Saturday 28 May 2016

சென்னை -கல்வி சுற்றுலா :4

மஹாபலிபுரம் செல்வதும் இதுவே முதல் முறை. ஒரு முறை உணவகத்தில் நின்று கிளம்பிய வண்டி முட்டுக்காடு படகுத்துறையை தாண்டி சென்றபோது சிலர் படகில் செல்ல ஆசைப்பட்டதால் திரும்பி வந்து விலையை விசாரித்தோம் நபர் ஒருவருக்கு 35 ரூபாய் படகில் சென்று வர. "நான் போகல நீ போ" "ஏ நான் போகல நீ வேணும்னா போ" என ஆளாளுக்கு சொல்ல இறங்கியதற்கு நானும் ஜோஷ்வாவும் 2 cone icecream 1 spoon வாங்கிகொண்டு மீண்டும் வண்டிக்கே வந்துவிட்டோம்.                                                    


 வண்டி இப்போது East Coast Road ல் சென்று கொண்டிருந்தது, ஓட்டுனர் ரஜினிகாந்த அவர்களின் என்றும் அழியாத பாடலான "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலை போட்டுவிட  மாணவர்கள் அனைவரும் உற்சாகமாயினர். அந்த பாட்டிற்கும், வண்டி சென்ற வேகத்திற்கும், மாணவர்களின் விசில் சத்ததிற்கும்  சிலரின் நடனத்திற்கும் அட அட அட அட ............ அந்த தருணங்கள் மயிர்கூச்செறிய வைத்துவிட்டன (simply electrifying moment ). அந்த பாடல் முடிந்தவுடன் நான் பின்பக்க கதவை திறந்து வைத்து கடலின் அழகையும், இயற்கை அழகையும் பருகிகொண்டேவந்தேன், கடல் நீரை தானே பருகமுடியாது. என்னுடன் இன்னும் சிலரும் படிக்கட்டில் அமர்ந்துகொண்டனர். 20 நிமிடம் கழித்து முதலை பண்ணையில் வண்டி நின்றது. பின் கதவு திறந்திருந்ததால் கவன்விற்கும் சிறுவன் வந்து "வாங்கிக்கோங்க வாங்கிக்கோங்க அண்ணா" என்று சொல்லவும் சுற்றுலாவின் கடைசி பொருளாக அதை 10 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். முதலைகளை பார்க்க சிலர் வரவில்லை என்று சொல்ல மீதமுள்ள அனைவரும் உள்ளே சென்றோம், ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம். சிறிய பன்னைதான் ஏற்கனவே முதலைபன்னையை பார்த்திருந்ததால் அவ்வளவாக சுவாரஸ்யமில்லை. அங்கிருந்த ஆமையும் மீனும் முதலைகளைவிட  அழகாக இருந்தன.


பின் அங்கிருந்து கிளம்பி 4 மணியளவில் மகாபலிபுரத்தை சென்றடைந்தோம். 5 ரூபாய் அனுமதி கட்டணம், உள்ளே சென்றதும் முதலில் தென்பட்ட புல்தரை அருமையாக இருந்தது நன்கு பராமரித்து வருகின்றனர். பச்சை கம்பளம் விரித்தார் போன்று அழகான வரவேற்ப்பை தந்தது. ஒரு சிலர் அங்கு நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டோம், அது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். ஏனெனில், அழகான மாலை நேரத்து இளவெயிலின் பொன்னொளி எங்கள் மீது விழுகிறது, எங்களுக்கு பின்னே பச்சை கம்பளம் விரித்தார் போன்று அழகான புல்வெளி, அதற்க்கு பின்னே கடலின் கரு ஊதா நிறம், அனைத்திற்கும் மேலே வானத்து இள ஊதா நிறம்  இவை அனைத்தும் சேர்ந்து அப்படி ஒரு அழகான புகைப்படமாக அமைந்தது அது. நான் நிறைய கோவில்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றேன் ஆனால் ஒரே ஒரு கோவில் மட்டும் தான் இருந்தது. கோவிலை சுற்றி பார்த்துவிட்டு  வெளிநாட்டு பயணி ஒருவரை அழைத்து ஒரு குழு புகைப்படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.


