பேலியோ டயட் என்றால் என்ன?
மனிதர்கள் வாழ்ந்த பேலியோலித்திக் (Paleolithic age) என்ற ஆதிகாலம் ஒன்று இருந்தது, அப்போது மனிதர்கள் பின்பற்றிய உணவு முறையை ஒத்து இருப்பதால் இதற்க்கு பேலியோ டயட் என்று பெயர். அதாவது முறையான விவசாய நடைமுறை ஏற்படும் முன்னர் மக்கள் காடுகளில் வாழ்ந்து உணவை தேடியலைந்து, வேட்டையாடி சாப்பிட்டிருப்பார்கள் இல்லையா அதுபோன்றதொரு உணவுமுறையை பின்பற்ற முயற்சிப்பதனால்தான் இந்த பெயர்.
பேலியோ டயட் பயன்கள் என்ன?
இந்த உணவு கட்டுப்பாட்டு முறை பிரபலமாக முக்கிய காரணம் "எடை குறைப்பு" தான் என்றாலும் பக்க விளைவுகள்(நல்ல) நிறைய. அதாவது இரத்த அழுத்தம், சர்க்கரை, இதைய நோய்கள் மற்றும் பல தொல்லைகள் நீங்குகிறது என்பதுதான் கூடுதல் காரணம்.
பேலியோ டயட் பிரபலமானது எப்படி?
நேரடி அனுபவம்தான், பிறரின் அனுபவத்தை பார்த்து இதை பின்பற்றி பலரும் பயனடைந்து வருவதுதான் இந்த டயட் முறை பிரபலமடைய முக்கிய காரணம்.
எப்படி பின்பற்றுவது?
முக்கியமான உணவுகள் என்னென்ன?
கொழுப்பு சத்து உள்ள உணுவுகள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் (பன்னீர், வெண்ணெய், நெய்), கொழுப்புடன் கூடிய மாமிசம், மஞ்சள் கருவுடன் உள்ள முட்டை, பாதாம் பருப்பு, காய்கறிகள், மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை, ஆலிவ் ஆயில்.
சமைக்கும் முறை:
வழக்கமாக சமைப்பது போலத்தான் ஆனால் எண்ணெய், சமையல் உபகரணம்(இரும்பு அல்லது மண் பாண்டங்களை உபயோகிப்பது நல்லது) மற்றும் தானிய உணவுகள்,சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தவிர்த்தல் என்ற முறையில் வேறுபாடு உண்டு. வழக்கமாக பயன்படுத்தும் தூள் உப்பிற்கு பதிலாக கல்லுப்பு அல்லது ராக் சால்ட் (Rock Salt) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் உப்பை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
இது எப்படி ஆதிகாலத்து உணவு முறையாகும்?
கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்த்து கொழுப்பு உணவு வகைகளை காய்கறிகளுடன் எடுத்துக்கொள்கிறோம் அதனால்தான்.
எவ்வளவு காலம் எடுக்க வேண்டும்?
முக்கியமாக எடை குறைப்பிற்காக இந்த முறையை பின்பற்றலாம், விரும்பிய எடை குறைந்த பின் வழக்கமான உணவு முறையை பின்பற்றலாம். ஒரு முறை பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் சிறுதானியங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.
எவ்வளவு செலவாகும்?
சற்றே செலவு வைக்கும் உணவு முறைதான், மாதம் ஒருவருக்கு 8000 முதல் 10000 ரூபாய் வரை செலவாகும், சைவ அசைவ உணவு முறையைப் பொருத்தும் செலவு வேறுபடலாம்.
தொடர்வோம்.........
தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 2

- பேலியோ டயட்டை பின்பற்ற முடிவெடுத்த பின் முதலில் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
- பிறகு இரத்தப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் facebook குழுவின் அறிவுரைப்படி மருத்துவரின் ஆலோசனையுடன் சைவ அல்லது அசைவ உணவு முறையை பின்பற்றலாம்.
- குடிப்பதையும், புகைப்பதையும் மற்றும் குட்கா, பான்பராக் (பழக்கம் இருப்பின்) அடியோடு நிறுத்த வேண்டும்.
- நமக்கு விருப்பமான அளவு எடை குறையும் வரை ஒரு வகையான உணவு முறையும் பிறகு எடையை ஒரே அளவுடன் பராமரிக்க ஒரு வகையான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.
- இந்த உணவு கட்டுப்பாடு ஆரம்பித்த 100 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து அதற்க்கேற்றவாறு உணவு முறையில் மாறுதல் செய்து பின்பற்றலாம்.
- மேலும் குழுவாக சேர்ந்து பின்பற்றுவது மிகுந்த பலனை தரும்.
முக்கியமான உணவுகள் என்னென்ன?
கொழுப்பு சத்து உள்ள உணுவுகள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் (பன்னீர், வெண்ணெய், நெய்), கொழுப்புடன் கூடிய மாமிசம், மஞ்சள் கருவுடன் உள்ள முட்டை, பாதாம் பருப்பு, காய்கறிகள், மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை, ஆலிவ் ஆயில்.
சமைக்கும் முறை:
வழக்கமாக சமைப்பது போலத்தான் ஆனால் எண்ணெய், சமையல் உபகரணம்(இரும்பு அல்லது மண் பாண்டங்களை உபயோகிப்பது நல்லது) மற்றும் தானிய உணவுகள்,சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தவிர்த்தல் என்ற முறையில் வேறுபாடு உண்டு. வழக்கமாக பயன்படுத்தும் தூள் உப்பிற்கு பதிலாக கல்லுப்பு அல்லது ராக் சால்ட் (Rock Salt) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் உப்பை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
இது எப்படி ஆதிகாலத்து உணவு முறையாகும்?
கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்த்து கொழுப்பு உணவு வகைகளை காய்கறிகளுடன் எடுத்துக்கொள்கிறோம் அதனால்தான்.
எவ்வளவு காலம் எடுக்க வேண்டும்?
முக்கியமாக எடை குறைப்பிற்காக இந்த முறையை பின்பற்றலாம், விரும்பிய எடை குறைந்த பின் வழக்கமான உணவு முறையை பின்பற்றலாம். ஒரு முறை பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் சிறுதானியங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.
எவ்வளவு செலவாகும்?
சற்றே செலவு வைக்கும் உணவு முறைதான், மாதம் ஒருவருக்கு 8000 முதல் 10000 ரூபாய் வரை செலவாகும், சைவ அசைவ உணவு முறையைப் பொருத்தும் செலவு வேறுபடலாம்.
தொடர்வோம்.........
தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 2
No comments:
Post a Comment