Friday, 30 December 2016

வண்ண வண்ண பூக்கள்

வேலை இல்லாத வெட்டியாக இருந்த ஒரு மாத காலம், அப்பொழுதுதான் கையில் நிழற்படக்கருவி 📷 கிடைத்திருந்தது, வேலை இல்லை என்ற ஒரு வருத்தத்தை தவிர வேறு குறைகள் இல்லை. ஊரில் என்னதான் இருக்கிறது என்று சென்று பார்த்தல் வண்ணவண்ணமாக எத்தனை எத்தனை காட்சிகள். வேலை இருந்தால் இதெல்லாம் ரசிக்க ஏது  நேரம் ஒரே ஓட்டம் தான் 🏃🏃🏃🏃. படங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை, அடுத்த முறை சரிசெய்து விடுகிறேன்.
 
கவிஞனின் கற்பனையும் நான் 
ஒளிப்பதிவாளனின் ரசனையும் நான் 
மக்களின் கண்காட்சியும் நான் 
பெண்மையின் ஒப்பீடும் நான்
காதலின் தொடக்கமும் நான் 
திருமண வைபவத்திலும் நான் 
பிறப்பின் ஆரம்பமும் நான் 
இறுதியில் கல்லறையிலும்  நான்
 (http://www.tamilthottam.in/t30737-topic, by  ருக்மணி )



 

Thursday, 24 November 2016

கடவுளை காணவில்லை-குட்டி கதை

    முன்பெல்லாம், அதாவது ஒரு 10 வருடம் முன்பு, மின்னஞ்சல் மற்றும் orkut தானே பொழுதுபோக்கு. அப்போது புதிய  மின்னஞ்சல் அனுப்புவது, பிறந்தநாள் வாழ்த்துகளை மின்னட்டைகளாக அனுப்புவது, பழைய மின்னஞ்சல்களை அழிப்பது, orkutல்  மேய்வதுதான் ஒரே பொழுதுபோக்கு. 

அப்படி ஒரு சமயத்தில் வந்த அழகான ஒரு குட்டி கதை இதோ.

Two little boys, ages 8 and 10, are extremely mischievous. 👦👦
They are always getting into trouble and their parents know all about it. If any mischief occurs in their town, the two boys are probably involved.

                            
The boys' mother heard that a preacher in town had been successful in disciplining children, so she asked if he would speak with her boys.
The preacher agreed, but he asked to see them individually. So the mother sent the 8 year old first, in the morning, with the older boy to see the preacher in the afternoon.👦
The preacher, a huge man with a booming voice, sat the younger boy down and asked him sternly,
"Do you know where God is?” son!
 
The boy's mouth dropped open, but he made no response, sitting there wide-eyed with his mouth hanging open.

So the preacher repeated the question in an even sterner tone, "Where is God?!"

Again, the boy made no attempt to answer. The preacher raised his voice even more and shook his finger in the boy's face and bellowed, "Where is God?!"

The boy screamed and bolted from the room, ran directly home and dove into his closet, slamming the door behind him. When his older brother found him in the closet, he asked, "What happened?"


The younger brother, gasping for breath, replied, "We are in BIG trouble this time.

..........scroll down........ ......... ...



("I really LOVED reading next line again and again")


.............. .......... ......... ..


.............. ......... ......



.............. .........



.............. ....





.............. ........



.............. ....



.........

.........






............... ....



.........



.........



.............. ........



..................



.........                                  

