Saturday, 2 July 2016

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்

மழை நீர் பொறியாளர் வரதராஜன்: 


தமிழக பொதுப்பணித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழு நேரமாக மழை நீர் சேகரிப்பு ஆராய்ச்சியிலும், விருப்பமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் செய்து தருவதிலும் ஈடுபட்டுள்ளார். திருவாரூரில் வசிக்கும் இவர் மழை நீர் சேகரிப்பு பரிசோதனைகளுக்காக,  தனது வீ ட்டையே பரிசோதனை கூடமாக மாற்றி உள்ளார். மழை நீரை எப்படி சேகரிக்க முடியும், ஏன் சேகரிக்க வேண்டும், எப்படி பாதுகாத்து வைப்பது, என்னென்ன நன்மைகள் என்பது பற்றி விரிவாக கூறுகிறார். 
"பூமியிலிருந்து நீர் எடுப்பதல்ல, பூமிக்கு நீர் கொடுப்பதே எங்கள் நோக்கம்"
உந்து சக்தி: நீரில் கரைந்துள்ள கனிமங்களை (Total Dissolved Solids (TDS)) பொருத்து நீரின் தன்மை அளவிடப்படும், சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடிநீரின் தரம் 120 வது இடத்தில் உள்ளது. அதாவது குடிப்பதற்கு உகந்த நீரில் உள்ள அளவை விட பன்மடங்கு கனிமங்கள் நீரில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. பணியில் இருந்தபோது திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிணற்று நீரின் TDS தன்மையை ஆராய்வதுதான் இவரது வேலை, அனைத்து இடங்களிலும் நீரில் TDS அளவு வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே இருந்திருக்கிறது. 

இதற்கு தீர்வென்ன என்று தேடியபோது கிடைத்ததுதான் மழைநீர் சேகரிப்பு யோசனை. இவரது முக்கிய நோக்கமே நிலத்தடி நீரை தூய்மையாக்குவதுதான், அதாவது சேகரித்தது போக மீதமுள்ள மழை  நீரை நிலத்திற்கு கொடுப்பது, மழைநீர் சேகரிப்பால் மக்களும் பயனடைவர் நிலத்தடிநீரும் தூய்மையாகும். 8 வருடங்கள் முன் பிடித்த மழை நீரை இன்றும் பயன்படுத்தி வருகிறார். 

மழை நீர் சேகரிப்பால் பூமியை காப்பாற்றும் முயற்சியில் சேவை மனப்பான்மையுடன் 70 வயதிலும் முயற்சிக்கும் இளைஞன். எங்கள் வீட்டிலும் மழை நீரை குடிக்க பயன்படுத்தி வருகிறோம், குடிக்க அருமையாக இருப்பதோடு தாகமும் உடனே அடங்கிவிடுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.


Malaineer Er. K. Varadarajan,7, G.D. Nagar,Thiruvarur - 610 001

Phone : 04366 222675, Mobile : 9443152675
Email : malaineer@yahoo.co.in
Web : www.malaineer.in

 (http://www.iconhomz.com/rainwater-harvesting-why-you-need-it-and-how-it-is-done/)



3 comments:

  1. வாடகை வீட்டில் இருக்கிறே ன்.குடிநீருக்காக சே மிக்கலாமா?

    ReplyDelete
  2. G.D நகர் எங்கே இருக்கிறது.?

    ReplyDelete
  3. தாராளமாக நீங்கள் சேமிக்கலாம், ஐயாவை தொடர்பு கொண்டீர்கள் என்றால் நிச்சயம் உதவுவார். G D நகர்பற்றி எனக்கு பரிச்சயம் இல்லை அருணாச்சலம் அவர்களே.

    ReplyDelete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...