கருங்கோழி மற்றும் நாட்டுக் கோழி வளர்த்து, லாபம் ஈட்டி வரும், தஞ்சை
மாவட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, சரவணன்: விவசாய
குடும்பத்தில் பிறந்த நான், கல்லுாரி படிப்பு முடித்து, சென்னையில் தனியார்
நிறுவனங்களில் வேலை செய்த போது, பொழுது போக்காக கருங்கோழிகளை வளர்க்க
ஆரம்பித்தேன். ம.பி., - ஆந்திர மாநிலங்களில் இருந்து, கலப்பு இல்லாத,
'ஒரிஜினல்' கருங்கோழியை வாங்கி வளர்த்தேன்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எங்களுக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலத்தில், தென்னை முழுக்க இயற்கை முறை பராமரிப்பு செய்யும் நிலையில், நெல் சாகுபடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இத்துடன், நாட்டுக் கோழி, கருங்கோழிகளை வளர்த்து வருகிறேன்.
அசோலா, வேப்பிலை, முருங்கை இலை, அகத்திக்கீரை என, கீரைகளை தான் கோழிகளுக்கு உணவாக கொடுக்கிறோம். அதோடு, பகல் நேரத்தில் தோட்டத்துக்குள் மேய்ச்சலுக்கு விடுவதால், நாட்டுக்கோழிகளுக்கான குணாதிசயத்தோடு ஆரோக்கியமாக வளர்கின்றன. அதேபோல், அடர் தீவனத்தை, நாங்களே அரைத்து கொடுப்பதுடன், தோட்டத்துக்குள் கரையானையும் உற்பத்தி செய்கிறோம். பெரும்பாலான நோய்களுக்கு பாரம்பரிய நோய் தடுப்பு ஊசி, சொட்டு மருந்துக்கு ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.
நாட்டுக்கோழிகளில், 180 பெட்டை, 20 சேவல்; கருங்கோழிகளில், 31 பெட்டை, ஐந்து சேவல் என, தாய்க்கோழிகள் உள்ளன. இந்த தாய்கோழிகளில் இருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறோம். கருங்கோழி இறைச்சி, முட்டையில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கிறது. கருங்கோழியின் உடல், இறைச்சி, எலும்பு கறுப்பு நிறத்திலும், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்திலும், நாக்கு கருமை கலந்த சாம்பல் நிறத்திலும் இருக்கும்.
ஒரு கருங்கோழி ஆண்டுக்கு, 80 முட்டை இடும். அதில், 60 முட்டை தான், குஞ்சு பொரிக்க தேறும். அதிலும், பொரிப்பானில் வைத்தால், 40 குஞ்சு தான் வளர்ப்புக்கு தேறும். 31 கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 1,240 குஞ்சுகள் கிடைக்கின்றன. ஒரு மாதம் வளர்த்து, ஒரு குஞ்சு, 200 ரூபாய்க்கு விற்பதால், ஆண்டுக்கு, 2.48 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இதேபோல், 180 நாட்டுக் கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு, 7,200 குஞ்சுகள் உற்பத்தி செய்கிறோம். ஒரு நாள் ஆன குஞ்சு, 40 ரூபாய்க்கு விற்றால், ஆண்டுக்கு, 2.88 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதில் அனைத்து செலவும் போக, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 9677101100.
--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:
Post a Comment