Labels
- Agriculture (18)
- Books (4)
- Children (6)
- Computer (4)
- Dedicated persons (16)
- Education (12)
- Entertainment (5)
- Environment (21)
- Gadgets (2)
- General (13)
- Good reads (11)
- Health (24)
- Intresting (1)
- Memes (2)
- News (54)
- Photos (2)
- Poem (2)
- Self Employment (15)
- Spiritual (4)
- Stories (2)
- Structures and Architecture (1)
- Technique (1)
- Travel (16)
- Water conservation (10)
Monday, 7 September 2015
படித்ததில் பிடித்தது 1
சுவாமி விவேகனந்தர்
1) மனதை ஒரு செயலுக்கு பழக்கபடுத்தி விட்டால் நம்மை அறியாமலேயே அந்த செயல் ஒரு பழக்கமாகவும் பிறகு வழக்கமாகவும் மாறுகிறது.
2) மினசாரமும் மின்சார உபகரணங்களும் உள்ளது என்று வைத்துக்கொள்வோம், மின்சாரம் காத்தாடிக்கு சென்றால் காற்று வருகிறது, விளக்கிற்கு சென்றால் வெளிச்சம் வருகிறது. அதே போல மனம் என்பது மின்சாரத்திற்கு ஒப்பானது. மனம் கண்களுடன் சேர்ந்தால் பார்க்கிறோம், காதுடன் சேர்ந்தால் கேட்கிறோம் புலன்களான கண்ணும் காதும் வெறும் ஜடங்கள் அவைகளுடன் மனம் சேர்ந்தால் மட்டுமே இயக்கம்.
ஓஷோ
அற்புதத்தில் அற்புதம்
1) நீங்கள் யார் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன் எல்லா நோய்களும் பறந்துவிடும். உங்கள் சுய அறிவை மறைத்து வைப்பதாலும், உங்களை நீங்கள் புறக்கணிப்பதாலும்தான் நோய்கள் நிலைகொள்கின்றன.
2) வெளியே பார்க்கும் கண்களை மூடிக்கொள்ளும் போது கண்கள் வழியாக செயல்பட்ட அந்த ஆற்றல் உள்நோக்கி திரும்ப ஆரம்பித்துவிடுகிறது .
3) ஒரு மரத்தை நெருங்கினால் இனிய உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வு உங்கள் உள்ளிருந்து வருவது, மரத்திலிருந்து வருவதன்று. மரத்திடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமற் போவதால் நீங்கள் நிம்மதி அடைகிறீர்கள்.
4) பிரபஞ்சமே உன்னை வேண்டும் போது-கடவுளும் உன்னை வேண்டும் போது ஒரு அர்த்தம் , முக்கியத்துவம், நறுமணம் பிறக்கிறது.
5) களங்கமான வினா:பதில் தெரிந்து கொண்டே வினா கேட்பது. களங்கமற்ற வினா: பதில் தெரியாமல் அறிந்து கொள்ளும் நோக்கோடு கேட்கும் வினா.
6) பொறுப்புணர்வை ஏற்காதவரை நீங்கள் உள்ளீடற்றவராகத்தான் இருக்க முடியும், மேல் மட்டத்தில்தான் மிதந்து கொண்டிருக்க முடியும், ஆழங்களுக்குள் செல்ல முடியாது.
7) அகபோருக்கான சரியான சொல் உராய்வு. உங்களுக்குள் உராய்வு இல்லையென்றால், நீங்கள் மேலோட்டமான ஆற்றலையே பயன்படுத்துவீர்கள்.
8) மனதோ (அ) உடலோ சொல்வதை கேட்பதில்லை என்ற முடிவை எடுத்து பாருங்கள் உள்முரண் தோன்றும், உள்முரண் உராய்வை ஏற்படுத்தும்.
9) மனமும் , உடலும் எளிமையான, அற்பமான விஷயங்களுக்கே நம்மை இட்டுச்செல்லும். அதனை எதிர்த்து கடினமான செயல்களுக்கு உட்படும்போது நமக்குள் ஒரு சக்தி பிறக்கிறது.
10) நீங்கள் ஒரு முயற்சி செய்து பார்க்க விரும்பினால் வெற்றி பெற்றே தீரவேண்டும், இல்லாவிட்டால் முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
11) வெற்றி பெற்றே தீருவது என்ற தீர்மானம் எடுத்த பிறகே முயற்சியில் இறங்குங்கள். தோற்கும் போறல்ல இது வென்றே முடிக்க வேண்டிய போர் இது.
12) நீங்கள் ஒரு முறை வென்றுவிட்டால் வேறு அடுக்கின் ஆற்றலை வென்றுவிடுவீர்கள்.
