Sunday 6 September 2015

தலைமலை பயண அனுபவம்: 4

லாரி பயணம்: அடுத்து 1.15 க்கு தான் துறையூருக்கு வண்டி, நல்ல நேரத்தில் வந்து மாட்டிகொண்டோம் என்று தோன்றியது. பெரியப்பாவும் அண்ணனும் மூடியிருந்த கடையின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டனர். எதிரே உணவகத்தில் சீவலபேரிபாண்டி படம் ஓடிகொண்டிருந்தது, ஊர்காட்டி கல்லின் மேல் அமர்ந்து அதை பார்த்து கொண்டிருந்தேன். துறையூர்-நாமக்கல் சாலையில் இரவில் அதிக லாரிகள் போய்வரும் அதற்காகவே  அந்த சாலையோர உணவகங்கள் அனைத்தும் மூன்று மணி வரை திறந்திருக்கும். துறையூர் செல்லும் லாரிகளை பிடித்து ஊர் சென்றால் என்ன என்று தோன்றியது. அதனால் வரும் லாரிகளை எல்லாம் நிறுத்தி பார்த்தேன் ஒன்று கூட நிற்க வில்லை. ஒரு மணி நேரம் கழித்து 12.15 இருக்கும் ஒரு லாரி நின்றது, மூன்று பேர் போக வேண்டும் என்றேன் சரி வாருங்கள் என்றார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர், அவருக்கு துணையாக 10 வயதில் ஒரு பையன். 

 (http://www.buzzle.com/images/people/body-language/man-asking-for-lift.jpg)

லாரி தூக்கம்: நான், அண்ணன், பெரியப்பா மூவரும் ஓட்டுனருக்கு பின் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டோம். கடைசியாக ஏறிய நான் சிறுவனுக்கு பின் உள்ள கட்டையில் அமர்ந்து கொண்டேன். துறையூர்-நாமக்கல் சாலை சமமாக இருக்காது பள்ளங்கள் நிறைந்து காணப்படும், இப்போது நன்றாக உள்ளது. நல்ல அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் நிதானமாகவும் மிதவேகத்துடனும் ஓட்டிச் சென்றார். கருத்தாழம்மிக்க பாடல்கள், நடு சாமம்,  குலுங்கி குலுங்கி சென்ற லாரி எங்களை தூக்கத்தில் ஆழ்த்தியது. தா.பேட்டை  ஊரை தாண்டியிருக்கும் போது முகத்தில் தண்ணீர் அடித்தது போல் இருந்தது, என் மேல் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த சிறுவனும் நானும் விழித்து கொண்டோம் நல்ல மலை பொழிந்திருந்தது. 

சாலையும் சகதியும்: கண்ணனூர், இமயம் கல்லூரி, சமத்துவபுரம் தாண்டி வந்திருக்கும் போது எங்களுக்கு முன்னே ஜல்லி ஏற்றி  சென்ற லாரி சேற்றில் சிக்கி கொண்டது. அது single lane road புதிதாக போடப்பட்டது, எனவே  அருகில் வயல்களில்  இருந்த மண் எடுத்து  சாலையின் இருபுறமும் போட்டிருந்தனர். அதில் மழை நீர்  சேர்ந்து சேறும் சக்தியுமாக மாறிவிட்டது, அதிக பாரமிருந்தால் லாரி சாலையை விட்டு பள்ளத்திற்குள் செல்லும் அபாயம், ஆதலால் எதிர் எதிரில் வாகனங்கள் அப்படியே நின்று விட்டது. 

அப்பாடா வீடு வந்தாச்சு: நாங்கள் சென்ற லாரி இரண்டாவதாக நின்று விட்டது, 15 நிமிடங்களில்  வண்டிகள் நிறைய சேர்ந்துவிட்டது. இப்போதைக்கு தீர்வதாக தெரியவில்லை மாமா வீடு அருகில் தான் என நினைத்து இறங்கி நடக்கலாம் என கூறிவிட்டேன். பெரியப்பாவும் பஸ் டிக்கெட்டிற்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு  இறங்கி நடக்க ஆரம்பித்தார். மணி 1.25am,  இது  என்னடா புது சோதனை? நடந்து கொண்டே இருக்கிறோம் இன்னமும் வீட்டை அடையவில்லை, பின்  ஒரு வழியாக அதிகாலை 2.15 க்கு வீட்டை நடந்தே அடைந்தோம். போக்குவரத்து சரியாகி லாரிகளும் வர துவங்கின. தலைமலை மறக்க முடியாத பயணம்  24 ஆம் திகதி அதிகாலை 4.45 மணிக்கு துவங்கி 25 ஆம் திகதி அதிகாலை 2.15 மணிக்கு நிறைவுற்றது.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...