சிறிது தூரம் சுற்றி வந்து கடற்கரையை அடைந்தோம். இங்கும் volley ball எடுத்து வந்து விளையாடவில்லை, திடீரென்று ஜோஷ்வா கடலில் குளிக்க போகிறேன் என்று சட்டையை கழற்ற, பின் மார்ஷல் உற்சாகமாக பின் நானும் செந்திலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு கடலில் குளித்து கும்மாலமிட்டோம். செந்தில் நன்கு மகிழ்ச்சியாக விளையாடினான். பிறகு ஆசிரியர் வந்து திட்டி எங்களை கரைக்கு வர சொன்னார். கரைக்கு வந்ததும் அதே உற்சாகத்தோடு volley ball விளையாடினோம். கடலில் குளித்த அனைவரும் நல்ல நீரில் ஒரு முறை குளித்து விட்டு வரும் வழியில் நானும் ஆனந்தும் வீடிற்கு பொருள்கள் வாங்க கடைக்கு சென்று கிளிஞ்சல்கள், சங்கு, சிப்பி போன்ற பொருள்களால் ஆன சிலவற்றை 100 ரூபாய்க்கு வாங்கிகொண்டு வந்தோம். அனைத்தும் முடிந்து கல்லூரியை நோக்கி வண்டி கிளம்பியது, வழியில் 9.50 மணிக்கு 3 star Hotel ஒன்றில் வண்டி நின்றது. ஊஞ்சல், seesaw ல் சிறிது நேரம் விளையாடி விட்டு ஒவ்வொருவராக சாப்பிட சென்றோம். கவனிப்பு மெதுவாகவே நடந்தது சாப்பாடு நன்றாக இருந்தது, ஒரு குழு புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். ஆட்டம் பாட்டத்துடன் வண்டி சென்று கொண்டிருந்தது, அப்போது "வாழ மீனு" பாடல் மிகவும் பிரபலம், போன சுற்றுலாவின் பொது அந்த பாடலை தேடினோம் கிடைக்கவில்லை இப்போது கிடைத்தது.


மார்ஷலும், ஜோஷ்வாவும் அந்த costume உடன் தோன்ற செந்தில் எதிர்பாராத விதமாக நடனம் ஆட அருமையான தருணங்கள் அவை. அதுதான் ஆரம்பம் ஒவ்வொரு ஆசிரியராக ஆட தொடங்கினார்கள். கோபால் ஐயாவும் ஏனோக் ஐயாவும் காதல் வந்திருச்சி, மான மதுர பாடல்களுக்கு நடனம் ஆட வண்டியே அல்லோலஹல்லோல பட்டு போனது. நான் அனைத்தையும் ரசித்துகொண்டிருந்தேன். 1 மணி இருக்கும் வண்டி விழுப்புரத்தில் நின்ற பொது Mercy madam மயக்கம் போட்டு விழுந்து விட்டார், அவரை ஆசுவாசபடுத்தி நாங்கள் கிளம்பினோம் ஆட்டம் பட்டம் இன்றி வண்டி அமைதியாக சென்றது. கலை 5 மணிக்கு பயணம் நல்லபடியாக நிறைவுற்று கல்லூரி வந்து சேர்ந்தோம்.  இந்த சுற்றுலா இனிதாகவே அமைந்தது  பலருக்கு இதுவே கடைசியான கல்லூரி காலகட்டம் எனவே பலரும் நன்றாக Enjoy செய்தனர்.

Photo Credit:
http://tamilnadu-favtourism.blogspot.in/2015/10      muttukadu-boat-house.html
http://www.destinationinfinity.org/2013/01/16/boating -in-chennai-muttukadu-boat-house-ecr/
http://www.destinationinfinity.org/2013/01/28/crocodile-park-madras-crocodile-bank-ecr-chennai/
http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram_structural.asp
https://sidheartchandrashaker.wordpress.com/2006/05/07/vaala-meenukkum/


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...