 
!!GOD is missing, and they think we did it!!!!!!!!!! !! 😄😄😄😄😄😄😄😄😄😄😄😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💜💜💜💜💜💜💜💜😊😊😊😊😊😊😊😊😊


Wednesday, 23 November 2016

ப்ளாகர் மாற்றங்கள்

ப்ளாகர் மாற்றங்கள் பற்றி "ப்ளாக்கர் நண்பன்"  தான் முதலில் தெரிவித்திருந்தார். Wordpress ல் எழுதுபவர்கள் தான் இந்த emoji களை பயன்படுத்தி வந்தனர் தற்போது நாமும் பயன்படுத்தலாம் வாங்க.😅🎺🔏🚢🐀쉇👝🍮🛅🚑🚎៶🙂

Emoji:


அதோடில்லாமல் emoji தேடும் வசதி வார்த்தைகளோடு சேர்த்து   வரைந்து தேடுதல் வசதியும் அருமையாக உள்ளது. Search by Keyword or Codepoint.  அதாவது இந்த 😊😊 smiling  face  தேர்ந்தெடுக்க "Insert  Special  Characters " சென்று


**** smiling  face என்றும் தட்டச்சு செய்து தேடலாம்
****  வலது பக்கம் படம் வரைந்தும் தேடலாம் 

 

முதல் பக்கம்:


பிளாக்கரின் உள் நுழைந்த உடனே வரும் பக்கமும் கீழ் கண்ட வாறு மாற்றப்பட்டுள்ளது.

 (http://www.bloggernanban.com/2016/11/blogger-new-design.html)

வெளியேறுதல் :


இப்போது ப்ளாகர் எழுதும் தளத்திலிருந்து வெளியேறினால் (signout)  ப்ளாகர் முதல் பக்கம் வருவதில்லை மாறாக signout பக்கத்திலேயே நிற்கிறது.


👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
HAPPY BLOGING 




Monday, 24 October 2016

ஒன்றா? இரண்டா? தேர்ந்தெடுங்கள்......

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இரண்டு கஷ்டங்களில் ஒன்றை அனுபவித்தே ஆக வேண்டும்.

1) ஒன்று நல்ல விளைவுகளுக்கான முறையான, ஒரு காலந்தவராத தொடர் உழைப்பு.

2) சோம்பலும் ஒழுங்கில்லாத கட்டுப்பாடில்லாத வாழ்க்கை மூலம் பிற்காலத்தில் பெறும் கஷ்டங்கள்.

இந்த இரண்டில் முதலாவது கஷ்டம் சிறியது. இரண்டாவது கஷ்டமோ பல மடங்கு கொடியது. சுருங்க சொல்வதானால் கஷ்ட்டப்பட்டு முன்னேறுவது  அல்லது பின்னேறி கஷ்ட்டப்பட்டுக்கொண்டே இருப்பது. இது பணத்திற்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல சுக வாழ்வு, பழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் பொருந்த கூடியது.

(தனி) ஒருவன்:

ஒரு நல்ல நிலையை எட்டும் வரை இளமையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதும், சோம்பலில்லாமல் புத்திசாலித்தனமாக உழைப்பதும் கஷ்டம் தான். 

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியத்திற்கான உணவுக்கட்டுப்பாடும் கஷ்டம் தான். உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதும், நாக்கு ருசியைக் கட்டுப்படுத்துவதும் சுகமான  விஷயமில்லை தான். 
ஆனால் அப்படி ஒருவன் கட்டுப்பாடாக வாழ்ந்து, கடும் உழைப்பு உழைத்துக் கொண்டிருக்கிறான். 

மற்றொருவன்:
 
மற்றொருவன் சோம்பி இருந்தும், கேளிக்கைகளிலும், வீண் பேச்சிலும், சுற்றித்திரிதலிலும் கழித்துக் கொண்டிருக்கிறான்,
கட்டுப்பாடின்றி ருசிக்கு சாப்பிட்டு செருக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மற்றொருவன்

வேறுபாடு:
 
பத்து வருடங்கள் சென்ற பின் அவர்கள் இருவர் நிலையையும் பார்த்தால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, நன்றாக உழைத்த ஒருவன் உயர்ந்த நிலைக்குப் போயிருப்பதையும், மற்றொருவன் வாழ்க்கையில் சொல்லும்படியான நிலையை எட்டாமல் அன்றாட வாழ்க்கையே பிரச்னைக்குரியதாய் கஷ்டப்படுவதையும் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் வயோதிகம் கொடுமையான காலக்கட்டமாகி விடும். முதலாமவன் நல்ல ஆரோக்கியத்தோடு பல சந்தோஷங்களை இழக்காமல் வாழும் போது, இரண்டாமவன் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்து உடல் உபாதைகளால் தினமும் கஷ்டப்படுவதை நாம் காணலாம்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு. “சோகமான வார்த்தைகளிலேயே உச்சக்கட்ட சோகமான வார்த்தை ‘அப்படி இருந்திருக்கலாம்என்று காலங்கழிந்து சொல்வது தான்”.   

