Friday 8 September 2017

மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 1

"நாங்கல்லாம் பாத்தா பிடிக்கிற பசங்க இல்ல பாக்க பாக்க பிடிக்கிற பசங்க" என்ற படிக்காதவன் தனுஷ் வசனம் போல் இல்லாமல், முதல் முறை கேட்டஉடனேயே பசக் என்று மனதில் ஒட்டிக் கொண்ட இசை, எப்போது எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் / இசை இங்கு பட்டியலில்.

1) சைனீஸ் பாடல்:

சின்ன குழந்தை வாயில் சாப்பாட்டை வைத்து  கொண்டு  பேசுவதை போலவும், பிறர் பேசுவதை பார்த்து "சங் ஹொங் ஹொங் யாங் ஹொனிங் ஆஆஆஆ" என்று பேச முயற்சிப்பதை  போலவும் பாடல் புரியாத பாஷையில் இருந்தாலும் கேட்க இதமாக இருக்கும்.  இயற்கையை பற்றிய பாடல் என்று நினைக்கிறேன், பட காட்சிகளும் குரலும் அருமை.




 2) மேற்கத்திய இசை:

 Backstreet boys மற்றும் Adele அவர்களின் இந்த பாடல்கள் என்று கேட்டாலும் திகட்டாதவை.




3) The Piano Guys இசை:

Adele அவர்களின் Rolling in The Deep பாடலே பியானோ guys இவர்களின் இசையை கேட்ட பிறகுதான் தெரியவந்தது. Cello மற்றும் Pianoவில் பல்வேறு இயற்கையான சூழல்களில்  இவர்கள் வாசிக்கும் அழகே தனி. பாடலை வரிகளின்றி இசை வடிவில் கேட்பது பாடலின் இன்னொரு கோணத்தை காட்டுவது போல் உள்ளது.



4) பஞ்சரத்ன கீர்த்தனை:

பஞ்சரத்ன கீர்த்தனையில் அனைத்துமே பிடிக்கும் என்றாலும் முதலில் அதை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமூட்டிய பாடல் என்றால் அது "எந்தரோ மஹானுபாவுலு"  பாடல் தான். மோகன்லாலின் தேவதூதன் என்ற படத்தில் வரும் இந்த பாடல் இதோ.



5) தமிழ்ப் பாடல்:

ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் ஆரம்பமாகும் ஆஆஆ ஆஆஆ  அந்த வரிகளை கேட்ட மாத்திரத்தில் இந்த பாடலில் கரைந்து விடாதவர்களும் உண்டோ. மற்றொன்று சேதுபதி படத்தில் வரும் "கொஞ்சி பேசிட வேணா" பாடல். இதிலும் துவக்கத்தில் வரும் அந்த இசை இருக்கே simply superb, அப்படியே பாடலினுள்  இழுத்துச் சென்றுவிடும்.


 

6) Aashiqui 2 பாடல்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிந்தியில் பிடித்த பாடல். அனைத்து பாடல்களும் பிடிக்கும் என்றாலும் இந்த பாடல்தான் சிறப்பு. நடிப்பு மற்றும் பாடல் என ஒரு கலக்கு கலக்கிய படம்.




2 comments:

  1. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட பாட்டு எப்பயும் மை ஃபேவரிட்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி ராஜி அவர்களே. இந்த பாடலுக்கு பிறகுதான் ஸ்வர்ணலதா அவர்களின் பாடல்களின் மீது விருப்பம் தோன்றியது.

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...