நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே, வருமானம் ஈட்ட வழிக்கூறும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்: சிறு
வயது முதலே எனக்கு, நாட்டு மாடுகள் மேல் பிரியம். பிள்ளையார்பட்டி,
பஞ்சாப் நேஷனல் வங்கி பயிற்சி மையத்தில், நாட்டு மாடு வளர்ப்பு பயிற்சி
கொடுத்த போது, நகை தணிக்கையாளரான நானும் கலந்து கொண்டேன். மூன்றாண்டுக்கு
முன், அந்த பயிற்சி மைய இயக்குனர், இரண்டு பசு மாடு, ஒரு காளை, ஒரு
கன்றுக்குட்டி வாங்கி கொடுத்தார்.
'நாட்டு மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி விற்றால், பாலை விட அதிக வருமானம் கிடைக்கும்' என, 'கொங்கு கோசாலா குரூப்'பை சேர்ந்த சிவகுமார் கூறினார். அதையடுத்து, சாணத்தை மதிப்புக்கூட்டும் விதம், அதற்கான சந்தை வாய்ப்பை அறிந்து, விபூதி தயாரித்து, விற்பனை செய்கிறேன்.
இப்போது எங்கள் பண்ணையில், 60 மாடுகள் உள்ளன; பெரும்பாலானவை காங்கேயம் ரகம் தான். பண்ணையை பராமரிக்க, ஒரு குடும்பம் தங்கி இருக்கிறது. மாடுகள் சாணம் போட்டவுடனே, பசு மாட்டு சாணம் தனியாகவும், காளை மாட்டு சாணம் தனியாகவும் பிரித்து வைத்து விடுவர். மாடுகளின் சிறுநீர், வாய்க்கால் வழியாக தொட்டிக்கு செல்லும் விதமாக, இரண்டு கீழ்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .
தொடர்புக்கு: 73389 39369
-- தினமலர் நாளிதழிலிருந்து.
தொடர்புடையவை:
விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!
கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்

- பசு மாட்டு சாணத்தில் விபூதி தயாரிப்போம்; 1 கிலோ விபூதி, 500 ரூபாய்க்கு வாங்கி கொள்கின்றனர். மாதம், 75 கிலோ விபூதி விற்றால், 37 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.
- 1 லி., சிறுநீர், 50 ரூபாய் என, மாதம், 500 லி., வரை விற்பதால், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
- கன்றுகுட்டி குடித்தது போக தினமும், 15 லிட்டர் பால் கறந்து, 1 லி., 80 ரூபாய் என, மாதம், 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
- காளை மாட்டு சாணத்தை உரத்துக்கு பயன்படுத்துவோம். விபூதி தயாரித்தது போக, மீத சாணத்தை, ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளுக்கு விற்பதால், 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.
- இவ்வாறு, அனைத்தும் சேர்த்து, மாதம், 1.02 லட்சம் ரூபாய் வருமானமும், மாடுகளுக்கு தீவனம், வேலையாள் சம்பளம் என, செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 73389 39369
-- தினமலர் நாளிதழிலிருந்து.
தொடர்புடையவை:
விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!
கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்
No comments:
Post a Comment