப்பு இவைகளை தவிர்க்க வேண்டும். (நாம் விரும்பிய உடல் எடை குறையும் வரை, பிறகு மிக குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்)
- இரும்பு பாத்திரம் மற்றும் மண் பாண்டங்களை பயன்படுத்தலாம் nonstick pan பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
10) எப்படி சாப்பிட வேண்டும், ஏதாவது முறை உள்ளதா?
பேலியோ டயட்டில் நாள் ஒன்றுக்கு ஒருவர் 1200 முதல் 1500 கலோரி வரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது, இந்த அளவிற்கு மேலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது (ஆற்றல் பற்றாக்குறை வந்துவிடும்). இந்த 1500 கலோரி அளவை மூன்றாக பிரித்து மூன்று வேலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 12 மணி நேர இடைவெளியில் 3 வேலை உணவையும் முடித்து விட வேண்டும். (9 மணிக்கு காலை உணவு என்றால் இரவு 9 மணிக்குள்ளாக இரவு உணவை முடித்து விட வேண்டும்). வாரம் ஒரே ஒரு முறை 40 கிராம் மட்டும் தானிய உணவு வகையில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.
11) நீங்கள் சைவமா? அசைவமா?
இரன்டும் கலந்த கலவையாகத்தான் எடுத்துக்கொண்டேன், ஆனால் சைவம்தான் அதிகமாக எடுத்துக்கொண்டேன். காலையில் 100 பாதாம் பருப்புகள் (20 மணிநேரம் ஊறவைத்தது) அல்லது முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து, மதியம் எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிய காய்கறிகள், இரவு பன்னீர் அல்லது சிறிது மாமிசத்துடன் சேர்த்து காய்கறிகள்(மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்).
12) இந்த டயட் மேற்கொண்ட பிறகு என்ன மாற்றம் தெரிந்தது?
முதல் மாதத்தில் 5 கிலோ எடை குறைந்தது, அடுத்தடுத்த 2 மாதங்களில் முறையே 4, 4 என 8 கிலோ குறைந்தது. ஆக 100 நாட்களில் தோராயமாக 15 கிலோ எடை குறைந்தது. மூச்சு வாங்குதல், விரைவில் சோர்வு ஏற்படுவது குறைந்துள்ளது. நான் நினைத்த அளவு எடை குறைத்துவிட்டேன் அடுத்த இரத்தப் பரிசோதனை எடுக்கப் போகிறேன், பிறகு ஒரே எடையை பராமரிக்க சிறிது மாறுதல்களுடன் பேலியோ டயட் பின்பற்ற வேண்டும்.
13) இதை தவிர வேறு ஏதாவது பின்பற்றினீர்களா?
ஆம், கொழுப்புணவுகளை(பன்னீர் மற்றும் மாமிசம்) எடுத்த பின், எப்போது எடுத்தாலும் சரி(மதியமோ அல்லது இரவோ) "பசுமஞ்சள்(1 inch), 10 மிளகு, ஒரு சின்ன வெங்காயம் மற்றும் 3-5 துளசி இலைகள்" இவைகளை சேர்த்து நன்கு அரைத்து அப்படியே சாப்பிட வேண்டும், பிறகு 20 நிமிடங்கள் கழித்து 2 பள்ளு வெள்ளைப்பூண்டு சாப்பிட வேண்டும் பேலியோ டயட் பின்பற்றாதவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். உறங்கச் செல்லும் முன் சிறிதளவு ஆப்பிள் ஸீட் வினிகர் அருந்த வேண்டும்.
14) நடை பயிற்சி:
கடைசியாக ஆனால் முக்கியமாக நாள் ஒன்றுக்கு 3000 அடி கண்டிப்பாக நடக்க வேண்டும். இதுவும் எடை குறையும் வரை கடைபிடிக்க வேண்டும்.
facebook பக்கத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளது, பலரது அனுபவங்களையும், அவர்கள் சந்தேகங்களுக்கு கிடைத்த பதில்களையும் படித்தே நான் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
ஒரே ஒரு விஷயம் தான் நாம் செய்ய வேண்டும், அது என்னவெனில் தீர்மானமான முடிவு எடுத்து அதை பின்பற்ற உறுதி பூணுவது அவ்வளவே. பிறகு சகல விஷயங்களும் தானாக நடந்தேறும்.
என் அனுபவம் பிறருக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.
முனைவர் தாமோதரன் மற்றும் திரு விக்னேஷ் அவர்களுக்கு நன்றிகள்.
What is paleo diet ? brief explain in tamil by Shankar ji
ஆரோக்கியம் & நல்வாழ்வு (Facebook Tamil Paleo diet group)
தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 1
No comments:
Post a Comment