மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தில், நாட்டு மாட்டின் சாணத்தைப் பயன்படுத்தி, முக பவுடர், பல்பொடி, ஷாம்பூ என, 12 பொருட்களைத் தயாரிக்கும், திருப்பூர் மாவட்டம், முத்துார் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து:
- சாண வரட்டி சாம்பல், நாயுருவிச் செடி, மூலிகைக் கலப்பு கலந்த பல்பொடி, 70 கிராம், 45 ரூபாய்;
- பசுஞ்சாணப் பொடி, பச்சரிசி, குங்கிலியம், சிறிதளவு நெய் மற்றும் மூலிகை கலப்பு சேர்த்த, 18 சாம்பிராணித் துண்டுகள், 35 ரூபாய்;
- பசுஞ்சாண பொடி, வேம்பு, துளசி, தும்பை மற்றும் மூலிகைக் கலப்பு சேர்த்த, 18 கொசுவர்த்தித் துண்டுகள், 35 ரூபாய்.
- மாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பாகு, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் மூலிகைக் கலப்பிலான மாலிஷ் ஆயில், 100 மி.லி., 120 ரூபாய்;
- பசுஞ்சாண விபூதி, இலுப்பைத் துாள், எலுமிச்சை தோல் பொடி மற்றும் மூலிகைக் கலப்புப் பொடி சேர்த்து தயாரிக்கப்படும், பாத்திரம் துலக்கும் பவுடர், கிலோ 100 ரூபாய்; விபூதி, கிலோ 300 ரூபாய்.
- நாட்டுப் பசுஞ்சாண விபூதி, வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்கு மற்றும் மூலிகை கலப்பு சேர்த்த குளியல் பொடி, கிலோ, 300 ரூபாய்;
- நாட்டுபசு கோமியம் மற்றும் மூலிகைக் கலப்பு சேர்த்த ஷாம்பு, 180 மி.லி., 125 ரூபாய்.
- நாட்டுப்பசு மாட்டின் கோமியத்திலிருந்து, கோவர்ஷினி அர்க் தயாரிக்கப்படுகிறது. இது, சர்வரோக நிவாரணியாக செயல்பட்டு, சளி முதல் கேன்சர் வரையிலான நோய்களை கட்டுப்படுத்துகிறது; லிட்டர், 300 ரூபாய்.
- கற்றாழை, வேப்பிலை, முல்தானி மிட்டி, நாட்டுப் பசு எரு, மூலிகைக் கலப்பு சேர்த்த, 70 கிராம் சோப்பு, 40 ரூபாய்.
- குளியல் பொடியில் சேர்க்கப்படும் கிச்சலிக் கிழங்கைத் தவிர்த்து, முகப்பவுடர் தயாரிக்கப்படுகிறது.முக அழகு பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து, சந்தனம்போல் கரைத்து பூசி, 15 நிமிடம் கழித்து வெந்நீரில் முகம் கழுவ, கரும் புள்ளி, தேமல், முகப்பரு, எண்ணெய் பசை நீங்கி, இளமைப் பொலிவுடன் முகம் வசீகரம் தரும்; 70 கிராம் பொடி, 40 ரூபாய்.
- நாட்டுப் பசும்பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், மூலிகை கலப்பு சேர்த்து, தலைக்கு தேய்க்கும் எண்ணெய், 100 மி.லி., 125 ரூபாய்;
--தினமலர் நாளிதழிலிருந்து.
No comments:
Post a Comment