Sunday, 6 September 2015
என்னை பற்றியும் எழுத்தின் நோக்கம் பற்றியும்.....
என்னை பற்றி
ஒரு தம்பி, ஒரு தங்கை
உள்ள 5 பேர் கொண்ட நடுத்தரக்
குடும்பத்தில் தந்தைக்கு பின் பொறுப்புகளை
ஏற்க்கபிறந்தவன். அண்ணன், அக்கா, மாமா, அத்தை, சித்தி, சிற்றப்பா, பெரியம்மா, பெரியப்பா என அனைத்து சொந்தங்களும், நல்ல நண்பர்களும், இறை நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கை. சொந்த வீடு, படிப்பு மற்றும்
மேற்சொன்ன சொந்தங்களை தவிர வேறு சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. படிப்பு முடிந்து வேலைக்கு
செல்ல உள்ள சூழ்நிலை.
குறை என்று இல்லாமல் வாழ்க்கை இருக்குமா?
நான் அதிகமாக எதுவும் பகிர்ந்து கொள்ளாத ஓர் ஆஆஆஆசாமி, யாருடனும் அவ்வளவாக பகிர்ந்து
கொள்ள மாட்டேன், ஏனோ
என்னை பார்பவர்களுக்கு நான் ஒரு perfect person என்ற எண்ணம் தோன்றி விடுகிறது, அதாவது imageஐ damage பண்ண நான் மற்றவர்களை
அனுமதிப்பதில்லை. அனைவரிடமும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு.
இவைகளினால் hai என்றால் hai bye என்றால் bye, அடுத்தவர் என்ன
சொன்னாலும் சரி என்று ஏற்று கொள்வது. எனவே எனது அபிப்ராயத்தை யாரும் கேட்பதும் இல்லை
நானும் சொல்வதும் இல்லை எனது குடும்பத்தை தவிர.
சரி எதற்கு எழுத வேண்டும்?
தொடர்ந்து பேசும் பொழுதும்,
எழுதும் பொழுதும் நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும். மனதில் போட்டு
குழப்பி கொண்டிருக்கும் விஷயங்களை எழுத்து வடிவில் கொண்டு வர நிறைய யோசிக்க
வேண்டும் வார்த்தைகளை தேட வேண்டும் இந்த செயல்களினால் நாம் தெளிவான ஒரு பாதையை
வகுத்து கொள்ள முடியும். நம்மை நாம் நம்மோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். மேலும் அனுபவங்களை
மறந்து போக வாய்ப்புகள் அதிகம், அந்த சமயங்களில் நாம் நம்மை தேடி எடுத்து கொள்ள முடியும்.
தலைமலை பயண அனுபவம்: 4
லாரி பயணம்: அடுத்து 1.15 க்கு தான் துறையூருக்கு வண்டி, நல்ல நேரத்தில் வந்து மாட்டிகொண்டோம் என்று
தோன்றியது. பெரியப்பாவும் அண்ணனும் மூடியிருந்த கடையின் தாழ்வாரத்தில் அமர்ந்து
கொண்டனர். எதிரே உணவகத்தில் சீவலபேரிபாண்டி படம் ஓடிகொண்டிருந்தது, ஊர்காட்டி கல்லின் மேல் அமர்ந்து அதை பார்த்து
கொண்டிருந்தேன். துறையூர்-நாமக்கல் சாலையில் இரவில் அதிக லாரிகள் போய்வரும்
அதற்காகவே அந்த சாலையோர உணவகங்கள்
அனைத்தும் மூன்று மணி வரை திறந்திருக்கும். துறையூர் செல்லும் லாரிகளை பிடித்து
ஊர் சென்றால் என்ன என்று தோன்றியது. அதனால் வரும் லாரிகளை எல்லாம் நிறுத்தி பார்த்தேன்
ஒன்று கூட நிற்க வில்லை. ஒரு மணி நேரம் கழித்து 12.15 இருக்கும் ஒரு லாரி நின்றது,
மூன்று பேர்
போக வேண்டும் என்றேன் சரி வாருங்கள் என்றார் 60 வயது
மதிக்கத்தக்க முதியவர், அவருக்கு துணையாக 10 வயதில்
ஒரு பையன்.
