Saturday 20 January 2018

மத்திய அரசின் மின் வாகன கொள்கையும் வேலை இழப்பு அபாயமும்:

‘மத்­திய அரசு, 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ள­தால், வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், 15 லட்­சம் பேர் வேலை­யி­ழக்க நேரி­டும்’ என, இந்­திய வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘அக்மா’ தெரி­வித்து உள்­ளது.

மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை குறைக்­கும் நோக்­கில், 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, மின் வாகன தயா­ரிப்­பில் விரைந்து இறங்­கு­மாறு, வாகன நிறு­வ­னங்­கள் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்ளன. இதை­யேற்று, மாருதி சுசூகி, டாடா மோட்­டார்ஸ் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­கள், மின் வாகன தயா­ரிப்­பில் கள­மி­றங்கி உள்ளன.


இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் கொள்­கை­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு, ‘அக்மா’ எழு­தி­யுள்ள கடி­தம்: போதிய அவ­கா­ச­மின்றி, 13 ஆண்­டு­களில், மின் வாகன பயன்­பாட்டை கட்­டா­யம் ஆக்­கி­னால், அந்த தொழில்­நுட்­பத்­தில், உதிரி பாகங்­களை தயா­ரிப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தி, தேவை­யான முத­லீ­டு­களை மேற்­கொள்­வது கடி­ன­மாக இருக்­கும். ஏற்­க­னவே, வாகன மாசு கட்­டுப்­பாடு தொடர்­பாக, 2020ல் அம­லுக்கு வர உள்ள, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ தொழில்­நுட்­பத்­தில், வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்­ப­தற்கு, பெரு­ம­ள­வில் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த முத­லீ­டு­கள் மீது, நியா­ய­மான வரு­வாய் கிடைக்க, குறைந்­த­பட்­சம், 10 ஆண்­டு­க­ளா­வது ஆகும்.

இந்­நி­லை­யில், பெரு­ம­ளவு முத­லீடு தேவைப்­படும், மின் வாகன உதிரி பாகங்­களின் தயா­ரிப்­பி­லும் இறங்க, நிறு­வ­னங்­க­ளால் இய­லாது. அத­னால், மின் வாகன கொள்­கையை, படிப்­ப­டி­யாக அமல்­ப­டுத்­த­லாம். இத­னால், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு மாறும் போது ஏற்­படும் வேலை­யி­ழப்பு பாதிப்பு, மிகக் குறை­வாக இருக்­கும்.

‘வரும், 2030ல், 40 சத­வீத வாக­னங்­களை, மின்­சா­ரத்­திற்கு மாற்­ற­லாம்’ என, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. இது­வும், வாகன உதிரி பாக நிறு­வ­னங்­களை பாதிக்­கும். ஏனெ­னில், மின் வாக­னங்­க­ளுக்­கான பெரும்­பா­லான முக்­கிய பாகங்­கள், வெளி­நாட்­டில் இருந்து தான் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்றன.

நடுத்­தர காலத்­தில், மின் வாக­னங்­க­ளுக்­கான, ‘பேட்­டரி’ தேவை குறை­வா­கவே இருக்­கும் என்­ப­தால், அவற்­றின் தயா­ரிப்­பில் இறங்­கும் நிறு­வ­னங்­க­ளால், முத­லீட்­டிற்கு ஏற்ற வரு­வாய் ஈட்ட முடி­யாது. அத­னால், மின் வாகன அம­லாக்­கத்தை தள்ளி வைக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

முதலீடு குறையும்:
உட­ன­டி­யாக, மின் வாகன புழக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது சரி­யாக இருக்­காது. அதற்கு, 20 – 30 ஆண்­டு­கள் அவ­கா­சம் தேவை. முத­லில், எரி­பொ­ரு­ளில் இருந்து மின் வாக­னங்­க­ளுக்கு மாறு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்த வேண்­டும். இத­னால், ஒரு பகுதி தொழி­லா­ளர்­கள், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு சுல­ப­மாக மாறு­வர். அடுத்த, 10 ஆண்­டு­களில், எரி­பொ­ருள் இன்­ஜின் தயா­ரிப்­பில், முத­லீடு வெகு­வாக குறைந்து விடும்.
-குமார் கந்தஸ்வாமி, பங்குதாரர், ‘டிலோட்டி இந்தியா’

--தினமலர் நாளிதழிலிருந்து.


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...