முடிந்தது Lab visit இனி ஊர் சுற்றுவதுதான் பாக்கி, மெரீனா கடற்கரை செல்ல முடிவெடுத்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக சென்றோம். கடற்கரையில் விளையாடலாம் என்று volley ball எடுத்துச் சென்றும் விளையாட மனமில்லை. சிறு சிறு குழுவாக பிரிந்து சென்று விட்டோம். நான், ஜோஷ்வா, மார்ஷல், ராஜகோபால் நால்வரும் கடல் அலையோடு அளவலாவிகொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் துறைமுகத்தை நோக்கி நடந்து சென்றோம். சூரியனும் விடைபெற்று வேறு கண்டத்தை நோக்கி சென்றுவிட, அரை நிலா சூரியனை ஈடுகட்ட முயற்சி செய்து கொண்டிருக்க, யார் வந்தாலென்ன யார் சென்றாலென்ன நான் எப்போதும் கரையை நோக்கி படையெடுப்பேன் என அலைகள் ஓயாமல் சத்தமிட நாங்களும் பேரூந்தை நோக்கி திரும்பினோம், மணி இரவு 7.15. சென்றவர்கள் யாரும் பேருந்திற்கு திரும்பவில்லை எனவே மீண்டும் எங்காவது சென்று வர எண்ணி Dr MGR அவர்களின் சமாதிக்கு கிளம்பினோம், வருவதற்கு 8 மணி வரை அவகாசம் கொடுக்கபட்டிருந்தது, நாங்கள் வருவதற்கு 8.15 ஆகிவிட்டதால் அனைவரும் எங்களுக்காகதான் காத்திருந்தனர்.
(http://indiastudiesprogram.blogspot.in/2011/10/in-pictures-marina-beach-at-night.html)
தற்போது WUS செல்வது, நாளை ஸ்பென்சர்
பிளாசா செல்வது என்று முடிவெடுத்து, அனைவரும் WUSஐ 9.30 மணிக்கு சென்றடைந்தோம், இரவு உணவுக்கு பின் ஆசிரியர் கையெழுத்து போட்டு 46 பேரையும்
உள்ளே அழைத்து சென்றார். சென்ற வருடம் பெங்களூர் சென்றிருந்தபோது Mysore youth
Hostel ல் தங்கினோம் (தங்கள் கல்லூரி வாயிலாக Education tour செல்லும் போது students தங்குவதற்காகவே கட்டப்பட்டதுதான் இந்த Youth hostel), மிக அருமையான சுத்தமான இடம் அது. அதில் கால் பகுதி கூட இங்கு
சுத்தம் கிடையாது. படுக்கைகள் போதுமான அளவு இல்லை கட்டில்கள் இல்லை. இரண்டு மெத்தைகளும்
போர்வையும் மட்டுமே இருந்தன.
4 ஆசிரியர்களுக்கு 2 அறைகளும், 16 பையன்களுக்கு
3 அறைகளும் வழங்கப்பட்டன. அதிலும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் ஏற்கனவே
2 பேர் தங்கியிருந்தனர், அவர்களுடன் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. அறையின் வெளியில் இருந்த மெத்தைகளை எடுத்து பகிர்ந்துகொண்டோம்.
பெண்களுக்கான அறைகளை பற்றி அவர்கள் குறை சொன்னதாக தெரியவில்லை. அடுத்த
நாள் 25 ஆம் தேதி காலை 4 மணிக்கு எழுந்து புறப்பட தயாரானோம், ஏனெனில் 7 மணி வரைதான் எங்களுக்கான
நேரம். ஹோட்டலில் காலை உணவுக்கு பின் ஒரு குழு புகைப்படமெடுத்துகொண்டு அனைவரும் உள்ளார்களா என்று
சரிபார்த்து கிளம்பி வடபழனி சென்று அரைமணி நேரம் செலவிட்டோம், பின் வள்ளுவர் கோட்டம் சென்றோம்.
கல்லூரியில் சுற்றுலா கிளம்புமுன் இருந்த பையன்கள்-பெண்கள் கருத்து வேறுபாட்டால் இந்த பயணம் பெங்களூரு
பயணத்தைப் போல கலகலப்பாக இல்லை. பிறகு அனைவரும் முடிவெடுத்து ஸ்பென்சர் பிளாசா
சென்றோம். 12 மணிக்கு பேருந்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம். நேற்று சென்றிருந்தாலும்
கூட ப்ளாசாவின் அழகு என்னை கவர்ந்தது. எங்கு நோக்கினும் இளைஞர்களின் தலையே தென்படுகிறது.
5 தளங்களுடன் பிரம்மாண்டமாக இருந்த கடையில் நாங்கள் 46 பேரும் குழுவாக பிரிந்து பொருட்கள்
வாங்குவதும், புகைப்படம் எடுப்பதும், சுற்றி சுற்றி வருவதுமாக பொழுதை கழித்தோம்.
(http://www.muavemaybaygiare.edu.vn/2015/09/5-ia-iem-mua-sam-giai-tri-ly-tuong-tai.html)
எனக்கு
string instrumentsல் ஆர்வமிருப்பதால் musical section சென்று CD தேட தொடங்கினேன், அதற்குள் என்னுடன் வந்தவர்களை
காணோம். 20 நிமிடங்களுக்குப் பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் CD ஒன்றை வாங்கி
வெளியில் வந்து ஜோஷ்வா, மார்ஷல் அவர்களை தேடி கொண்டு சென்று துணிக்கடையில் பிடித்தேன்.
ஆனந்த் & குழு அங்கு சுற்றி கொண்டிருந்தார்கள் அவர்களுடன் சிறிது நேரம் சுற்றி
விட்டு, ஆனந்திற்கு ஒரு T - shirtம் தம்பிக்கு
ஒரு sleeveless T - Shirtம் வாங்கினோம்.
எல்லாம் முடிந்து வண்டிக்கு வந்தோம் வண்டி மஹாபலிபுரத்திற்கு செல்ல தயாராய் இருந்தது.
No comments:
Post a Comment