எப்படி வாழ விருப்பம் (தனி) ஒருவனாகவா அல்லது மற்றொருவனாகவா நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இணையதள வசதி இருக்கு, கணிப்பொறி இருக்கு, கைக்கு கீழ்  விசைப்பலகை, சுட்டி(Mouse) இருக்கு அப்படினு கைக்கு வந்ததை எழுதிவிட்டேன். இனி தனியொருவனாக மாறப்போகிறேன் ......இல்லை இல்லை தனி ஒருவனாக மாறலாம் வாங்க.


மூலம் :

சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவு இது, என்.கணேசன் அவர்களின் தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிவிட்டுள்ளேன். 
இதில் எந்தக் கஷ்டம் வேண்டும்? தீர்மானியுங்கள்!  

முதன் முதலில் 2012ல் என் நண்பன் செந்திலின் மூலமாக "மஹாசக்தி மனிதர்கள்" என்ற இவரின் பதிவு எனக்கு அறிமுகமானது. அதன் பிறகு இவருடைய எழுத்திற்கு வாசகனாகிவிட்டேன். சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் கதைகள் கொண்ட மிகவும் பயனுள்ள ஒரு தளம் இது
என்.கணேசன் 

  

Thursday, 6 October 2016

உடல் உஷ்ணம் மற்றும் உடல் கட்டிகளுக்கு எளிய மருந்து:

வா மணிகண்டன் அவர்கள் தளத்தில்  படித்த பிடித்த செய்தியை இங்கே தருகிறேன் (சித்த மருத்துவக் குறிப்புகள்)

உடல் உஷ்ணம்:

** சிறுநீர்த் தொற்று இருந்தால் (சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால்) லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். 

** சிறுநீர் தொற்று இல்லாமல் சிறுநீர் போகும்போது   எரிச்சல் இருந்தால் உடற்சூடுதான் முக்கிய காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டை தணிக்க இது நல்ல வழி.

** கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களுடன் குறுமிளகு 6 சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால் கட்டைவிரல்களிலும் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும். 
  
சுரப்பிகள் வீக்கம் (அ) கட்டி:

** பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு மட்டுமில்லாமல் உடலில் எந்தப் பகுதியில் inflammation என்றாலும் அதன் காரணமாக உண்டாகக் கூடிய கட்டிக்கு கழற்சி காய் (நாட்டு மருந்துக் கடைகளிலேயே கிடைக்கும்) பயன் தரக் கூடியது. கழற்சி காயுடன்  ஐந்து குருமிளகு சேர்த்து காலையில் ஒரு காயும் மாலையில் ஒரு காயும் உண்டு வந்தால் எந்தவிதமான கட்டிக்கும் நல்ல பலனளிக்கும்.



** இதே அளவிற்கு பலன் தரக் கூடியது நித்யகல்யாணி பூ. காசரளி என்றும் பெயர் உண்டு. உடலில் கட்டி வந்தவர்கள் (கேன்சர் கட்டி உட்பட) பத்து பூக்களைப் பறித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை டம்ளராக சுண்டியவுடன் தினமும் ஒருவேளை குடித்து வந்தால் வித்தியாசத்தை உணரலாம். கொதிக்கும் போது பூவின் ஊதா நிறமானது வெண்மையாக மாறும். இந்தப் பூவையும் உடலில் எந்தப் பாகத்தில் கட்டி வந்தாலும் முயற்சிக்கலாம். 





கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...