இனி ஒரு மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் மொபைல் ரீசார்ஜ் செய்தால் சேவை
துண்டிக்கப்படும் என ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனால் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.10 லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுடன், மீதம் இருக்கும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதும் குறைந்து விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில், முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்; 15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும். பின், நம்பர் செயல் இழந்துவிடும்.
இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும். மொபைல் எண்ணில், 1,000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும். குறைந்தது, 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
--தினமலர் நாளிதழிலிருந்து
ஏர்டெல் வோடஃபோன் முடிவு நியாயமா? [FAQ]
‘ஏர்டெல், வோடபோன் ஐடியா’ நிறுவனங்கள், வரும் அழைப்புகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் சேவையை நிறுத்தியுள்ளன. அதனால், வரும் அழைப்புகளுக்காக, இந்நிறுவனங்களின் சேவையை வைத்திருப்பவர்கள், தற்போது, 28 நாட்களுக்கு ஒரு முறை, குறைந்தபட்சம், 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஏர்டெல், வேடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்துள்ளன. அவுட் கோயிங் சேவைக்காக மாதத்திற்கு ரூ.35 ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் மொபைல் போன் இணைப்புக்கள் 30 நாட்களில் துண்டிக்கப்படும். தொடர்ந்து இன்கம்மிங் சேவையும் 45 நாட்களில் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏர்டெலின் 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 15 கோடி வாடிக்கையாளர்களும் மாதத்திற்கு ரூ.35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்கின்றனர். 25 கோடி வாடிக்கையாளர்கள் இரண்டு சிம் கார்டுகளை கொண்ட மொபைல்களை பயன்படுத்துபவராக உள்ளனர். இவர்கள் இன்கம்மிங்கிற்கு ஒரு சிம்கார்டினையும், அவுட் கோயிங் அழைப்புக்களுக்கு ஒரு சிம்கார்டினையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இவர்கள் மிக குறைந்த அளவிற்கே ரீசார்ஜ் செய்கின்றனர். அதுவும் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிற நிறுவனங்களின் சேவையை பெறுவோம் தங்களின் சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வது மிகவும் குறைந்து விட்டதால், அந்நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.