(http://www.buzzle.com/images/people/body-language/man-asking-for-lift.jpg)
லாரி தூக்கம்: நான், அண்ணன், பெரியப்பா மூவரும் ஓட்டுனருக்கு பின் உள்ள
இருக்கையில் அமர்ந்து கொண்டோம். கடைசியாக ஏறிய நான் சிறுவனுக்கு பின் உள்ள கட்டையில்
அமர்ந்து கொண்டேன். துறையூர்-நாமக்கல் சாலை சமமாக இருக்காது பள்ளங்கள் நிறைந்து காணப்படும், இப்போது நன்றாக உள்ளது. நல்ல
அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் நிதானமாகவும் மிதவேகத்துடனும் ஓட்டிச் சென்றார்.
கருத்தாழம்மிக்க பாடல்கள், நடு சாமம், குலுங்கி குலுங்கி சென்ற
லாரி எங்களை தூக்கத்தில் ஆழ்த்தியது. தா.பேட்டை ஊரை தாண்டியிருக்கும் போது முகத்தில் தண்ணீர் அடித்தது போல் இருந்தது, என் மேல் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த சிறுவனும்
நானும் விழித்து கொண்டோம் நல்ல மலை பொழிந்திருந்தது.
சாலையும் சகதியும்: கண்ணனூர், இமயம் கல்லூரி, சமத்துவபுரம்
தாண்டி வந்திருக்கும் போது எங்களுக்கு முன்னே ஜல்லி ஏற்றி
சென்ற லாரி சேற்றில் சிக்கி கொண்டது. அது single lane road புதிதாக போடப்பட்டது, எனவே அருகில் வயல்களில் இருந்த மண் எடுத்து
சாலையின் இருபுறமும் போட்டிருந்தனர். அதில் மழை நீர் சேர்ந்து சேறும் சக்தியுமாக மாறிவிட்டது, அதிக பாரமிருந்தால் லாரி சாலையை
விட்டு பள்ளத்திற்குள் செல்லும் அபாயம், ஆதலால் எதிர் எதிரில் வாகனங்கள் அப்படியே
நின்று விட்டது.
அப்பாடா வீடு வந்தாச்சு: நாங்கள் சென்ற லாரி இரண்டாவதாக நின்று விட்டது, 15 நிமிடங்களில்
வண்டிகள் நிறைய சேர்ந்துவிட்டது. இப்போதைக்கு தீர்வதாக தெரியவில்லை மாமா
வீடு அருகில் தான் என நினைத்து இறங்கி நடக்கலாம் என
கூறிவிட்டேன். பெரியப்பாவும் பஸ் டிக்கெட்டிற்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார். மணி 1.25am, இது என்னடா புது சோதனை? நடந்து கொண்டே இருக்கிறோம்
இன்னமும் வீட்டை அடையவில்லை, பின் ஒரு வழியாக அதிகாலை 2.15 க்கு வீட்டை நடந்தே அடைந்தோம். போக்குவரத்து சரியாகி
லாரிகளும் வர துவங்கின. தலைமலை மறக்க முடியாத பயணம் 24 ஆம்
திகதி அதிகாலை 4.45 மணிக்கு துவங்கி 25 ஆம் திகதி அதிகாலை 2.15 மணிக்கு நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)
கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...
-
தினமலர் நாளிதழில் "சொல்கிறார்கள்" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...
-
ஒய்.ஆர்.ஜான்சன் : நாட்டின் முதல் நவோதயா பள்ளியின்முதலாவது முதல்வராக பணியாற்றியவர். ஜவஹர் நவோதயா பள்ளியின் தோற்றம் : முன்னாள் பிர...
-
வீடு தேடி வரும் மரக்கன்று!மதுரையில், 'மழைத்துளி' என்ற பெயரில் இயங்கி வரும், 'வாட்ஸ் ஆப்' குழுவின் ஒருங் கிணைப் பாளர், மதன் ...
-
ச மீபத்தில் குவஹாத்தியில் முனிசிபாலிட்டி குப்பை கொட்டும் பகுதிக்கு (GMC Dumping Site) முதல் முறையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்து....
-
பல்லக்கு/ stretcher வசதி: சாப்பிட்டு முடித்து செருப்புகளை மறைவிடத்தில் வைத்தவிட்டு வெறும் காலில் மலை பயணத்தை தொடர்ந்தோம், பாத இரட்சை இல...
-
அறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி ப...
-
இ ன்றைய அன்றாட வேலைகளில் கணிப்பொறியின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது, அத்தகைய சூழலில் சிறு சிறு வேலைகளுக்கு கூட நாம் Intern...
-
1) Now I want to make graph for PH Vs TH and PH Vs Kr in the same graph, then here we need primary and secondary axis. ...
-
தலைமலை, நாமக்கல் -- துறையூர் சாலையில் உள்ள பவுத்திரம் என்ற ஊரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை. மலையின் உச்சியில் பெருமாள் ...
-
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச...